16/06/2026
⚠️ நாகர்கோவில் ஒழுகினசேரி போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால், நாளை (17.06.2026) முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மாற்றுப் பாதை விவரங்கள்:
🔄 நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள்: நாகர்கோவிலில் (வடசேரி) இருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் ஒழுகினசேரி பழைய பாலம் வழியாகவே வழக்கம்போல் செல்லலாம் (ஒருவழிப் பாதை / One Way).
🚌 நெல்லையிலிருந்து வரும் வாகனங்கள்: திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்க்கெட் (APTA Market) முன்பு இடதுபுறம் திரும்பி, புத்தேரி வழியாக அசம்பு ரோடு (Asambu Road) வந்து வடசேரியை அடைய வேண்டும்.
(குறிப்பு: இந்தத் தற்காலிக ஏற்பாடு அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது).