MaaMaduraiyar

  • Home
  • MaaMaduraiyar

MaaMaduraiyar மாமதுரையர் அமைப்பு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ , விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் வளர்ச்சிக்கானது.

கடந்த செவ்வாய் கிழமை (24-6-2025) நடைபெற்ற *மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல்* மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு கருத்தரங்கதிற்கு ...
26/06/2025

கடந்த செவ்வாய் கிழமை (24-6-2025) நடைபெற்ற *மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல்* மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு கருத்தரங்கதிற்கு முன் உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட உறுதிமொழி.

ாமதுரையர் உறுதிமொழிமாமதுரையர் அமைப்பில் . . . . . நானும் முக்கிய ...

கடந்த செவ்வாய் கிழமை (24-6-2025) *மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல் & ஏற்றுமதி வணிக வாய்ப்பு கருத்தரங்கம்* மிகச்சிறப்பாக ...
26/06/2025

கடந்த செவ்வாய் கிழமை (24-6-2025) *மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல் & ஏற்றுமதி வணிக வாய்ப்பு கருத்தரங்கம்* மிகச்சிறப்பாக நடந்தேறியது. இதில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு ஜி ராஜமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், நிறுவனர் ஜே கே முத்து வரவேற்புரை ஆற்றினார், அகில உலக தலைவர் திரு ஜி திருமுருகன் பொதுச் செயலாளர் ஏ சம்பத்குமார், துணைத் தலைவர்கள் டெம்பிள் சிட்டி குமார், பாரத் பழனிவேல், மணிவண்ணன், உட்பட உயர்மட்ட ஆலோசகர்கள் பெரிஸ் மகேந்திர வேல் மற்றும் தபோவன் தீனதயாளன் போன்றோர் கலந்து கொண்டு மாமதுரையர் விருது, மாமதுரையர் உதவி எண், மாமதுரையர் மகளிர் மன்றங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தினர் நிறைவாக பொதுச் செயலாளர் ஏ சம்பத் குமார் நன்றி கூறினார்.

வரும் 24-6-2025 செவ்வாய் அன்று 4:30 க்கு துவங்கி இரவு விருந்துடன் நிறைவு பெரும் மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல் மற்றும்...
20/06/2025

வரும் 24-6-2025 செவ்வாய் அன்று 4:30 க்கு துவங்கி இரவு விருந்துடன் நிறைவு பெரும் மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல் மற்றும் *தொழில் வணிகம் & ஏற்றுமதி வாய்ப்பு* கருத்தரங்கம். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: ஜான்ஸ் ஹோட்டல் (John's Hotel), மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை - 625007.

நாள்: 24 ஜூன் 2025, செவ்வாய்.
நேரம்: மாலை 4:30 மணிக்கு
இடம்: ஜான்ஸ் ஹோட்டல் (John's Hotel), மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை - 625007.
ஹால்: ஜோஸ் மீட்டிங் ஹால் (6 வது மாடி)
#மாமதுரையர்

மாமதுரையர் அமைப்பு மூலம் *“இல்லம்தோறும் தொழில்”* திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது, இதன் மூலம் சுய வேலைவாய்ப்பு, சிற...
19/06/2025

மாமதுரையர் அமைப்பு மூலம் *“இல்லம்தோறும் தொழில்”* திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது, இதன் மூலம் சுய வேலைவாய்ப்பு, சிறு குறு வணிகம், சுய தொழில் மற்றும் புதுமைத்தொழில்கள் மூலம் *"ஸ்மார்ட் ஒனர்"* கள் உருவாக்கப்படுவார்கள். இந்த திட்டம் மாமதுரை பகுதிகளில் பல்வேறு *"மாமதுரையர் மன்றங்கள்"* மூலம் முதன்மை செயல்பாடாக முன்னெடுக்கப்படும்.
https://www.maamaduraiyar.com/

17/05/2025

மாமதுரையர் | Explain About MaaMaduraiyar

மாமதுரையர்: நோக்கம் : சுற்றுலா மேம்பாடு மற்றும் உறுப்பினர் முன்னேற்றத்தை உள்ளடக்கிய மாமதுரையின் வளர்ச்சி.
எது மாமதுரை ? மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்.

 #மாமதுரையர்
01/05/2025

#மாமதுரையர்

நேற்று மாலை (செவ்வாய் - 15-4-2025) “மாமதுரையர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்” மதுரை ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. நி...
16/04/2025

நேற்று மாலை (செவ்வாய் - 15-4-2025) “மாமதுரையர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்” மதுரை ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. நிறுவனர் ஜே.கே. முத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில உலகத் தலைவராக முனைவர் க. திருமுருகன், பொதுச் செயலாளராக அ. சம்பத்குமார், துணைத் தலைவர்களாக, முனைவர் மணிவண்ணன், டெம்பிள் சிட்டி குமார், பழனிவேல், ரவிசங்கர், இணைச் செயலாளசர்களாக PS. கார்த்திகேயன் மற்றும் ஜெயகுமார், உயர்மட்ட ஆலோசகர்களாக பெரீஸ் மகேந்திரவேல் மற்றும் தபோவன் தீனதயாளன் ஆகியோர் ஒருமனமாக தேர்ந்தெடுக்கப்பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஏற்புரை வழங்கி ஆலோசனை கருத்துக்களை பகிர்ந்தனர். பொதுச் செயலாளர் அ. சம்பத்குமார் நன்றி கூறினார்.
#மாமதுரையர்

முன்னதாக அகில உலக தலைவர் முனைவர் க. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(1) மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற, தமிழ்நாட்டுக்கு அல்ல ? இந்தியாவுக்கே ! ஆம் மேல் ஓரத்தில் இருக்கும் டெல்லிக்கு அடுத்து நம் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

(2) முடங்கும் நிலையில் உள்ள பல்வேறு பாரம்பரிய தொழில்களை புனரமைக்க கூட்டுதொழில் அடிப்படையில் 100 ஏக்கரில் "மாமதுரையர் கிளஸ்டர் பார்க்" அமைக்கப்படும், இதற்கான நிலம் ஒதுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.

(3) பல்வேறு நாட்டு நகரங்களுடன் மதுரையை சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.

(4) இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் "5 ஆம் தமிழ்ச்சங்கம்" செயல்படுத்தப்படும்.

(5) அரசு, வங்கி மற்றும் பொது அலுவலக பரிவர்த்தனைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை தமிழ் மொழியில் நடைபெறுவதை உறுதிசெய்தல் மற்றும் ஊக்குவித்தல்.

(6) "ஆளுக்கு ஒரு IP" முன்னெடுப்பு மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகள் செய்ய ஒருங்கிணைந்த "RESEARCH & INCUBATOR" அமைக்க முயற்ச்க்கப்படும்.

(7) சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியமான “மதுரை – தேனி – தேக்கடி – இராமேஸ்வரம்” வழித்தடத்தை மேம்படுத்தி விரைவு படுத்த வேண்டும்.

(8) மதுரை – தூத்துக்குடி தொழில்துறை வழித்தடம் (MTIC) விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.

(9) அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

(10) மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

நண்பர்களே ! மாமதுரையில் ஒரு புதிய முன்னெடுப்பு தம்பி "சோஷியல் ஸ்டார்" நடிகர் விஜய் விஸ்வா வின் VV ENTERTAINMENTS வழங்கும...
22/11/2024

நண்பர்களே ! மாமதுரையில் ஒரு புதிய முன்னெடுப்பு தம்பி "சோஷியல் ஸ்டார்" நடிகர் விஜய் விஸ்வா வின் VV ENTERTAINMENTS வழங்கும் "NAMMA ஊரு VIBES" பதிவு செய்து பங்கேருங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள் 👍

https://www.theticket9.com/event/namma-ooru-vibes

*நவம்பர் 23 - மதுரையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை மற்றும் நடன நிகழ்ச்சி*

மதுரையில் முதல் முறையாக போதைக்கெதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வை மையப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி வருகிற நவம்பர் 23ம்தேதி அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. நடிகர் விஜய் விஷ்வாவின் விவி எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இன்றைய வேகமான உலகில், மன அழுத்தம் அன்றாட வாழ்வில் ஒரு பொதுவான அங்கமாகிவிட்டது. வேலை, தனிப்பட்ட சவால்கள் அல்லது வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டாலும், மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன நலனை பாதிக்கிறது. ஆனால் மன அழுத்தத்தைச் சமாளிப்பது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் திறம்படமாகவும் குறைக்க ஒரு வழி இருந்தால் என்ன செய்வது?

மன அழுத்தத்திற்கு அருமருந்தாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளா நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை மாநகரில் நம்ம ஊரு வைப்ஸ் என்ற பெயரில் நடைபெற உள்ளது. வருகிற 23ம்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் 9 மணி வரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த கோலாகல கொண்டாட்டத்தில் லைவ் மியூசிக், நடனம், தாரை தப்பட்டை, தூள், செண்டமேளம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளது. அதோடு இரவு உணவை உண்டு மகிழ புட் கோர்ட்டும் உள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழவும், மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கவும் இந்த நிகழ்ச்சி உதவும்.

நம்ம ஊரு வைப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ.299 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக ரூ.199 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடிப் பாடி மகிழ ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தம்பதியாக, ஜோடியாக வருபவர்களுக்கு ரூ.799 கட்டணம் ஆகும். டிக்கெட்டுகளை https://www.theticket9.com/event/namma-ooru-vibes என்ற தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்து விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனர் நடிகர் விஜய் விஷ்வா கூறுகையில், பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் தாளங்கள், மெல்லிசைகள் மற்றும் அசைவுகள் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த கலை வடிவங்கள் பல நூற்றாண்டுகளாக பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் உணர்ச்சி சிகிச்சைக்காகவும் உருவாகியுள்ளன. கிளாசிக்கல் நடன நிகழ்ச்சியின் மென்மையான ஊசலாடினாலும் அல்லது நாட்டுப்புற இசைக் குழுவின் தீவிரமான தாளத்தின் மூலமாகவோ, பாரம்பரிய இசை மற்றும் நடனம் தளர்வை ஊக்குவிக்கும், பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் சமநிலையை மீட்டெடுக்கும் நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம், நேரடி, பாரம்பரிய நிகழ்ச்சிகள் எவ்வாறு மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மனநிலையை அதிகரிக்கலாம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை பங்கேற்பாளர்கள் நேரடியாக அனுபவிப்பார்கள். பாரம்பரிய நேரடி இசையும் நடனமும் ஒன்றிணைந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு குணப்படுத்தும் இடத்தை உருவாக்கும் மறக்க முடியாத அனுபவத்திற்கு எங்களுடன் சேருங்கள். துடிப்பான, ஆத்மார்த்தமான நிகழ்ச்சிகள் மூலம், உணர்வுபூர்வமான வெளியீடு மற்றும் தளர்வு பயணத்தில் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம். மனதையும், உடலையும், ஆன்மாவையும் குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் இசை மற்றும் நடனத்தின் மாற்றும் சக்தியை அனுபவிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள், என்றார்.

14/11/2024

*மாமதுரையர் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்:*

1) மாமதுரையர் அமைப்பு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி & உறுப்பினர் குடும்ப மேம்பாடு இரண்டையும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும்.
2) உலகெங்கும் வாழும் மாமதுரை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளை பெற்று பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
3) தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு நமது அமைப்பு செயல்படும்.
4) போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.
5) சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக மாமதுரை பகுதியை அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.
6) உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.
7) ஏற்கனவே மாமதுரை பகுதிகளுக்கு, ஓரிரு குறிப்பிட்ட தலங்களுக்கு மட்டுமே வரும் சுற்றுலாவாசிகளை இதர செயல்பாட்டில் உள்ள தலங்களுக்கும் வரச்செய்தல். இதன் மூலம் ஓரிரு நாள் செலவிடும் சுற்றுலா வாசிகளை மேலும் சில நாட்கள் செலவிட முயற்சிக்கப்படும்.
8) மாமதுரை பகுதிகளில் மறக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத வரலாற்று இடங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நம் பெருமையை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.
9) தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
10) முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.
11) மதுரையை பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.
12) தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்களை உருவாக்க முயற்சிக்கப்படும்.
13) முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.
14) டிஜிட்ஆல் அமைப்புடன் இணைந்து நடைபாதை மற்றும் குறு வியாபாரிகளுக்கான டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

*நிர்வாகம் & நிதி மேலாண்மை:*
1) மாமதுரையர் அமைப்பில் (1) வழிகாட்டு குழு - GBM (2) ஆலோசனைக்குழு - ABM (3) செயற்குழு - ECM (4) பொதுக்குழு - MEMBERS என நான்கு குழுக்கள் செயல்படும்.
2) பகுதி வாரியாகவும், கமிட்டி வாரியாகவும், செயற்குழுவில் இருந்து ஒருங்கிணைப்பாளர்கள் (CONVENER), இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
3) அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு உறுப்பினர் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்படும்.

*உறுப்பினர் பயன்கள் & சந்தா:*
1) மாமதுரையர் உறுப்பினர் சந்தா காலண்டர் ஆண்டாக இருக்கும் (ஜனவரி முதல் டிசம்பர் வரை)
2) உறுப்பினர் என்பது குடும்ப உறுப்பினர்கள் (4 வரை ) அடங்கும். தகுந்த கூட்டங்களில் குடும்ப உறுப்பினர் எவரேனும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
3) மாமதுரையர் உறுப்பினர்கள் பங்குபெறும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் விழாவுடன் இணைந்த ஆண்டுவிழா, மார்ச் மாதத்தில் மகளிர் தின விழா, மே மாதத்தில் சித்திரை விழா போன்றவை நடத்தப்படும்.
4) மாமதுரையர் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
5) டெட்கோ அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் "இல்லம் தோறும் தொழில்" திட்டத்தில் பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
6) அரசாங்கத்தின் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் சலுகைகள் சம்பந்தமாக நடத்தப்படும் விழிப்புணர்வு கூட்டங்களில் மாமதுரையர் உறுப்பினர் குடும்பத்தில் ஏதுவானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
7) உறுப்பினர் வருட சந்தா ரூ. 500/-

நன்றி.
ஜே.கே. முத்து.
நிறுவனர், மாமதுரையர்.

28/10/2024

மதுரையில் "2 ஆம் தலைமை செயலகம்" தா.வே.க திரு. விஜய் அவர்களை "மாமதுரையர்" அமைப்பு வரவேற்கிறது 🙏 வாழ்த்துகிறது.

18/10/2024

*மாமதுரையர் அமைப்பு*
1) மாமதுரையர் அமைப்பு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி & உறுப்பினர் குடும்ப மேம்பாடு இரண்டையும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும்.
2) உலகெங்கும் வாழும் மாமதுரை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளை பெற்று பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
3) தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு நமது அமைப்பு செயல்படும்.
4) போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.
5) சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக மாமதுரை பகுதியை அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.
6) உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.
7) ஏற்கனவே மாமதுரை பகுதிகளுக்கு, ஓரிரு குறிப்பிட்ட தலங்களுக்கு மட்டுமே வரும் சுற்றுலாவாசிகளை இதர செயல்பாட்டில் உள்ள தலங்களுக்கும் வரச்செய்தல். இதன் மூலம் ஓரிரு நாள் செலவிடும் சுற்றுலா வாசிகளை மேலும் சில நாட்கள் செலவிட முயற்சிக்கப்படும்.
8) மாமதுரை பகுதிகளில் மறக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத வரலாற்று இடங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நம் பெருமையை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.
9) தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
10) முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.
11) மதுரையை பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.
12) தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்களை உருவாக்க முயற்சிக்கப்படும்.
13) அரசாங்கத்தின் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் சலுகைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும்.
14) அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு உறுப்பினர் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்படும்.
15) மாமதுரையர் அமைப்பில் (1) வழிகாட்டு குழு - GBM (2) ஆலோசனைக்குழு - ABM (3) செயற்குழு - ECM (4) பொதுக்குழு - Members என நான்கு குழுக்கள் செயல்படும்.
16) பகுதி வாரியாகவும், கமிட்டி வாரியாகவும், செயற்குழுவில் இருந்து CONVENER கள் நியமிக்கப்படுவார்கள்.
17) மாமதுரையர் உறுப்பினர்கள் பங்குபெறும் வகையில் 3 மாதத்திற்கு ஒரு முறை, ஜனவரி (பொங்கல் விழா), மார்ச் (பெண்கள் விழா), மே (சித்திரை விழா), நவம்பர் (ஆண்டு விழா) போன்றவை நடத்தப்படும்.
18) மாமதுரையர் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
19) டெட்கோ அமைப்புடன் இணைந்து "இல்லம் தோறும் தொழில்" திட்டத்தை மாமதுரை பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
20) டிஜிட்ஆல் அமைப்புடன் இணைந்து நடைபாதை மற்றும் குறு வியாபாரிகளுக்கான டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

நன்றி.
ஜே.கே. முத்து.
நிறுவனர், மாமதுரையர்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when MaaMaduraiyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share