18/11/2023
இவருடைய பெயர் ஸ்டீபன் பிரபு... தென்காசி மாவட்டம் புளியங்குடி நவாசோலை பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 வருடங்களாக எமது நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். தற்போது குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். எமது நிறுவனத்தில் நீண்ட நாட்களாக பணி புரிந்ததை சாதகமாக்கிக் கொண்டு நான் உட்பட எனது கடையில் வேலை புரியும் ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நபர்களிடம் கடனாக பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார். தற்போது திருப்பூர் பகுதியில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார் என்று தகவல். மேற்கொண்டு யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு பதிவு. நன்றி🙏