Ramaeswaram Travel Agency

Ramaeswaram Travel Agency We provide Pilgrimage Tour,History Trails,Hill Station Tour,Customized Tour Packages

20/08/2026
ஒரு கோவில் - முதல்ல கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் கட்டியிருக்காங்க.அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோ...
19/08/2026

ஒரு கோவில் - முதல்ல கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் கட்டியிருக்காங்க.அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோழர்கள் விளக்கு எரிக்க தானம் கொடுத்திருக்காங்க.அதன் பின் குலோத்துங்க சோழர் தானம் கொடுத்திருக்கிறார்.

அதன் பின்பு ஹொய்சாளர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் சில மண்டபம் கட்டி விரிவு படுத்திருக்காங்க.அதன் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வந்த விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்களும் தங்கள் பங்குக்கு ஆன சில பணிகளை செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலை செய்த கலைஞர்கள் அவர்களால் எவ்வளவு அதிகபட்சம் நேர்த்த்தியும் துல்லியமும் உழைப்பையும் கொட்டமுடியுமோ கொட்டியிருக்கிறார்கள்.

கருவறை முன்பு ஹொய்சாளர்கள் கட்டுமானத்தில் உருவான திருக்கல்யாண மண்டபத்தை கலையார்வம் உள்ள எவரும் கண்டவுடன் கடந்து வந்து விட முடியாது..

ஒவ்வொரு அரசாட்சியும் அதன் கலை வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் ஒரு கோவில். கர்னாடகவின் தலைநகரின் அருகே கல்வெட்டு சான்றுகளோடு இருக்கும் கோவிலை பார்த்து ரசிப்பது ஒரு பரவச அனுபவம்.

அந்த அனுபவத்தை நீங்களும் பெற சிக்பெலபுரா பயணப்படுங்கள்.

#சிக்பெலபுரா - கர்னாடகா
10th Century - Ganga Dynasty
- - India


📍திருவாலீஸ்வரம் – திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு ஊர்.ஏகாந்தம் என்ற சொல்லின் பொருள் உணர பயணிக்கலாம்...
17/08/2026

📍திருவாலீஸ்வரம் – திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு ஊர்.ஏகாந்தம் என்ற சொல்லின் பொருள் உணர பயணிக்கலாம்.கடனா நதிக்கரையில் அடர்ந்த மரங்களும் ,தென்னந்தோப்பும் சூழ அமைந்திருக்கிறது திருவாலீஸ்வரம்.

⭐மிகச்சிறந்த சிவபக்தரான வாலி வழிபட்டதாகக் கூறப்படும் திருத்தலங்கள் தமிழ்நாடு முழுவதும் பல உள்ளன. அவற்றுள் வரலாற்றுச் சிறப்பும், கலைச்சிறப்பும் கொண்ட ஒரு முக்கியமான திருத்தலம் திருவாலீஸ்வரம்.

⭐இத்தலத்தின் இறைவன் திருவாலீஸ்வரர் எனப் போற்றப்படுகிறார். வாலி இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதாகத் தல மரபு கூறுகிறது.
ஆனால் திருவாலீஸ்வரத்தின் பெருமை வாலியோடு மட்டும் நின்றுவிடவில்லை. சோழர் வரலாற்றிலும் இத்தலம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

⭐முதலாம் இராஜராஜ சோழரின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.சிவ பெருமானின் பல்வேறு விதமான வடிவங்கள் விமானம் முழுதும் நிறைந்திருக்க,வட்டெழுத்து கல்வெட்டுக்கள் வரலாற்றை சொல்கின்றன. சோழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் நிர்வாக அமைப்பின் சிறப்பை இக்கோயில் இன்றும் வெளிப்படுத்துகிறது.

⭐இராஜராஜ சோழரின் காலத்தில் புகழ்பெற்ற “மூன்று கை மாசேனை” எனப்படும் படைப்பிரிவினர் இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

⭐திருநெல்வேலி பகுதிக்கு பயணப்பட்டால் திருவாலீஸ்வரமும் உங்கள் பயணத்தில் ஒன்றாக இருக்கட்டும்

#திருவாலீஸ்வரம் #இராஜராஜசோழர் #சோழர்கட்டிடக்கலை #சோழசிற்பங்கள் #சோழர்வரலாறு #சோழர்கோயில்கள்

16/08/2026

📍 உஜ்ஜயினி மகாகாளர்
📍உஜ்ஜயினி மகாகாளி
📍 ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
📍 மகேஸ்வர்
📍 இந்தூர் கோயில்கள்
📅 செப்டம்பர் 21 – 24
🗓️ 4 நாட்கள் / 3 இரவு

💰 *ஒருவருக்கு ₹37,500/- ✅கட்டணத்தில் அடங்குபவை
✈️ விமானப் பயணம்
🥗 சைவ உணவு
🏨 குளிர்சாதன அறை
🚌 குளிர்சாதன ஊர்தி
🛣️ சுங்கவரி
🅿️ நிறுத்தக் கட்டணம்

📍 புறப்படும் இடம்: சென்னை

இராமேஸ்வரம் டிராவல் ஏஜன்சி 30,வியாசர் தெரு,கிழக்கு தாம்பரம், சென்னை – 600059

📞 முன்பதிவுக்கு +91 94884 55115 ,+91 95004 17115 🙏

ஜோதிர்லிங்க தரிசன உஜ்ஜயினி யாத்திரை! இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் நீலநிறத்தில் கடல் விரிந்திருந்தது .அடிவானமும் கடலும் சங்கமிக்குமோ ! என்று ஐயம் கொள்ளுமாறு இரண்டும் ...
16/08/2026

கண்ணுக்கெட்டிய தூரம் நீலநிறத்தில் கடல் விரிந்திருந்தது .அடிவானமும் கடலும் சங்கமிக்குமோ ! என்று ஐயம் கொள்ளுமாறு இரண்டும் ஒன்றை ஒன்று தழுவிக்கிடந்தன .புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டு இந்த காட்சிகளை கண்டு ரசித்த அந்த சக்ரவர்த்திக்கு கர்வம் தலையில் உச்சம் கொண்டது .இவ்வுலகில் எம்மை எதிர்க்கவோ அழிக்கவோ யாருண்டு ?

இப்பூவுலகும் ,வானுலகும் என் அதிகாரத்திற்குள் என்று நெஞ்சம் பூரித்தது .எதேச்சையாக கண்கள் கீழே நோக்க கடற்கரையோரமாக ஒரு வானர வடிவம் தெரிந்தது.

அதன் முன்பு ஒரு சிவலிங்கம் .அடே குரங்கு சிவபூஜை செய்கிறதா ? கர்வம் தலைக்கேறிய மனம் ஏளனமாய் எண்ணியது ? அதனை நோக்கி இறங்கிய அந்த மன்னன் அதனை பரிகாசம் செய்ய எண்ணி அதன் வாலை பிடித்து இழுக்க வால் சுருண்டு உடலை சுற்றிக்கொண்டது
தனது பலம் முழுக்க பிரயோகித்தும் அந்த வாலின் பிடியிலிருந்து விடுபட இயலவில்லை .தான் கற்ற வித்தைகள் அனைத்தும் பயனற்று போனதாய் உணரும்படியாக சுத்தமாக முடங்கி கிடந்தார் அந்த மன்னன் .

வாலில் கட்டுண்டு கிடப்பவரை அந்த வானரம் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை .ஒரே தாவல் அங்கிருந்து அடுத்த திசையில் உள்ள சமுத்திரக்கரை ,அடுத்து இன்னொரு திசையில் உள்ள சமுத்திரக்கரை ,என நான்கு திக்குகளிலும் ஈசனை துதித்து எழுந்த பின் அந்த முனகல் கேட்டது .அந்த வானரப்பேரரசன் வாலிக்கு .ஈஸ்வரா ஈஸ்வரா என்ற முனகல் கேட்டதால் திரும்பி பார்த்தார் .

தன் வலிவும் வரமும் பெரிதென்று எண்ணி கர்வத்தால் வளர்ந்த பத்து தலைகள் கொண்ட சகர்வர்த்தி இராவணன் கட்டுண்டு கிடந்தார் .தவறிழைத்ததற்கு மன்னிப்பு கேட்டு விடுவிக்கப்பெற்றார் .இனி ஒரு போதும் தனது பகுதிக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையோடு .

ஒரு இதிகாச சம்பவத்தை காட்சியாக முதலாம் குலோத்துங்க சோழருடைய சிற்பிகளின் கைவண்ணத்தில் காண்பது யாம் பெற்ற பேறு .

#சோழர்கோயில் #இராஜராஜர் l

Address

30, Vyasar Street, East Tambaram, Tambaram
Chennai
600059

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Ramaeswaram Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category