Travel with Baluma

Travel with Baluma Anbea Sivam 🔱📿🙏🏻

08/03/2026

05/03/2026

02/03/2026
08/02/2026

06/02/2026

02/02/2026

09/01/2026

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்த சிவத்தலமாகும். சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கோயிலை பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கிறார்கள். [1][2] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோயில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வல்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் திருக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உகந்தது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியத்திற்கு இத்தலக்கோயிலுக்கு வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.
திருமணதோஷம் உள்ளவர்கள் வில்வ மரத்தடியில் உள்ள புற்றடி விநாயகரை பாலபிசேகம் செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர். தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அம்பாள் பாகம்பிரியாள் விளங்குவதால் இறைவிக்கு மருத்துவச்சி அம்மன் என்ற பெயரும் உண்டு. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகியின் வழி வந்த நாகங்கள் இத்திருத்தலப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கோயிலுக்குள் இருக்கும் புற்றுக்குக் கோழி முட்டையைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் தொடர்கிறது. இது விஷம் முறிக்கும் திருத்தலமாகக் கருத்தப்படுவதால் விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு வாரக் கணக்கில் இங்கே தங்கி இருந்து வழிபாடு நடத்துகிறார்கள்.
இங்கு இருக்கும் குலத்தில் மீன்கள் சாகவரம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் 😍

சிவாய நமமறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இக்கோவிலுக்கு வரமுடியும்” என்ற பெருமை பெற்ற தேப்பெருமாநல்லூர் வேதாந்த நாயகி சமேத வ...
07/01/2026

சிவாய நம
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இக்கோவிலுக்கு வரமுடியும்” என்ற பெருமை பெற்ற தேப்பெருமாநல்லூர் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில்:

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும்.

மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோவிலுக்கு பலமுறை வர முயற்சி செய்தும் சிவனை தரிசிக்க முடியவில்லை என்கிறது தல வரலாறு. இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார்”. அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் அதிசயம் நிறைந்த ஆலயம் இது சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படர்வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப் பட்டுள்ளது.

இந்தக் கோவில் கிழக்கு நோக்கியும், விஸ்வநாதர் (ஸ்ரீ ருத்ராக்ஷேஸ்வரர், நாகவிஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்) கிழக்குப் பார்த்தாலும், கோவிலுக்குள் நுழைவது பின் புறமான மேற்கிலிருந்துதான். நுழைவாயிலில் ராஜகோபுரம் இல்லை, ஒரு சிறிய நுழைவாயில்.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இரு பைரவர்கள் அருள்புரியும் திருத்தலம்
அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
திருக்கோவில் நேரம் காலை 8.00 மணி முதல் 11.30 மணிவரை
மாலை 5.00 மணி முதல் 7.30 மணிவரை

01/01/2026

சிவய நம திருசிற்றம்பலம்🙏🏻 திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகிய...
30/12/2025

சிவய நம திருசிற்றம்பலம்🙏🏻

திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை.

முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர், அரசனுக்குத் தெரியாமல் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். செய்தியறிந்து வெகுண்ட அரசன் அமைச்சரைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அலைவாணர் தனது மரணத்துக்குப் பின் தனது உடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவரது ஆட்கள் அவ்வண்ணமே எடுத்துச் சென்றனர். அமைச்சரின் மனைவி, மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள். அம்மன் அருளால் திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் அவர் உயிர் பெற்று எழுந்தார். இந்நிகழ்வின் காரணமாகவே கோவிலின் சுவாமி பிராணநாதேசுவரர் என்றும் அம்மன் மங்கல பாக்கியமளித்ததால் மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர் என்பது தொன் நம்பிக்கை.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும்.

நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில். தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம். நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 11. 30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 .30 வரை.
கோவில் முகவரி : அருள்மிகு பிராணநாத சுவாமி திருக்கோவில், திருமங்கலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் - 612 102.

திருப்பனந்தாள்இறைவர் திருப்பெயர்:   செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்,     அருணஜடேஸ்வரர்.  இறைவியார் திருப்பெயர்: பிர...
29/12/2025

திருப்பனந்தாள்
இறைவர் திருப்பெயர்: செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர், அருணஜடேஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி. தல மரம்: பனை மரம் (Palm Tree) தீர்த்தம் : பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள். வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், குங்கிலியக்கலய நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்,பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியர், சந்திரன், ஆதிசேஷன், நாககன்னிகை, தாடகை ஆகியோர்.

பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரபேறு வேண்டி இத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த சுவாமியின் திருமுடியைப் பின்னால் குங்குலிய நாயனார் மாற்றினார். தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

இத்தலத்திற்கு தாலவனம் (தாலம் - பனை) என்றும் பெயருண்டு. பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி. சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. பதினாறுகால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள்ளன. இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது.

தண்பொழில் சூழ் பனந்தாள்” என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப நாற்புறங்களிலும் சோலைகள் சூழப் பெற்றது. காவிரியின் கிளை நதியாகிய மண்ணியாறு பாய்வதால் சிறந்த வளம் பெற்று விளங்குகிறது. இவ்வூரைச் சுற்றிலும் பனை மரங்கள் நிறைந்து உள்ளதால் இவ்வூருக்குத் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. திரு+பனை+தாள்= (அழகிய பனை மரத்தின் அடிப்பகுதி.) இவ்வூரில் பனைமரத்தின் கீழே சிவபெருமான் எழுந்தருளியதால் இப்பெயர் பெற்றது. வடமொழியில் தாலவனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. (தாலம் – பமை, வனம் – காடு) இத்தலம் ஏற்பட்ட காலத்தில் இவ்வூர் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தமை புலப்படுகிறது. இத்தலத்திற்குப் பனசை, பனந்தாள் என்ற பெயர்களும் வழங்கி வருகின்றன.

Address

Chennai
600015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Baluma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Baluma:

Share

Category