Oviya Sri Travels

Oviya Sri Travels Best Value For Money
We provide outstanding quality services, safest and the best value trips, so th Travel Company

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
14/01/2020

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

13/11/2019

எங்களது டிராவல்ஸ் நிறுவனத்தில் உள்ள வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள், குறைந்தது ஐந்து வருடங்கள் அனுபவம் உள்ள ஓட்டுனர்கள் தேவை.

Happy Independence Day..!!!
15/08/2019

Happy Independence Day..!!!

உங்களுடைய அனைத்து பயணங்களையும் இனிதாக அமைக்க எங்களை அழைக்கவும்.
29/01/2019

உங்களுடைய அனைத்து பயணங்களையும் இனிதாக அமைக்க எங்களை அழைக்கவும்.

03/11/2018

Celebrate and enjoy the Festival of Lights

09/10/2018
03/02/2018

அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும்,இரவு 11.30 முதல் 1.45 மணி வரை டிக்கெட் கவுன்ட்டர்கள்,இணையதளம் (http://www.sr.indianrailways.gov.in ) செயல்படாது

பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளது- தெற்கு ரயில்வே

Mahabalipuram.Mahabalipuram is a tourist destination situated in Tamil Nadu, which has many beautiful places.It is known...
02/02/2018

Mahabalipuram.

Mahabalipuram is a tourist destination situated in Tamil Nadu, which has many beautiful places.

It is known for its historical monuments, sculptures, scenic beauty, culture and tradition.

Top attractions in Mahabalipuram recommended

1 Mahabalipuram Beach

2 Shore Temple

3 Dakshinachitra

4 Mamallapuram Lighthouse

5 Pancha Rathas

6 Arjuna's Penance

7 Tiger's Cave

8 Krishna's Butterball

9 Sculpture Museum

10 Mahishamardini Cave

Transport options from Chennai to Mahabalipuram

Chennai to Mahabalipuram By Car: Hire a cab from Chennai to Mahabalipuram, which takes around an hour. The cost of cabs ranges from INR15 to INR45 per kilometre, depending upon the type of car. Economical and Ideal for families with kids, seniors and groups.

Welcome to Oviya Sri Travels�
31/01/2018

Welcome to Oviya Sri Travels�

Tamil Nadu Tour Packages.Whether you want to relax by the sea, see amazing architecture, be close to nature or eat spicy...
30/12/2017

Tamil Nadu Tour Packages.

Whether you want to relax by the sea, see amazing architecture, be close to nature or eat spicy food, Tamil Nadu tours are perfect. With us, you can see the incredible temples of Thanjavur, Kanchipuram, Madurai and Rameswaram. To escape the heat of the coast and plains, travel to the hill station of Kodaikanal or f="http://oviyasritravels.com/demo/index.php/ India tour-packages/hill-station-holidays-in-ooty" target="_blank" class="ui-link">Ooty with our Tamil Nadu packages; these places are ideal for a honeymoon as well. For seaside fun, head to Marina, Elliott, Covelong or Auroville Beach. Do not miss out on our guided tour of some of Chennai's most renowned sites like San Thome Basilica, Kapaleeswarar Temple, Fort St George, Government Museum and Thousand Lights Mosque. During your Tamil Nadu holidays, we recommend visiting the Pancha Rathas, Cave Temples, Shore Temple and the Descent of the Ganges bas-relief in Mahabalipuram.

12/12/2017

மதுரை

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம். மதுரையின் மையத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கம்பீரமான கோபுரங்களும் அதைச் சுற்றிச் சுற்றி பிரகாகரமாகவே விரியும் மாடவீதி மாசி வீதி சித்திரை வீதிகளும் கட்டுமான கலை நுட்பத்தில் தழிழர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு காலத்தின் சாட்சியாய் இன்றும் நிலைத்திருக்கும் எழில்நகர். தழிழர்களின் வீரம் எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்துகாட்டிய பாண்டிய மன்னர்களின் தலைநகரம் இதுதான்.

அழகர் கோயில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.

காந்தி அருங்காட்சியகம்

மதுரையில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களில் ராணி மங்கம்மாள் சத்திரமும் ஒன்று. இங்குதான் இந்திய விடுதலைப் போரின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. மகாத்மாகாந்தி பற்றிய புகைப்படக் காட்சியும் தென்னிந்தியக் கைத்தொழில் கதர் மற்றும் கிராமியத் தொழில் பிரிவுக் கண்காட்சிகளும் உள்ளன.

கோச்சடை அய்யனார் கோயில்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் வீற்றிருக்கும்கோச்சடை அய்யனார் மதுரை மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக இந்தக்கோயில் எழுந்து நிற்கிறது.

கூடல் அழகர் கோயில்

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான வைணவக் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

குட்லாம்பட்டி அருவி

மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலைக் குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சிதான். சுந்தரேஸ்வரருடன் மீனாட்சி மணக்கோலத்தில் கொலுவிருக்கும் உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலின் மூலக் கட்டட அமைப்பை குலசேகர பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். பின்பு 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் இதை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். இந்தப் பிரமாண்டமான கோயிலின் 12 கோபுரங்களும் தமிழகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

திருமலை நாயக்கர் அரண்மனை

மதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனை இது. தற்போது எஞ்சி இருப்பதைப்போல 4 மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டது இது. இப்போது இருக்கும் பிரதான மாளிகையில்தான் அந்த மாமன்னன் வாழ்ந்திருக்கிறான. இம்மாளிகையில் இசையும் நாட்டியமும் அன்றாடம் மன்னர் முன்னிலையில் அரங்கேறியுள்ளன. நேரம் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை.

திருப்பரங்குன்றம்

மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று. இதன் உட்புறம், வைரம் பாய்ந்த பாறையில் இருந்து செதுக்கி சீர் செய்யப்பட்டது.

இராஜாஜி பூங்கா

மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய ராஜாஜி பூங்கா. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. குடும்பத்துடன் பொழுது போக்கச் சிறந்த இடம். நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை. நுழைவுக் கட்டணம் 1 ரூபாய். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை.

ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்

மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 கி .மீ தொலைவில் 6 ஆவது நிறுத்தத்தில் திருநகரில் இந்தத் தியான மண்டபம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மிகப்பழமையான தியான மண்டபங்களில் இதுவும் ஒன்று.

திருமோகூர் கோயில்

மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் ஒத்தக்கடையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள விஷ்ணு கோயில் இது. காளமேகப் பெருமாள் செண்பக வள்ளி சுதர்சனா சமேதராய் இங்குக் காட்சியளிக்கிறார்.

திருவாதவூர் கோயில்

மதுரையிலிருந்து 25 கி.மீ. ஒத்தக்கடையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இது. சைவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இந்த ஊரில் சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளி உள்ளனர்.

வண்டியூர் மாரியம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார் மன்னர். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.

அரசு அருங்காட்சியகம்

காந்தி அருங்காட்சியக வளாகத்துக்குள்ளே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது திறந்து வைக்கப்பட்டது.

சித்திரைத் திருவிழா:- தமிழகத்தின் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மனுக்காக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும். சித்திரை மாதம் முதல் நாள் தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

சென்னைஅலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படக...
12/12/2017

சென்னை

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.

Address

Chennai
600097

Alerts

Be the first to know and let us send you an email when Oviya Sri Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oviya Sri Travels:

Share

Category