Udayamarthandapuram

Udayamarthandapuram உதயமார்தண்டாபுரம் , திருவாரூர் மாவட்டம் 614706 The tank remains dry between the months of April and August.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 45 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளடக்கியது,மேட்டூர் அணைய்லிருந்து காவிரியின் துணை ஆறான கோரையாறு வழியாக இந்த சரணாலயத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது..

சரணாலயத்தில் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடையே நீர் வற்றி விடுகிறது இந்த காலகட்டங்களில் இங்கு பறவைகளை காண இயலாது ஆனால் எழில் கொஞ்சும் காடுளை காணலாம்..

அது தவிர்த்த மற்ற மாதங்களில் பறவைகளை கண்டு களிக்கலாம்...

இங்கு வரும் பறவைகளில் சில..
ஊதா moorhen,openbill storks,வெள்ளை ஐபிஸ், இந்திய பாறைகள் ஹெரான், வெள்ளை கழுத்து நாரை, சாம்பல்-ஹெரான், coot, இரவு ஹெரான், ஊதா ஹெரான், சிறிய நீர்க்காக்கை, spoonbill,darter,pelican,etc...

உதயமார்த்தாண்டபுரம் சரணாயத்திற்கு சீசன் காலங்களில் லட்சக்கணக்கில் பறவைகள் வருவது இங்கே குறிப்பிடதக்கது...


The Udayamarthandapuram Bird Sanctuary covers an area of around 45 sq km and is fed by an irrigation tank that receives water from the Mettur Dam. During the months of February and March, purple-moorhen and openbill storks can be seen here. Other migratory birds in the sanctuary include the white-ibis, Indian reef heron, white-necked stork,pelican, grey-heron, coot, night heron, purple-heron, little cormorant, spoonbill and darter. From September through December, the bird population inhabiting the sanctuary rises to around 100,000 birds. The ideal season to visit this sanctuary is during the months of November and December.

காணவில்லை..உதயை-நாச்சிக்குளத்தில் இருந்து தோலி செல்லும் ரோட்டில் காளியம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த வாய்க்காலை காணவில்...
03/07/2023

காணவில்லை..

உதயை-நாச்சிக்குளத்தில் இருந்து தோலி செல்லும் ரோட்டில் காளியம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த வாய்க்காலை காணவில்லை.. யாரேனும் கண்டுபிடித்து தரும் படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்..

கிரிக்கெட் போட்டி..
02/07/2023

கிரிக்கெட் போட்டி..

https://youtu.be/tlOGHHFc16o
24/04/2023

https://youtu.be/tlOGHHFc16o

நமது ஊர் உதயமார்த்தாண்டபுரம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

06/08/2022

*இராம்சார் ஒப்பந்தத்தில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்*

வணக்கம்

திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அண்மையில் ராம் சார் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்தோம்.

உலகில் உள்ள ஈர நிலங்கள் அதாவது சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவற்றின் தன்மை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பன்னாட்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையின் உதவியுடன் ராம் சார் என்ற நகரில் பன்னாட்டு ஈர நில ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள் .

1975 ஆம் ஆண்டு முதல் இந்த செயல்பாடுகள் உலக நாடுகள் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் இப்போது இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு ள்ளது கண்டு பெருமை அடைகிறோம்.

இந்த சரணாலயம் அமைந்தவிதம் பற்றி சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்

உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் 111ஏக்கர் பரப்பளவில் *பெரிய ஏரி* என்ற பாசன ஏரி இருக்கிறது.

இந்த ஏரி உதயமார்த்தாண்டபுரம் பகுதிகளுக்கு விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

19 89 ஆம் ஆண்டு ஏரிகளின் நடுவில் சமூக நல காடுகள் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட நீர்க்கருவேல மரங்களில் முதன்முறையாக ஏராளமான உள் நாட்டு வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி வாழ்ந்து வந்தன .

41வகையான பறவைகள் சுமார் 35000 அளவில் வருகைபுரிந்தன.

இவற்றில் நத்தைக்கொத்தி நாரைகள் அதிக அளவில் இருந்தன.

இந்த பறவைகளை முத்துப்பேட்டை பகுதியில் இருந்து வந்த பறவை வேட்டையாளர்கள் துப்பாக்கிகளை கொண்டு வேட்டையாடி வாகனங்களில் எடுத்துச் சென்றார்கள்.

இதனை கண்ணுற்ற உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிராம மக்கள் மற்றும் ஏரியின் அருகில் உள்ள நாச்சிகுளம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மீண்டும் வேட்டையாட வந்த வேட்டையாளர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்தப் பறவை வேட்டையை தடை செய்யும் பொருட்டு தமிழக அரசின் வனத்துறைக்கு YSSA இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராமவாசிகள் அனைவரும் இணைந்து தகவல் அளித்தனர்.

தொடர்ந்து இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டது.

இந்த பறவைகள் வருகை குறித்து மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தோம்.

முக்கியமாக இந்த சரணாலயம் உலக மக்களுக்கு பெரிய காரணமாக இருந்தவர்கள் முத்துப்பேட்டை தினத்தந்தி நிருபர்
திரு க.மாணிக்கம் தினமலர் நிருபர்
திரு கேசவன் தினமணி நாளிதழின் நிருபர் திரு.பழனிச்சாமி
ஹிந்து ஆங்கில நாளிதழ் தஞ்சாவூர் பகுதி நிருபர்
திரு கணபதி மற்றும் ஆங்கில பத்திரிக்கை நாளிதழ் நிருபர்
உ. பரதன் ஆகியோர் அவர்கள்.

தினந்தோறும் பறவைகள் வருகை குறித்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறித்தும் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி வந்தோம்.

அப்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் கௌரவ வன உயிரின பாதுகாவலரும் ஆகிய திரு பி.வி.இராஜேந்திரன் அவர்கள் உதயமார்த்தாண்டபுரம் ஏரி குறித்தும் அங்கு வரும் பறவைகள் குறித்தும் இதை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்கள்
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கோ. பழனிச்சாமி அவர்களும் கோரிக்கை வைத்தார்கள்.

அப்போதைய தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கோ.சி.மணி அவர்கள் இந்த பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டார்கள்.

நமது அழைப்பின் பேரில் அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலத்திற்கு வருகை தந்து " உறவை தேடும் பறவைகள்" "வண்ண வண்ண பறவைகள்" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்
திரு. என். சி.ஞான பிரகாசம் ,
திரு வான்மதி கண்ணன், திரு .செண்டாங்காடு சிவ.முருகையன் நிகழ்ச்சி அறிவிப்பாளர் புலவர் கோ.சந்திரசேகரன் ஆகியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்கள்.

இதனால் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் தமிழக முழுவதும் பிரபலம் அடைந்தது.

அடுத்த கட்டமாக சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் தயாரிக்க கோரிக்கை வைத்தோம்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த நமது ஊருக்கு அருகில் உள்ள ஜாம்பவனோடை திரு சிங்காரவேலு அவர்கள் இந்த நிகழ்ச்சி தயாரிப்பிற்கு உதவி செய்தார்கள்.

சென்னை தொலைக்காட்சியில் உதயமார்த்தாண்டபுரம் ஒளிபரப்பான பிறகு ஆயிரக்கணக்கான மக்கள், சுற்றுலா பயணிகள் உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு தொடர்ந்து வருகை தந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் வருகை புரிந்தார்கள்.

கூட்டம் அதிகமாக வருவதை கவனத்தில் கொண்ட அப்போதைய வன உயிரின பாதுகாவலர் திரு எல் நாதன் அவர்கள் இந்த அளவுக்கு மக்கள் கூட்டம் சேர்த்தால் பறவைகள் இடம் பெயர்ந்து விடும் அதனால் கூட்டத்தை குறைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று நம்மிடம் தெரிவித்தார்கள் .

நமது தொடர் கோரிக்கையை ஏற்று உதயமார்த்தாண்டபுரம் ஏரியை வனத்துறை சட்டத்தின் படி சரணாலயமாக உருவாக்க தமிழக அரசு வனத்துறையின் நாகப்பட்டினம் வன உயிரின கோட்ட அலுவலகம் மற்றும் முத்துப்பேட்டை வன சரக அலுவலகம் முடிவு செய்தார்கள்.

நாகப்பட்டினம் வன உயிரின பாதுகாப்பாளராக பணிபுரிந்த உயர்திரு எல்.நாதன் ஐ.எப்.எஸ் அவர்கள் இதற்கு ஏற்பாடு செய்தார்கள்

வன உயிரின காப்பாளர் அவர்கள் "
"விவேகானந்தம் நீங்கள் பொதுமக்களிடம் விவசாயிகளிடம் இந்த ஏரியை சரணாலயமாக நாங்கள் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறோம்" என்று கையொப்பம் பெற்று வாருங்கள் அதன் பின்னர் தான் ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.

அதன்படி இளைஞர் நற்பணி மன்றத்தினர் உதயமார்த்தாண்டபுரம் கிராம கமிட்டி தலைவரும் நீர் பாசன சங்க தலைவருமான திரு வி. எம். இராதாகிருஷ்ணன் அவர்களை அணுகி இது பற்றி பேசும்போது முழு ஆதரவு தந்தார்கள்.

அவர்களுடைய ஆதரவு இல்லை எனில் ஏரியை சரணாலயமாக மாற்ற இயலாமல் போயிருக்கும்.

பிறகு
ஊராட்சி மன்ற தலைவர் திரு.கா.வீரையன் அவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் முக்கியமாக ஏரி கரையில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒப்புதல் கையொப்பம் இட்டு தந்தார்கள்.

அந்த கடிதங்களை வனத்துறைக்கு சமர்ப்பித்தோம்.

மாண்புமிகு டாக்டர்.கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த தமிழக அரசு உதயமார்த்தாண்டபுரம் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தார்கள்.

வனத்துறை மற்றும் பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கு ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் வளர்ச்சிக்கு *உதயமார்த்தாண்டபுரம பறவைகள் சரணாலய பாதுகாப்பு குழு* என்ற அமைப்பு ஏற்படுத்தினோம்.

அதன் தலைவராக திரு பஞ்சாபகேசன் அவர்கள் இருந்தார்கள்.

அவர்களுடைய மறைவிற்கு பிறகு இந்த சங்கம் செயல்படவில்லை.

மீண்டும் இதுபோன்ற சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்

உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் சிறுபனையூர் பகுதியில் உள்ள கிராம மக்கள் தீபாவளி கோவில் பண்டிகை துக்க காரியங்கள் போன்ற நேரத்தில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வாண வேடிக்கைகள் செய்வதை நிறுத்தினார்கள்.

பறவைகளுக்கு கோடையில் தண்ணீர் ஏரியில் இருக்க வேண்டும் என்பதற்காக உதயமார்த்தாண்டபுரம் பகுதி விவசாயிகள் கோடை சாகுபடி செய்வதை நிறுத்தி உதவி புரிந்தனர்.

இவர்களின் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பறவைகள் சரணாலயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வந்தோம்.

இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் திரு. தில்லைவிளாகம்
ஜி ராமமூர்த்தி
தமிழக பசுமை இயக்க தலைவர் டாக்டர்.வெ.ஜீவானந்தம்,
தஞ்சை சூழலியல் மன்றத்தினுடைய தலைவர் வேளாண் துறை அதிகாரி டாக்டர் வி.பழனியப்பன் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வன உயிரியல் துறை தலைவர் டாக்டர் ஆர் கனகசபை பேராசிரியர்
டாக்டர்.கே. தியாகேசன் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.நாகராஜன்
திருச்சி சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் திரு.ஞானசெல்வன்
மற்றும் இந்திய பறவைகள் அறிஞர் டாக்டர் சலீம் அலி அவர்களுடன் பணியாற்றிய
டாக்டர்.ச. சிவசுப்பிரமணியம் டாக்டர் பா.இராம்மனோகர்
வனத்துறை அதிகாரிகள் திரு.மாணிக்கம் கோடியக்கரை திரு. கோவிந்தராஜ்
ஆகியோர் பெரும் உதவி புரிந்தனர்.

சென்னை சி.பி.இராமசாமி அய்யர் சுற்றுச்சூழல் கல்வி நிறுவன சுற்றுச்சூழல் கல்வியாளர் திரு.உ. திருநாவுக்கரசு அவர்கள்
உதயமார்த்தாண்டபுரம் முத்துப்பேட்டை பகுதிகளில் வீடியோ பிரச்சார வேன் மூலமாக பறவைகள் சரணாலயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கும் பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் துவங்கிய இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் வளர்ந்துள்ள நீர் கருவேல மரங்கள் பெரும்பாலும் பட்டுப்போக தொடங்கின.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி வன உயிரின துறையும் இணைந்து ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

அதிகமான பறவைகள் வந்து தங்கி எச்சம் இட்டதால் இந்த எச்சத்தின் அளவு ஏரி தண்ணீரில் அதிகரித்ததாலும் நீர் நீண்ட காலம் தேங்கி இருப்பதாலும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு இரசாயனங்கள் அதிகமாகி மரங்கள் பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்கள்.

பட்ட மரங்களுக்குப் பதிலாக கொடுக்காப்புளி, நீர் கருவேல மரங்களை மீண்டும் வனத்துறை சார்பாக நடப்பட்டது

தொடர்ந்து நாம் வைத்து கோரிக்கையின் சார்பாக உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் பார்வை கோபுரங்கள் சாலை வசதிகள் ஏரியின் நடுவே திட்டுகள் அமைத்தல் போன்ற வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

என்னுடைய கல்லூரி நண்பர் வனச்சரக அலுவலராக பணிபுரிந்த
பெருகவாழ்ந்தான் திரு.மு.அன்பழகன் அவர்கள் காலத்திலும் பல வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்றன

அரசு பணியின் காரணமாக நான் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டதால் சரணாலயத்தின் மீது உள்ள கவனம் எனக்கு குறைய தொடங்கியது.

என்னுடைய வாழ்வில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மிக முக்கிய பங்காற்றியது என சொல்லலாம்.

எனக்கு சுற்றுச்சூழல் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்.

பறவைகள் சரணாலயம் மூலமாக நிறைய வனத்துறை அதிகாரிகள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அறிஞர்கள் இவர்களுடைய தொடர்பு கிடைத்தது .

அதற்குப் பிறகு முத்துப்பேட்டையில்
என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்என்ற அமைப்பை நிறுவி முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பாதுகாக்க மிக சிறப்பானதொரு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வந்தோம்.

அதன் மூலம் சென்னை எம் எஸ் சுவாமிநாதன் பவுண்டேஷன் சென்னை சிபிஆர் சுற்றுச்சூழல் மையம் திண்டுக்கல் நீதிபதி பகவதி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் தஞ்சாவூர் சூழலியல் மையம் ,திருச்சி சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் திரு ஞானசெல்வன் ஆகியோருடைய தொடர்பு கிடைத்தது.

அதன் மூலம் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை பகுதிகளில் மிகப்பெரிய அளவு கடலோர காடுகள் கோயில் காடுகள் அலையாத்தி காடுகள் இயற்கை விவசாயம் மூலிகை சிகிச்சை போன்றவற்றை முத்துப்பேட்டை என் கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தில்லை ஜி இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக செய்தோம்.

முத்துப்பேட்டைக்கு பிறகு பட்டுக்கோட்டையில் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் ஒன்றை நிறுவி அதன் மூலம் பட்டுக்கோட்டை பகுதியில் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வியை வழங்கினோம்.

பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஏனாதி செல்லியம்மன் கோயில் காடுகள் அத்திவெட்டி பிச்சனிக்காடு கோயில் காடுகள் செருவாவிடுதி போத்தியம்மன் கோயில் காடுகள் போன்றவற்றை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்தோம் .

இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளில் மாணவர் பருவத்தில் ஈர்க்கப்பட்ட மாணவர் திரு பாலாஜி அவர்கள் தற்போது வெளிவயல் பகுதியில் ஓம்கார் பவுண்டேஷன் என்ற கடல் வாழ் ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய அளவில் ஆராய்ச்சி பணிகளை செய்து வருகிறார்கள்.

அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் உதவியுடன் அதிராம்பட்டினம் மல்லிபட்டினம் தொடங்கி ராமநாதபுரம் கடற்கரை வரையில் உள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன

ராம் சார் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய த்தை பாதுகாக்க தமிழக அரசு வனத்துறை பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்துக்கு வர கூடிய பறவைகளை பாதுகாக்க வேண்டும்.


சரணாலய பகுதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் பறவை வேட்டையை தடை செய்ய வேண்டும்.

ஏரியில் பறவைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.


ஏரியில் மீன் பிடிப்பது மரங்களை வெட்டுவது கால்நடைகளை மேய்ப்பது மேலும் சமூக விரோத செயல்களை செய்வது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

சரணாலயம் அருகில் உள்ள நாச்சிக்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட வேண்டும்

பறவைகள் தங்கி வாழ இனப்பெருக்கம் செய்ய நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும்

பறவைகள் பாதுகாப்பு குழுக்களை கிராமங்கள் தோறும் உருவாக்க வேண்டும்

உதயமார்த்தாண்டபுரம்
வ.விவேகானந்தம்

உதயமார்தாண்டபுரம் தோலி ரோடு பணிகள் எல்லையற்ற இன்னல்களை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுத்து வருகிறது என்றால் அது மிகைய...
13/09/2021

உதயமார்தாண்டபுரம் தோலி ரோடு பணிகள் எல்லையற்ற இன்னல்களை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுத்து வருகிறது என்றால் அது மிகையாக இருக்காது பல மாதங்களாக வடிகாலை அடைத்து வைத்தும் திறந்தும் வடிகாலை குறுக்கியும் ஒட்டு மொத்த விவசாயத்தையே கேள்விக்குறிக்குள் தள்ளியுள்ளார்கள் என்பது தான் நிதர்சனம்.. கிட்டத்தட்ட குருவை அறுவடைக்கு வரும் தருவாயில் மீண்டும் இன்று (13-9-21) வடிகாலை அடைத்து விவசாயிகளின் வாயில் மன்னை அள்ளி போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது..

உதயை பெருமாள் கோவில்
31/07/2021

உதயை பெருமாள் கோவில்

அவதூறு பரப்பாதீர்கள்.. வாட்ஸாப்பில் அனுப்பாதீர்கள்.. facebook-ல் பதியாதீர்கள்..screen ஷாட் எடுக்காதீர்கள்..
08/04/2021

அவதூறு பரப்பாதீர்கள்..
வாட்ஸாப்பில் அனுப்பாதீர்கள்..
facebook-ல் பதியாதீர்கள்..
screen ஷாட் எடுக்காதீர்கள்..

26/02/2021
இந்த கதியில் உள்ளது நம் உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவின் ஈசிஆர் சாலை..இரு சக்கர வாகனங்களிலும் அல்லது நடந்து செல்லும்போத...
19/07/2020

இந்த கதியில் உள்ளது நம் உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவின் ஈசிஆர் சாலை..

இரு சக்கர வாகனங்களிலும் அல்லது நடந்து செல்லும்போது இந்த சேரிலும் சகதியிலும் கீழே விழாமல் கடந்து செல்லும் நண்பர்களுக்கு பரிசில் கொடுத்தாலும் தகும்..

எது எப்படியோ இங்கு யாரையும் குறை கூறிக்கொண்டு இல்லாமல் நமக்கு வாய்த்த சாலை இதுதான் என்று வெகு கவனமாக சாலையை கடந்து செல்லுங்கள் நண்பர்களே..

ஏனெனில் நம் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் நண்பர்களே..

Address

Nachikulam
Chennai
614706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udayamarthandapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category