Tamilanda

Tamilanda Tamilanda

1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.!நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள்...
20/06/2016

1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.!

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும். அவர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களில் துவங்கி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில், இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் நாம் அறிந்திராத, புரிந்து கொள்ள முடியாத பல்வேறு அறிவியல் அர்த்தங்கள் இருந்திருக்கின்றன.


இந்நிலையில் நம் முன்னோர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களும், கட்டிடங்களும் இன்று உலகப் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் கோவில்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் சில அதிசயங்கள் மற்றும் அதன் பின் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப மர்மங்கள் குறித்த தொகுப்பு தான் இது.

உலக பாரம்பரிய சின்னமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் தஞ்சை பெருவுடையார் கோவில் விளங்குகின்றது.தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரிய கோவில் குறித்து நாம் அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு தான். நிழல் தரையில் விழாத கட்டிட அமைப்பு, மற்றும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது. தஞ்சைப் பெரிய கோவில் குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று வரை இதன் கட்டமைப்புப் பணிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்து எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை, மாறாகப் பல்வேறு சாத்தியக்கூறுகள் மட்டும் இருக்கின்றது.

தஞ்சை பெருவுடையார் கோவில் சோழ பேரரசன் ராஜராஜனால் கிபி 1006 ஆம் ஆண்டுத் துவங்கி 1010 ஆம் ஆண்டுக் கட்டிமுடிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் கட்டமைப்பு இன்றளவும் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கின்றது.

இக்கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் வெறும் வண்டல் மண் நிறைந்ததாகும், அங்குப் படர்ந்த கருங்கல், உயர்ந்த கிரானைட் கற்கள் எப்படி வந்தன கிரானைட் கற்கள் எதைக் கொண்டு வெட்டப்பட்டன, என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் இல்லை.

இன்றளவும் பூமியின் மிகவும் உறுதியானதாகக் கருதப்படும் கிரானைட் கற்களை வைரக் கற்கள் கொண்ட கருவிகள் மூலம் வெட்டப்படுகின்றன, ஆனால் சோழர்கள் இந்தக் கற்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

கோவில் முழுவதும் பல்வேறு சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுகளும் நிரம்பியிருக்கின்றது. இதோடு மிகவும் நுணுக்கமான துளைகள் சோழர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.

பெருவுடையார் கோவிலின் சுவர்களில் மிகவும் நுணுக்கமான துளைகள் சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலை மட்டுமே நுழையும் அளவு துளை இருப்பதால் சோழர்கள் எதைக் கொண்டு இதனைச் செய்திருப்பர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தத் துளைகள் எதற்காகச் செதுக்கப்பட்டன என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தாலும், பல ஆய்வாளர்களும் இது அலங்காரமாகக் கருதி செதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறிய துளைகள் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றாலும் இது குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

20/06/2016
19/03/2016
13/01/2016
13/01/2016

கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ஜல்லிக்கட்டு:

#தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, கி.மு., ௩ம் நுாற்றாண்டிலேயே நடந்ததற்கான ஆதாரமாக, நாணயங்கள் ...

மேலும் படிக்க : http://www.dinamalar.com/news_detail.asp?id=1432049

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உ...
18/09/2015

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.

உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள் அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.

சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ''சிக்கன் மட்டுமல்ல... இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.

ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்...
18/09/2015

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம்...
18/09/2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்துஅமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது…..!

சம்மணம் இட்டு சாப்பிட்டால் கெளரவ குறைவு என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் உடல் நலத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்..!

சிந்தித்து செயற்பட்டால் நோயில்லாமல் வாழலாம்..!

Address

Sulur
Coimbatore
641405

Alerts

Be the first to know and let us send you an email when Tamilanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category