Hogenakkal

Hogenakkal Total Guide of hogenakkal. visit more details www.hogenakkalindia.com
(1)

10/01/2015
03/08/2013

ஒகேனக்கல் காவிரியில் வெள்ள பெருக்கு: குளிக்க தடை 03-08-13 source Dinamalar

ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் உற்சாகம்ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பய...
14/07/2013

ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த வாரங்களில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் விலக்கியது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. வருவாய் இன்றி தவித்து வந்த மீன் பிடி தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தடை நீக்கப்பட்டதால் நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, பரிசல்களில் சென்று காவிரியின் அழகை கண்டு மகிழ்ந்தனர். மீன் வறுவல் கடைகளில் மீன்களை ருசித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தபடி உள்ளனர். இதனால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீன் கடையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நேற்று விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 14,300 கன அடியாக சரிந்தது.
Source : Dinakaran

Address

Hogenakkal
Dharmapuri
636810

Alerts

Be the first to know and let us send you an email when Hogenakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category