Kodaikanal Life

Kodaikanal Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kodaikanal Life, Tour guide, Kodaikanal.
(2)

கொடைக்கானல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

எங்கள் வீட்டிற்கு நேற்று காலை 8 மணி அப்டி வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போட...
03/04/2026

எங்கள் வீட்டிற்கு நேற்று காலை 8 மணி அப்டி வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க" என்றார்.

"10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்" என்று சமையலறைக்குள்,
அவசர அவசரமாக சாப்பாடு தயார் செய்து, உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்.

10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, புல் மற்றும்
தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.
மனம் கலங்கியது...

என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார்.
நடக்கவும் முடியவில்லை,
கை, கால் நடுக்கம் வேறு.
"தாத்தா இங்கே வாங்க", என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து "2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை" என்றார்.

2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். மிகவும் வருத்தமாக உள்ளது.

உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய், தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்.

தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது அவரது கையில் 100 ரூபாய் கொடுத்ததும் மகிழ்ச்சியில் "இன்னொரு நாள் வரேன்.. வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன்" என்றார்.

"உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை" என்றார்.
வீட்டின் வெளியே சுத்தம் செய்து உணவு கேட்கும் தாத்தாவின் நேர்மை

மனம் சிலிர்க்க வைத்தது.....

 #மகிழ்ச்சிக்கான_வழி 1. சுய கட்டுப்பாட்டை உருவாக்கு.2. ஒரு நேரத்தில் ஒரு தவறான பழக்கவழக்கத்தை கைவிடு.3. எதிர்காலத்தை எண்...
03/04/2026

#மகிழ்ச்சிக்கான_வழி

1. சுய கட்டுப்பாட்டை உருவாக்கு.
2. ஒரு நேரத்தில் ஒரு தவறான பழக்கவழக்கத்தை கைவிடு.
3. எதிர்காலத்தை எண்ணி கவலைப்படாதே.
4. உன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்.
5. தோல்வியை பார்த்து பயப்படாதே.
6. எளிமையாக இருப்பதை விரும்பு.
7. No சொல்லப் பழகு.
8. புதிய நண்பர்களை உருவாக்கு.
9. கடந்த காலத்தை கைவிடு.
10. புதிய வேலையை நோக்கி நகர்.
11. சுய தொழில் முயற்சியில் ஈடுபடு.
12. நேர்மறையாக சிந்திக்க பழகு.
13. நேர்மறை சிந்தனையாளர்களுடன் அதிகம் சேர்ந்திரு.
14. சுயத்தை எண்ணி பெருமை கொள்.
15. ஆர்வமுடையவராக இரு.
16. வெவ்வேறு திறன்களை வளர்.
17. புதிய விடயங்களை முயற்சி செய்.
18. காலையில் அன்றைய நாள் தொடர்பாக ஆரோக்கியமாக சிந்தி.
19. சாக்கு போக்குச் சொல்வதை தவிர்.
20. இடர்களுக்கு முகங்கொடு.
21. சுய தவறுகளுக்கு அடுத்தவரை பழிகூறாதே.
22. புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்.
23. இயற்கையை இரசி.
24. உடன்படுவதற்கான காரணங்களை இனங்காண்.
25. தைரியமாக இரு.
26. மனதை ஒருநிலைப்படுத்து
27. பூரணத் தன்மை இல்லாவிட்டாலும் நன்றாக இருக்க முடிவெடு.
28. சுதந்திரமாக இரு.
29. முதலில் நீ பணம் செலுத்து.
30. குறைந்த செயற்திறனில் அதிக விளைதிறன் கிடைக்க தொழிற்படு.
31. பொறுப்புடன் செயற்படு.
32. அதிகாலையில் எழும்பு.
33. வேட்கையை பின்தொடர்.
34. வலைப்பதிவு ஒன்றை இயக்கு.
35. வாழ்கைக்கு எது அவசியமானது என்று உன்னை நீயே கேள்.
36. வாழ்வை நேசிக்க வேண்டியதற்கான காரணத்தை தேடு.
37. புதிய உணவு பழக்கவழக்கத்தை திட்டமிடு.
38. சொந்த முடிவுகளை எடு.
39. தேவையில்லை எனும் விடயங்களை தவிர்.
40. முரண்படுவதை தவிர்த்து கொள்.
41. சக்தியை வீணாக்காதே.
42. புதிய விடயங்களை முயறச் p செய்.
43. நணபர்களின ; தவறை ஏற்றுக் கொள்.
44. தவிர்ப்பதற்கு கற்றுக்கொள்.
45. மரண பயத்தை கடந்து வா.
46. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்.
47. இயலாது என்று விட்டுவிடாதே.
48. அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்காதே.
49. நன்றியுணர்வை வெளிப்படுத்து.
50. பொறாமையை கைவிடு.
51. வதந்திகள் பற்றி கிசுகிசுப்பதை தவிர்.
52. எதிர்மறை எண்ணத்தை இல்லாது செய்.
53. விமர்சனங்களை கேட்க தயாராகு.
54. பணத்தை விட நேரத்தை முகாமை செய்.
55. உனக்கு மட்டும் என்று உரிமை கொள்ளாதே.
56. உடற்பயிற்சி செய்.
57. முறைப்பாடு செய்வதை தவிர்.
58. வராத்தில் ஒரு புத்தகமாயினும் வாசி.
59. மாற்ற முடியாத விடயங்களை தவிர்த்து விடு
60. ஒரு விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடு
61. தவறான பிரச்சினைகளை தீர்ப்பதை தவிர்.
62. மன்னிக்க தயாராக இரு.
63. பிறர் நன்றாக இருக்க சிந்தி.
64. பிடிக்காத நபர்களுடனான தொடர்பை துண்டி.
65. பேசுவதை குறைத்து செயற்படுவதை அதிகமாக்கு.
66. நீண்ட காலத்திற்கு தேவைப்படும் விடயத்தை எடு.
67. வழமையான நடைமுறைகளை தவிர்
68. புதிய குழுக்களுடன் இணை.
69. அன்பு செய்ய தொடங்கு.
70. சில நேரங்களை தனிமையில் கழி.
71. தவறான பழக்கவழக்கத்துடனான தொடர்பை துண்டி
72. எதிர்வினையாற்றுவதை தவிர்.
73. தீர்ப்பிடுவதை தவிர்.
74. சுய நம்பிக்கைகளை அவதானி.
75. கசப்பான நினைவுகளை அழி.
76. உன்னுடைய உணர்வுகளை நம்பு.
77. செல்லப் பிராணி ஒன்றை வளர்.
78. உடலையும் உளள்த்தையும் பேணு.
79. உன்னை நீ ஏமாற்றுவதை தவிர்.
80. உன் பலவீனங்களை ஆராய்ந்து தீர்.
81. தொலைக்காட்சியில் மூழ்காதே.
82. விழிப்புடன் வாழ்.
83. நடைப்பயிற்சி செய்.
84. உனக்கு நீ சாவால் இடு.
85. தினமும் தியானம் செய்
86. கருணையோடு செயற்படு.
87. எதிர்பார்க்க முடியாததை செய்.
88. வென்றாலும் தோற்றாலும் விவாதிக்காதே.
89. சமூகமயப்படு.
90. வாழ்வை மெதுவாக்கு.
91. இலக்குகளை தீர்மானி.
92. பிறருடன் ஒப்பீடு செய்வதை தவிர்.
93. உதவி செய்.
94. எழுச்சியூட்டும் வரலாற்றை படி.
95. பொய் சொல்வதை தவிர்.
96. உண்மையைத் தேடு.
97. வருத்தமடைவதால் பலனில்லை என்பதை உணர்.
98. பெரியளவில் பார்க்க முயற்சி செய்.
99. இன்று இந்த நொடியில் வாழு.
100. நீ நீயாக இரு.

முன்பெல்லாம் கூட்டு  #குடும்பமாக வாழ்வார்கள். வீட்டின் மூத்தவர்களான #அப்பத்தா, ஆத்தா, அய்யாமை, அவ்வா,ஆச்சி, பாட்டி,  தன்...
03/04/2026

முன்பெல்லாம் கூட்டு #குடும்பமாக வாழ்வார்கள்.

வீட்டின் மூத்தவர்களான
#அப்பத்தா, ஆத்தா, அய்யாமை, அவ்வா,ஆச்சி, பாட்டி, தன் பேரன் பேத்திகளை காலில் படுக்க போட்டு நல்லா குளிப்பாட்டி மூக்கு பிடித்து விட்டு, தலையை உருட்டி விட்டு. நெத்தியை பிடித்து விட்டு. காதில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு, தொப்புளில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு. இரண்டு கையும் பிடித்து மேல்நோக்கி தூக்கி, காலை பிடித்து கீழ்நோக்கி தூக்கி குளிப்பாட்டி விட்டு தண்ணி எல்லாம் துடைத்து எடுத்து
பிள்ளைக்கு சாம்பிராணி போட்டு தன் மகளிடமோ மருமகளிடமோ #பேரன் #பேத்தியைகொடுத்து இந்த பசிஅமர்த்து என்று சொல்லி கொடுப்பார்கள்..

இதெல்லாம் எதற்காக என்று கேட்டால்
தலையை நல்லா உருட்டி விட்டால் உருண்டையாக தலை வரும், மூக்கை பிடித்து விட்டால் சப்ப மூக்கு இருக்காது நீண்ட மூக்காக இருக்கும். நெற்றியைப் பிடித்து விடுதல் அகல நெத்தியாக இருக்கும். கையைப் பிடித்து மேலே தூக்குவதும் காலை பிடித்து கீழ்நோக்கி தூக்குவதும் பயமும் அறியக்கூடாது என்பதற்காக.. செய்வார்கள்...

இப்பல்லாம் யாரும் கூட்டு குடும்பமாக வாழ்வதில்லை எல்லோரும் தனி குடும்பத்தாக தான் வாழ்கிறார்கள்
இப்போதெல்லாம் யார் இந்த மாதிரி குளிப்பாட்டுகிறார்கள்....

#முதியோர்கள் என்பது ஒரு பொக்கிஷம் போன்ற அந்த பொக்கிஷத்தை நாம் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்...
வருத்தமளிக்கிறது...

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு (Gas Cylinder) தீர்ந்துபோகவே, ஒரு பெண்மணி தனது சமயோசித புத்தியைப் பயன்பட...
03/04/2026

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு (Gas Cylinder) தீர்ந்துபோகவே, ஒரு பெண்மணி தனது சமயோசித புத்தியைப் பயன்படுத்துவதாக நினைத்து வினோதமான முடிவு ஒன்றை எடுத்தார். சிலிண்டரை கேஸ் ஏஜென்சிக்கு கொண்டு சென்று நிரப்பி வர ஆள் இல்லாததால், அவர் ராபிடோ செயலியில் ஒரு சவாரியை முன்பதிவு செய்துள்ளார்.

ராபிடோ ஓட்டுநர் அந்தப் பெண்ணின் வீட்டு வாசலுக்கு வந்து, “யார் வர வேண்டும்?” என்று கேட்டபோது, அந்தப் பெண்மணி ஒரு காலி சிலிண்டரைக் காட்டி, “தம்பி, இதை எடுத்துச் சென்று கேஸ் நிரப்பி வாருங்கள்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “மேடம், நான் எப்படி கேஸ் நிரப்ப முடியும்? வீட்டில் யாரும் இல்லை என்பதற்காக ராபிடோவை இதற்காகவா புக் செய்தீர்கள்?” என்று கேட்டுள்ளார்.


மேலும், தனது இருசக்கர வாகனத்தில் சிலிண்டரை வைத்து எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படிச் செய்தால் வண்டியில் கீறல்கள் விழும் என்றும் அந்த ஓட்டுநர் பக்குவமாக விளக்கியுள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஓட்டுநரின் நியாயத்தைப் புரிந்துகொண்ட அந்தப் பெண்மணி, தனது சவாரியை (Ride) ரத்து செய்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் சிரிப்பை வரவழைப்பதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மண்டையில் திமுக கொடியுடன்  தொண்டன் ⁸
03/04/2026

மண்டையில் திமுக கொடியுடன் தொண்டன் ⁸

"வேலை முடிஞ்சும் காசு தரலையா?" ஆத்திரத்தில் இன்டீரியரை பிச்சு எறிந்த கான்ட்ராக்டர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!இன்டீர...
02/04/2026

"வேலை முடிஞ்சும் காசு தரலையா?" ஆத்திரத்தில் இன்டீரியரை பிச்சு எறிந்த கான்ட்ராக்டர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

இன்டீரியர் வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகு, பேசியபடி பணத்தைத் தர வீட்டு உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரமடைந்த கான்ட்ராக்டர் தனது குழுவினருடன் சேர்ந்து செய்த வேலைகளை அப்படியே பிரித்தெடுத்த சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

வேலை முடிஞ்சா காசு தரணும், இல்லன்னா செஞ்ச வேலையைத் திரும்ப எடுத்துப்போம்" என்கிற பாணியில், பொருத்தப்பட்ட பிட்டிங்ஸ் மற்றும் மெட்டீரியல்களை தொழிலாளர்கள் ஒவ்வொன்றாக அகற்றும் காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியாயமாக உழைத்தவனுக்கு ஊதியம் கிடைக்காத போது இது போன்ற அதிரடி முடிவுகள் தான் எடுக்கப்படும் என ஒரு தரப்பினர் கான்ட்ராக்டருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ​இருப்பினும், இது போன்ற மோதல்கள் சட்டரீதியாக அணுகப்பட வேண்டுமா அல்லது நேரடியாகக் களத்தில் இறங்கி வேலையைப் பிரிப்பதே சரிதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முறையான ஒப்பந்தங்கள் (Written Contracts) மற்றும் முன்பணம் ( ) போன்ற நடைமுறைகள் இல்லாததே இதுபோன்ற பொதுவெளி மோதல்களுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சம்பவம் கட்டுமான மற்றும் இன்டீரியர் துறையில் நிலவும் தொழில்முறை ஒழுக்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை சிக்கல்கள் குறித்த ஒரு பெரிய விவாதத்தையே சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ளது.
#கூலி #வேலை #சம்பளம் #உழைப்பு #இன்டிரியர்

“என்னை காப்பாத்துங்க…” என்று தோளில் சாய்ந்த  #அந்நியன்…அந்த ஒரு நொடி…  ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு உயிரை காப்பாற்றிய வரலாறு!” ...
02/04/2026

“என்னை காப்பாத்துங்க…” என்று தோளில் சாய்ந்த #அந்நியன்…

அந்த ஒரு நொடி… ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு உயிரை காப்பாற்றிய வரலாறு!”

சென்னையின் பழைய வண்ணாரப் பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் எளிமையாக வாழ்ந்து வரும் ரவி என்ற ரவிச்சந்திரன்… கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டியே வாழ்க்கையை நடத்தி வருபவர்.

படிப்பு அதிகம் இல்லை…
ஆனால் #மனிதநேயம் அளவற்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுடன் பேசிக் கொண்டே, கொஞ்சம் #இந்தி, கொஞ்சம் #தெலுங்கு, கொஞ்சம் #மலையாளம் கற்றுக்கொண்டவர்.
அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்… இன்று அவரை ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் நிலைத்திருக்கச் செய்துள்ளது.

ஒரு நாள்…
கொல்கத்தாவை சேர்ந்த சங்கரதாஸ் (52) தொழில் காரணமாக சென்னை வந்திருந்தார்.
சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார்.தமிழ் தெரியாத சங்கரதாஸ், இந்தியில் பேசிக்கொண்டே வந்தார்.

ஆனால் திடீரென…அவரது குரல் தடைபட்டது…
கண் இருண்டது…உடல் முழுவதும் வியர்வை…
அடுத்த நொடியில் ரவியின் தோளில் சாய்ந்து மயங்கி விழுந்தார்!அந்த நொடியில் ரவி எடுத்த முடிவு… ஒரு உயிரை காப்பாற்றியது.

ஒரு விநாடி கூட யோசிக்காமல் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பார்த்து, “கடுமையான #மாரடைப்பு… உடனே பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றனர்.

அதன்படி #ராயப்பேட்டை அரசு மருத்துவமனை… அங்கிருந்து உடனடியாக #ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு…
ஆம்புலன்சில் சங்கரதாசுடன் சென்றார் ரவி.
வழியிலேயே சங்கரதாஸ் தொடர்ந்து வாந்தி எடுத்து துடித்தார்…

அதை வெறுக்காமல்… அருவருக்காமல்…
தன் உடம்பில் தாங்கிக்கொண்டார் ரவி!
அது ஒரு டிரைவரின் செயல் அல்ல…
அது ஒரு மனிதனின் இதயம்!
மருத்துவமனையில் டாக்டர்கள் பார்த்தபோது…
“இன்னும் 5 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உயிரே போயிருக்கும்…

உடனே ஆபரேஷன்… #பேஸ்மேக்கர் வேண்டும்… அதுவும் உடனே வாங்க வேண்டும்” என்றனர். சங்கரதாஸ் குடும்பத்தை தொடர்பு கொண்ட போது தான் தெரிந்தது அவர்களிடம் சென்னை வர பணமே இல்லை! அந்த நொடியில்…ரவி எடுத்த முடிவு அனைவரையும் கண்கலங்க வைக்கும்…

தனது ஆட்டோ RC புத்தகத்தை அடமானம் வைத்தார் நண்பரிடம் கடன் வாங்கினார்
மொத்தம் ₹57,000 சேர்த்து டாக்டர்களிடம் கொடுத்து, “நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்த மனிதன் ஆதரவில்லாமல் இறந்தான் என்ற கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர்… என்னால முடிந்தது இதுதான்…” என்றார்.

“இவர் யார் உங்களுக்கு?” என்று டாக்டர்கள் கேட்டபோது…

“என் ஆட்டோவில் வந்த பயணி… என்னை காப்பாத்துன்னு என் தோள்ல சாய்ந்த சக மனிதன்… அதுவே போதும்! ” என்றார்.
அந்த பதிலை கேட்ட டாக்டர்களே நெகிழ்ந்து…
மீதமிருந்த பணத்தை தாங்களே சேர்த்து பேஸ்மேக்கர் வாங்கி… வெற்றிகரமாக ஆபரேஷன் செய்தனர்.

அதற்கு பிறகு நடந்தது இன்னும் பெரிய மனிதநேயம்…

20 நாட்கள்… ரவி அவருக்கே காவலன் ,வார்டு வார்டாக அழைத்துச் செல்வார் , உணவு வாங்கித் தருவார்
மருந்து கொடுப்பார் ,பகலில் அவர் சேவை…

இரவில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பார்த்துக்கொள்வார்…
தன் வீட்டில் இருந்து பால் கொண்டு வந்து…
அவருக்கு தாளிக்காத உணவு தேடி ஹோட்டலுக்கு ஹோட்டல் அலைந்தார்.

ஒரு அந்நியனுக்காக…ஒரு உறவினர் கூட செய்யாத சேவை!சங்கரதாஸ் நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆன பிறகு…
அவரை மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார் ரவி…

ஏன் தெரியுமா?

அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று அங்கே வேண்டிக் கொண்டிருந்தார்! பிறகு… அவரை பாதுகாப்பாக ரயிலில் கொல்கத்தாவிற்கு அனுப்பிவைத்தார்.

பிரியும் நேரத்தில்…சங்கரதாஸ் பேசவே இல்லை… ரவியை கட்டித்தழுவி அழுதார்…
அங்கே மொழி தோல்வியடைந்தது… அன்பு மட்டும் வெற்றி பெற்றது!

20 நாட்களுக்கு பிறகு தனது ஆட்டோ ஸ்டாண்டிற்கு திரும்பிய ரவி…“எங்கேப்பா இத்தனை நாளா காணோம்?” என்று கேட்ட நண்பர்களிடம் இந்த சம்பவத்தை சொன்னார்.

அதன் மூலம் இந்த கதை வெளியேறியது…
பலர் உதவ முன்வந்தபோது… ரவி சொன்ன பதில் இன்னும் பெரியது — “நான் மனிதனாக என் கடமையை செய்தேன்… அதற்கு பரிசு வேண்டாம்…”

அப்படியே அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று… மீண்டும் தனது ஆட்டோவை இயக்க ஆரம்பித்தார்…

மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது…
அதற்கு உயிர் கொடுத்தவர் – ஆட்டோ ரவி!

பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.

#மனிதநேயம் #உண்மையான_மனிதன்

தேவை இல்லாமல் பேசினால் வாயை உடைத்து விடுவேன் என துரத்தி சென்று வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்🙏❤️
02/04/2026

தேவை இல்லாமல் பேசினால் வாயை உடைத்து விடுவேன் என துரத்தி சென்று வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்🙏❤️

"போர் தொடரும்".-ஈரான். "ஈரான் போர்நிறுத்தம் செய்யக் கோரியுள்ளதாக டிரம்ப் கூறியதில் உண்மைஇல்லை.."-அராச்சி, ஈரான் வெளியுறவ...
02/04/2026

"போர் தொடரும்".-ஈரான்.

"ஈரான் போர்நிறுத்தம் செய்யக் கோரியுள்ளதாக டிரம்ப் கூறியதில் உண்மைஇல்லை.."

-அராச்சி, ஈரான் வெளியுறவு அமைச்சர்

பொதுவா வேட்டை நாய்கள் கடிச்சா கூட  பெரும்பாலும்  ஒன்னும் ஆகாதுன்னு சொல்வாங்க ,வளர்ப்பு நாய்கள் கொஞ்சம் டேஞ்சர் தான் போல ...
02/04/2026

பொதுவா வேட்டை நாய்கள் கடிச்சா கூட பெரும்பாலும் ஒன்னும் ஆகாதுன்னு சொல்வாங்க ,வளர்ப்பு நாய்கள் கொஞ்சம் டேஞ்சர் தான் போல ..

500 Yrs Old tree --- 500 ஆண்டுகள் பழமையான மரம்
07/10/2025

500 Yrs Old tree --- 500 ஆண்டுகள் பழமையான மரம்

01/10/2025

Address

Kodaikanal
624101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kodaikanal Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category