You're Restricted,Monetisation Warning,See why

You're Restricted,Monetisation Warning,See why Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from You're Restricted,Monetisation Warning,See why, Tour guide, Kodaikanal.
(2)

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைஜூன் 27, 2025திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பய...
27/06/2025

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
ஜூன் 27, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை

பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட்,
மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல வனத்துறையினர் தடை

ஊட்டி கொடைக்கானல் போர் அடிச்சிருச்சா...? புதுசா ஏதாவது மலை பிரதேசம் சுற்றுலா போக ஆசையா அதுவும் கம்மியான பட்ஜெட்ல ...அதிக...
03/05/2025

ஊட்டி கொடைக்கானல் போர் அடிச்சிருச்சா...? புதுசா ஏதாவது மலை பிரதேசம் சுற்றுலா போக ஆசையா அதுவும் கம்மியான பட்ஜெட்ல ...அதிகம் கூட்டம் இல்லாமல் அசத்தும் செம மலை பிரதேசம் தான் காந்தளூர். தென்னகத்தின் மினி காஷ்மீரின் அழைக்கப்படும் கோடை வாசஸ்தலம்.

காடுகளுக்குள் அழகிய நீர்வீழ்ச்சி,வியூ பாயிண்ட்கள்,இரவில் ஜீப் சவாரி என அசத்தும் சுற்றுலாத்தலம்…

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் 'மினி காஷ்மீர்' என அழைக்கப்படும் காந்தளூர் மலை கிராமம் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அமைந்திருக்கும் காந்தளூர்.

மலைவளம் மிக்க, காடுகள் நிறைந்த, பல அருவிகள் ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

விடுமுறையை சிறந்த முறையில் கொண்டாட திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் ஸ்பாட்.
மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறு, தேயிலைத் தோட்டங்கள், பழ தோட்டங்கள் போன்றவை ​இங்கு உள்ளன.

தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.
10% மக்கள் மலையாளம், தெலுங்கு பேசுபவர்களாக உள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து காந்தளூர் 5000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.
ஆப்பிளுக்கு பெயர் பெற்ற காஷ்மீருக்கு அடுத்த படியாக, தென் இந்தியாவில் காந்தளூரில் மட்டுமே ஆப்பிள்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மேலும் ப்ளம்ஸ், ஆரஞ்சு, பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களும் இங்கு விளைவிக்கப்படுகிறது.

இங்கு நிறைய வியூ பாயிண்ட்கள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் பல அருவிகள் ஆங்காங்கே கொட்டுகின்றன.
காந்தளூரின் அழகை காண நினைப்பவர்கள் டென்ட் ஸ்டே என சொல்லப்படும் கூடார அமைப்புகளில் தங்குவது நல்ல அனுபவத்தை அளிக்கும். இவை வாடகைக்கு கிடைக்கின்றன.
சுற்றிலும் மலைகள் இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் காந்தளூர்.

உடுமலைப்பேட்டையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் நீர்வீழ்ச்சி உள்ளது.
அருவிக்கு நடந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர பயணம் காடுகளுக்குள் அமைந்து இருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ காந்தளூரில் பூக்கிறது.

அடுத்ததாக காந்தளூரில் அனகோட்டா பார்க் எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பார்த்து வர மறக்காதீர்கள். இரவில் ஜீப் சவாரி அலாதியான அனுபவத்தை வழங்கும்.

கொடைக்கானல் வில்பட்டி.......          பல சிறப்பம்சங்களைக் கொண்ட  கிராமம்  ஆகும் ....         எப்பொழுதும்   சுற்றி  பார்த...
22/04/2025

கொடைக்கானல் வில்பட்டி.......
பல சிறப்பம்சங்களைக் கொண்ட கிராமம் ஆகும் ....
எப்பொழுதும் சுற்றி பார்த்து சலிப்படயும் இடங்களை விட்டு விட்டு
இது போன்ற மலைக்கிராமங்களை
பார்த்து ரசிப்பது சிறந்தது....

அமைதியான சூழல்:
அழகிய இயற்கை காட்சிகள் :
வில்பட்டி பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை இங்கிருந்து கண்டு ரசிக்கலாம்.......

குறிப்பாக, யானை பள்ளத்தாக்கின் (Elephant Valley) அழகிய தோற்றம் இங்கிருந்து பார்க்க அற்புதமாக இருக்கும்.
குறைந்த மக்கள் நடமாட்டம்: கொடைக்கானலின் மற்ற சுற்றுலாத் தலங்களை ஒப்பிடும்போது, வில்பட்டியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்..... இதனால், அமைதியான விடுமுறையை கழிக்க இது ஏற்றது........
விவசாயம்:
இது ஒரு விவசாயப் பகுதி. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், காபி மற்றும் வாழை போன்ற பயிர்கள் முக்கியமாக பயிரிடப்படுகின்றன.......
ட்ரெக்கிங் வாய்ப்புகள்:
வில்பட்டியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ட்ரெக்கிங் செல்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் உள்ள சோலைக்காடுகள் வழியாக செல்லும் ட்ரெக்கிங் மிகவும் அழகானது......

தங்குமிடங்கள்:
இங்கு சில அமைதியான தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன.......
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்: வில்பட்டியிலிருந்து கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களான பைன் காடுகள், குணா குகை, தூண் பாறைகள் போன்ற இடங்களுக்கு எளிதில் சென்று வரலாம்.........

சுருக்கமாகக் கூறினால், கொடைக்கானல் வில்பட்டி அமைதியான சூழல், அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் ட்ரெக்கிங் வாய்ப்புகளுக்காக அறியப்படுகிறது. கொடைக்கானலின் பரபரப்பிலிருந்து விலகி அமைதியான விடுமுறையை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்......

கொடைக்கானல் வரலாறு .....
22/04/2025

கொடைக்கானல் வரலாறு .....

Ooty 💚 Kodaikanal 💛
21/04/2025

Ooty 💚 Kodaikanal 💛

மலைகளின் இளவரசி கொடைக்கானல்...கொடைக்கானல் மலை மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது...சமவெளியில் இருந்து பெருமாள் மலை வ...
19/04/2025

மலைகளின் இளவரசி கொடைக்கானல்...

கொடைக்கானல் மலை மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது...

சமவெளியில் இருந்து பெருமாள் மலை வரை கீழ் மலையாகும் இது முதல் அடுக்காகும் இங்கு அவ்வளவு குளிர் இருக்காது...

பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் நகரம் வரை நடு மலையாகும். இது இரண்டாவது அடுக்காகும் இங்கு ஓரளவு குளிர் இருக்கும்.

கொடைக்கானல் நகரத்திலிருந்து கூக்கல் வரை மேல்மலையாகும் இது மூன்றாவதா அடுக்காகும். இங்கு அதிக குளிர் காணப்படும்...

முதல் அடுக்கு 4200 அடி உயரம் கொண்டது..
இரண்டாவது அடுக்கு 5300 அடி உயரம் கொண்டது..
மூன்றாவது அடுக்கு 7600 அடி உயரம் கொண்டது..

பல நூறு சதுர கிலோமீட்டர் பறந்து விரிந்து காணப்படும் கொடைக்கானல் மலையில் ஒரு இடத்தில் கூட தேயிலை பயிரிடப்படுவதில்லை...

கொடைக்கானலில் உள்ள அழகான இடங்கள்...

வெள்ளி அருவி, நட்சத்திர ஏரி, தூன்பாறை, டால்பின் மூக்கு பாறை, குணாகுகை, தற்கொலை பாறை, பாம்பார் அருவி, பூம்பாறை, மன்னவனூர், கூக்கல், கிளாவரை...

கீழே உள்ள படத்தில் உள்ளது மேல்மலையில் உள்ள பூம்பாறை எனும் அழகிய கிராமம்.

19/04/2025
மலைகளின் இளவரசி கொடைக்கானல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது...இது சீசன் காலம். விடுமுறை நாட்களிலும், சனி, ஞாயிறு போன்ற வார...
19/04/2025

மலைகளின் இளவரசி கொடைக்கானல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது...

இது சீசன் காலம். விடுமுறை நாட்களிலும், சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் கூட்டத்தோடு வாகனநெரிசல் இருக்கும். எனவே நெரிசல் இல்லாமல் கொடைக்கானல் அழகை ரசிக்க வார இடை நாட்களை தேர்ந்தெடுத்தால் நிம்மதியாக கொடைக்கானலை கண்டு ரசிக்கலாம்....

பொதுநலன் கருதி பதிவாக்கம்..

கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர் ===================================கொடைக்கானலில் போக்குவரத்திற...
01/04/2025

கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்
===================================

கொடைக்கானலில் போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கும், மூணாறுக்கு A.S. சுப்பன் செட்டியாருக்கும் வழங்கப்பட்டது.

கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார்.

அதன் பிறகு 1947 வது வருடம் சுதந்திரம் பெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட்டு கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் கொடைக்கானலுக்கு சிறு வணிகம் செய்ய வந்த JC என்ற ஜெயராஜ் செல்லத்துரைக்கும், C. A. வெள்ளைய தேவருக்கும் தேர்தல் பகை காரணமாக ஒரு பந்தயத்தில் பந்தய பொருளாக தனது 13 பேருந்துக்களை வைத்து, ஜெயராஜ் நாடாரிடம் 13 பேருந்துக்களை எழுதி கொடுத்து விட்டு பெரியகுளம் வந்துவிட்டார். அந்த பேருந்து தான் இன்று ஒடிக்கொண்டிருக்கும் J.C. பேருந்து ஆகும்.

C. A. வெள்ளைய தேவருக்கு பக்க பலமாக இருந்த போடி சுப்பன் செட்டியார், புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான், T. V. சுந்தரம் ஐயங்கார் ( TVS குழுமம் தலைவர்) .

T. V. சுந்தரம் ஐயங்கார் வருடத்திற்க்கு ஒரு முறை C. A. வெள்ளையன் தேவருக்கு அவர்களுக்கு ஒரு புது FIAT கார் பரிசளிப்பார், அந்த வருடம் அந்த பழைய காரை வாங்கிக் கொண்டு புதிய கார் தருவார்.

போடி சுப்பன் செட்டியார் உடன், அவரது போடி வீட்டிற்கு வெள்ளையன் தேவர் சென்ற போது, சுப்பன் செட்டியாருக்கு பக்கபலமாகவும், உற்ற நண்பனாகவும் இருந்த பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர் அறிமுகம், வெள்ளையன் தேவருக்கு கிடைத்தது. காலப்போக்கில் பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர், வெள்ளையன் தேவர் சம்மந்தியாக மாறி பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள்.

பெரியகுளத்தில தனது சமுதாயத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்ட வெள்ளையன் தேவர், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தனது செல்வாக்கில் நிதி கொண்டு ஒரு ஊரை உருவாக்கி ஒரு 20 வீட்டை கட்டினார்.

அப்போது கட்டும் பணிக்கு நிதி தேவைப்பட்டது, அதனை Kallar Reclamation Scheme Society அணுகி, அதில் நிதியை பெற்று, அதன் மூலம் வேலை நடைபெற்றது. Kallar Reclamation Scheme Society சூப்பர்வைசராக பணிபுரிந்த சூரியநாராயாணத் தேவர் அதாவது நடிகர் SSR ன் தகப்பனார் அவர்களும், இந்த வேலை நடைபெற முழுக்காரணம், அதனால் அந்த ஊரில் வெள்ளையன் தேவர், சூரியநாராயாணத் தேவர் குடும்பத்திற்க்கும் முதல் மரியாதை கொடுப்பார்கள், அந்த ஊர் கரட்டூர் என்று அழைக்கபடுகின்ற தெய்வேந்திரபுரம் ஆகும்.

வைத்தியநாதபுரத்தில், எல்லோரும் படிக்க பள்ளிகூடம் இல்லாததால் கள்ளர் பள்ளி ஒன்றை கட்டினார்.

குணா குகை - உயிரோடு வைக்கும் பிணவறை ஊட்டி/கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஊட்டியில் ஆங்கிலேய...
09/03/2025

குணா குகை - உயிரோடு வைக்கும் பிணவறை
ஊட்டி/கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன்.
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை. கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறவில்லை. ஏன் தெரியுமா ? இரக்கமில்லாத பள்ளங்கள்,குகைகள்,இருட்டு தான் காரணம். தமிழகத்தில் ஆபத்தான மலைவாசஸ்தலம் என்றால் அது கொடைக்கானல் தான். 1850 ஆண்டு வாக்கில் அமெரிக்க மிஷனரிகளை மட்டும் தான் கொடைக்கானல் சற்று ஆரத் தழுவி கொண்டது, ஆனால் அவர்களாலும் பெரிதாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மஞ்சு மூடும் கொடைக்கானலின் அதே அழகு தான் அதிக ஆபத்தான பகுதியாக கொடைக்கானலை வைத்திருக்கிறது.
தற்போது 'குணா' குகை என்று அழைக்கப்படுகிற குகைக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ‘டெவில்ஸ் கிச்சன்’ (சாத்தானின் சமையலறை). மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் காட்டப்படுவது போலப் பல உயிர்களைப் பலி வாங்கிய அந்தப் பகுதியில் 'குணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க, பின்பு ‘குணா கேவ்’ எனப் பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது.
இந்த பாறைகள் எல்லாம் எதோ நேற்று உருவானது அல்ல. பல மில்லியன் ஆண்டுகளாக உருவானவை. மழை பெய்து நீர் பாறையில் பல லட்சம் ஆண்டுகளாக பாய்ந்து வழ வழப்பு ஏற்பட்டு பாறைகள் இரண்டாக பிளந்து உள்ளே பல மடிப்புகள் ஏற்பட்டதன் விளைவே தற்போதையை வடிவத்தில் இருக்கும் Pillars Rock. இதற்கு சிக்கலான புவியியல் அம்சமங்கள் உள்ளன.
கொடைக்கானலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொயர் பாயின்ட் சாலையில் அமைந்துள்ள குணா குகைகள், வழிநெடுக தேவதாரு மரங்களாலும் குன்றுகளாலும் சூழப்பட்டது. 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகைகள், பயணிகளைக் கூட்டம் கூட்டமாக ஈர்ப்பதற்கு 'குணா' படத்தினை தாண்டி அதில் நிறைந்திருக்கும் ஷோலா மரங்களின் முறுக்கப்பட்ட பின்னிப் பிணைந்த வேர்கள் பயணிகளுக்கு மர்ம உணர்வைத் தருகின்றன.
குணா போன்ற குகையில் விழும் நபர்கள் எவ்வாறு இறப்பார்கள் என தெரியுமா ? உடனே மரணம் நிகழ்ந்து விட்டால் ஒன்றும் தெரியாது. ஆனால் இவர்கள் உள்ளே விழும் போதே தலை,முதுகு,கை,கால் என பாறையில் நொறுங்கி தான் உள்ளே விழுவார்கள். அப்போதே பாதி உயிர் இருக்காது. சுய நினைவு திரும்பும் போது வெளிச்சமே இல்லாத இருட்டில் வௌவால் சத்தங்களுடன் குடலைப் பிடுங்கும் நாற்றத்துடன் தான் இருக்கும். காரணம் பாறையில் படிந்த பாசிகள் உருவாக்கும் வாடையில் வௌவால் எச்சமும் கலந்து அது ஒரு இருட்டு பிணவறை போல் தான் இருக்கும்.
உங்களால் கத்தவும் முடியாது. அப்படியே கத்தினாலும் மேலே கேக்காது. உறைய வைக்கும் குளிரில் உணவும் தண்ணீரும் இல்லாமல் நரக வேதனை அனுபவித்தே சுமார் நான்கு ஐந்து நாட்களில் இறந்து போவார்கள்.
பாதி உயிர் இருக்கும் போது அந்த மூன்று நான்கு நாட்கள் கண் முன் நாம் இருப்பது உண்மையா அல்லது கனவா அல்லது இறந்து நரகத்திற்கு வந்து விட்டோமா என்ற பித்துப் பிடித்த மனக்குழப்பத்தில் தான் கடைசி உயிர் பிரியும்.
உள்ளே விழுந்த உடலை யாராலும் மேலே கொண்டும் வர முடியாது. உறைய வைக்கும் குளிர் என்பதால் உடல் உடனே மக்கிப் போகவும் செய்யாது. உடல் சொத சொத என ரெட் வெல்வெட் கேக் போன்று இருந்து சில வாரங்கள் பிறகே உடல் மக்கி வெறும் எலும்பு கூடு மட்டும் மிஞ்சும்.
வனத்துறை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இவ்வளவு கறாராக இருப்பதில் தவறே இல்லை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களை விட்டுவிடலாம். ஆனால் வம்படியாக அந்த குகைக்குள் அப்படி என்ன தான் இருக்கு ன்னு ஊளை விட்டு கத்திட்டே அறியாமல் விழுந்து ரணக் கொடூரமாக அடிபட்டு இறப்பதற்கா நாம் இந்த பூமியில் பிறந்துள்ளோம் ?
மனிதர் உணர்ந்து கொள்ள இது சாதாரண குகைகள் அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது..

Address

Kodaikanal
624101

Website

Alerts

Be the first to know and let us send you an email when You're Restricted,Monetisation Warning,See why posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category