KodaiHub

KodaiHub Kodaihub welcomes you to experience Kodaikanal with a broad range of services like Tree House, Bamboo

15/07/2026
13/07/2026
ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு எவ்வளவு பிராணவாயு அதாவது ஆக்சிஜன் தேவை என்று தெரியுமா?சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக...
13/07/2026

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு எவ்வளவு பிராணவாயு அதாவது ஆக்சிஜன் தேவை என்று தெரியுமா?

சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மி.லிட்டர் அளவிற்கு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உறுப்பினர்கள் என்றால்.. நீங்கள் சுவாசிக்க அதாவது உயிர் வாழ குறைந்தபட்சம் 50000 இலைகள் கொண்ட ஒரு மரம் அவசியம்.

காற்றிலே ஆக்சிஜன் உண்டு என்றாலும், கூடவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஜன், சுவாசித்தலை நிலைகுலையச் செய்கின்றன. கூடவே இரசாயன வாயுக்கள், கார்ப்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வாகனங்களின் கரும்புகை என்று காற்று கடுமையாக மாசுபட்டிருக்கிறது. இதனால் மனிதன் உயிர் வாழ குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது இன்றியமையாததாகும்.

குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கொண்டு ஆக்சிஜனையும் வெளிப்படுத்துகிறது.

ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் துளசியும், மூங்கிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதனால், வீட்டுத் தோட்டத்தில் இவைகளை அதிகமாக வளர்க்கலாம்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆளாளுக்கு மாட்டிக் கொண்டு சுற்றும் நாள் வரும்முன் மரங்களை வளர்த்து அதை இயற்கையாகப் பெறுவதே புத்திசாலித்தனம்.

13/07/2026

கோயம்புத்தூர் ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சேலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பு மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூரில் பொறுப்பேற்ற பிறகும், அவர் தனது அன்றாட எளிய வாழ்க்கை முறையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்துகொள்ளவில்லை. தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்குத் தினந்தோறும் சைக்கிளிலேயே பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், தற்போதும் அதே நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

ஆடம்பரங்களை விரும்பாத நீதிபதி சிவகுமார், தனது வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துக்கொண்டு சைக்கிளில் நீதிமன்றத்திற்கு வருகிறார். நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையில் அமர்ந்து சாப்பிடாமல், மதிய வேளையில் நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் அமர்ந்து பொதுவான இடத்திலேயே தனது உணவைப் பகிர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் எளிய மனிதராகத் தனியாக நடந்து செல்வதையே அவர் விரும்புகிறார். தனக்குப் பின்னால் டவாலி அங்கி அணிந்த ஊழியர்கள் யாரும் பாதுகாப்புக்கோ அல்லது மரியாதையாகவோ உடன் வருவதை அவர் முற்றிலும் தவிர்த்து விடுகிறார். இவருடைய இந்த அதீத எளிமையான குணம் சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

13/07/2026

ஒரு நடிகரின் படத்தின் டீஸரை சில லட்சம் பேர், அல்லது கோடி பேர் பார்த்திருப்பதைத்தான் இதுவரை கேட்டிருக்கிறோம்..

ஒரு ஆசிரியை அதுவும் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, தனது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வசதியாக வடிவமைத்த கணிதப் பாடத்தின் செயலியை பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடப்போகிறது..

அந்த ஆசிரியரின் பெயர் ரூபி.

பாடம் நடத்தும் எளிமை அருமையாக இருக்கும். Algebra வை எளிய நடையில் சொல்லி கொடுக்க இவரை மிஞ்ச யாரும் இல்லை..

இவரது இலவச கல்வியை youtube மூலம் பல குழந்தைகள் பயன் பெறுகிறார்கள்..

மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அற்புதமான ஆசிரியராக வலம் வருகிறார்..

பணிகள் தொடரட்டும்..வாழ்த்துக்கள்

12/07/2026
If you've been here, you know the vibe. If you haven't, you're missing out. 📍 Can you guess where this is in Kodaikanal?...
10/07/2026

If you've been here, you know the vibe.
If you haven't, you're missing out.

📍 Can you guess where this is in Kodaikanal?
Drop your answer below 👇

*ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக்  #பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து* ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின...
06/07/2026

*ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் #பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து*

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.

ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரித்து வரும் புவியில், காணாமல் போகும் கடல் பனி அடுக்குகள், பூவிப் பரப்பின் சராசரி வெப்ப நிலை அதிகரிக்க காரணமாகும். இந்த பனி அடுக்குகள் 80 சதவீத சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

கடல் பனி அடுக்குகள் உருகும் போது, பெருங்கடல்களில் மேற்பரப்பின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. பெருங்கடல்கள் 90 சதவீத சூரிய ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன. அது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் சூடாக்குகிறது. இதை ஆங்கிலத்தில் அல்பெடோ எஃபெட் (Albedo Effect) என்கிறார்கள்.

வெளிர் நிறங்கள் வெப்பத்தை எதிரொலிக்கும், அடர் நிறங்கள் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் என்கிற எளிய தத்துவத்தால் இந்த விளைவு ஏற்படுகிறது.

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உறைவதும், உருகுவதும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் ஒரு விஷயம். மார்ச் மாதங்களில் உறைந்து கிடக்கும். செப்டம்பர் மாத காலத்தில் உருகிய நிலையில் இருக்கும்.

ஆர்டிக் கடல் பனி அடுக்குகள் சுருங்கி வருவதாக களத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

கடல் பனி அடுக்குகள் சுருங்குவதால், பெருங்கடல் பரப்புகள் அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே இது ஒட்டுமொத்தமாக நிலப்பரப்புகள் மற்றும் கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன.

பனியால் மூடப்பட்டிருக்கும் பகுதிகள் குறைந்து, நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகள் அதிகரித்து வருவது, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால்தான் புவியை சூழ்ந்த வளிமண்டலத்தின் வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கிறது. அது அபாய அளவை எட்டிய பிறகு மனிதர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அதன் வெப்ப நிலையை மாற்ற முடியாமல் போகிறது.

வட துருவத்தில் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது வடமேற்கு போக்குவரத்துப் பாதையை திறந்துவிடுகிறது. இந்த வணிகப் பாதை வட அட்லாண்டிக் மற்றும் வட பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது.

கிரீன்லாந்து மற்றும் கனடா நாட்டுக்கு மத்தியில் உறைந்து கிடக்கும் ஆர்டிக் பெருங்கடலில் ஒரு போக்குவரத்துப் பாதையைக் கண்டுபிடிக்க 19ஆம் நூற்றாண்டில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் கோடை காலத்தில் கடல் பகுதி உருகுவதால், எதிர்காலத்தில் அது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் ஒரு தடமாக மாறலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிலரோ, இது உலக கப்பல் போக்குவரத்தில் ஏற்படவிருக்கும் மிகப் பெரிய புரட்சிகரமான மாற்றமாக இருக்கலாம் என்கிறார்கள். சிலரோ இது அப்பகுதியில் ஏற்படவிருக்கும் பேரழிவு என்கிறார்கள்.

அவ்வழித் தடத்தில் அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து, அப்பகுதியில் இருக்கும் கடல் வாழ் உயிரினங்களின் சூழலியலையை பாதிக்கும் என தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள்.

இந்த துருவ பகுதியில் கப்பல்கள் விபத்தை எதிர்கொண்டால் அது மிக மோசமான மாசுபாட்டை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கடல் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவதால் சில விலங்கினங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இதில் போலார் பனிக் கரடிகளும் அடக்கம்.

பனிக் கரடிகளின் உடல் எடையை தாங்கும் அளவுக்கு பனி அடுக்குகளின் அடர்த்தி இல்லாததால், அவ்உயிரினங்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தி இரையை வேட்டையாட வேண்டி இருக்கிறது அல்லது ஒட்டுமொத்தமாக இரையை வேட்டையாடுவதே சிரமமாகி இருக்கிறது.

பனிக்கரடிகள் தனக்கு போதுமான உணவு கிடைக்காததால், மக்கள் வாழும் இடக்களுக்கு உணவைத் தேடி வருகின்றன.

இது போக விஞ்ஞானிகள் மத்தியில் இருக்கும் மற்றொரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் அது நீரோட்டம். கடல் பனி அடுக்குகள் உருகுவதால் ஆர்டிக் பகுதியில் கடலின் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக கடலின் உப்பு நீரை விட, நன்னீரின் அடர்த்தி குறைவாக இருக்கும். திடீரென ஆர்டிக் கடலில் உருவாகும் நன்னீர், வடக்கு அட்லாண்டிக் கடலில் கலப்பதால் கடல் நீரோட்டத்தின் வலிமை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இது ஒட்டுமொத்தமாக உலகின் பருவநிலை அமைப்பில் காலநிலை முறைகளை பாதிக்கலாம்.

Address

Kodaikanal
624101

Alerts

Be the first to know and let us send you an email when KodaiHub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share