10/07/2017
இதை எழுதியவர் யார் என்று எனக்கு தெரியாது?..ஆனாலும் இதை எழுதியவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்"!!
🚗🚗ஓட்டுனரின்
உள்ளக்குமுறல்
கேட்பீரோ...⚠
கண் விழித்து காத்திடுவான்
கவலை மறந்து ஓட்டிடுவான்
எப்போதும் விழித்திருப்பான்
எல்லோர்க்கும் வழி விடுவான்
ஒருவேளை சாப்பாடு
மறுவேளை பெரும்பாடு,
ஊருவிட்டு ஊரு போவான்
இவன் பேரு மட்டும் மறந்திருப்பான்,
படுத்த இடம் தூங்கிடுவான்
இவன் படும்பாடு புரியாது,
பள்ளம் மேடு பார்த்திடுவான் உள்ளம் அறிந்து உதவிடுவான்,
மழை வெயிலில் ஓட்டிடுவான்
மயிரிழையில் உயிர் பிழைப்பான்,
நால்புறமும் கண்ணிருக்கும்
இவன் மனசு மட்டும் வீட்டிலிருக்கும்..
எல்லோர்க்கும் 'ஒலி'கொடுப்பான்
இவன் 'வலி'மட்டும் விலகாது,
எல்லோர்க்கும் கை கொடுப்பான்
இவன் கை மட்டும் காச்சிருக்கும்,
முன் இருக்கையில் இவனது உடலிருக்க,
பயணிப்போராய்
உயிர்
பல்கிப்பெருகி இருக்கும்....
கண்ணாடியை இவன் பார்ப்பான்
மனக்கண்ணாடி இவனை பார்க்கும்,
யார் யாரோ வருவார்கள்...
இவனது
நிலைத்தன்மையாலே
நிம்தியாய்
இல்லம் போவார்கள்
இரவு பகல் ஓட்டிடுவான்
இறுதியிலும் அசரமாட்டான்,
பசி வந்தா தேநீரு
பசி மறக்க தண்ணீரு,
இவன் மனைவியின் கையை விட..!
ஸ்டியரிங்'கை'தான் அதிக நேரம் பிடிச்சிருப்பான்,
பாவப்பட்ட ஜென்மம்ங்க...
இவன்
பழி போட்டா தாங்க மாட்டான்,
உங்களின்
வழிச்செலவே
இவனது
வாழ்க்கைச்செலவு...
ஓட்டுனரை நேசிப்பீர்
கை கொடுப்பீர்
காத்திடுவீர்...🚕🚕🚕🚕👮