A V M tours & travels

A V M tours & travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A V M tours & travels, Tour Agency, 1/122 vivekanantha nagar, Kumbakonam.

25/07/2018

#காஃபாவை_பற்றி #தெரிந்து_கொள்வோம்

கஃபா என்றாலே சதுர வடிவக் கட்டிடம் என்று பொருள் இது சதுர வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. கஃபத்துல்லாஹ்வின் மொத்த உயரம் ஐம்பத்து மூன்று அடி (14 மீட்டர்) ஆகும். நீளம் மேற்கில் நாற்பத்தைந்து அடி கிழக்கில் நாற்பத்தி ஒன்பது அடி வடக்கிலும் தெற்கிலும் முப்பத்தி ஒரு அடி. இதன் தென்கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த் என்றும் வடகிழக்கு மூலைக்கு ருக்னுல் இராக்கி எனவும் தென்மேற்கு மூலைக்கு ருக்னுல் யமானி எனவும் வடமேற்கு மூலைக்கு ருக்னுஷ்ஷாமி எனவும் கூறப்படுகிறது.

இதன் தென்கிழக்கு மூலையில் தவாஃப் செய்யும் இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி வளையத்திற்குள் ஹஜருல் அஸ்வத் என்ற கல் பதிக்கப்பட்டுள்ளது இங்கிருந்து தவாபை ஆரம்பிப்பார்கள். தவாஃபை முடிக்கும் இடமும் இதுதான்.

ஒரே கல்லாக இருந்த ஹஜருல் அஸ்வத் ஹிஜ்ரி 319 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் உடைந்து போய் தற்போது சிறியதும் பெரியதுமான எட்டுத் துண்டுகளாக காட்சியளிக்கிறது.

ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் தரையிலிருந்து 2.25 மீட்டர் உயரத்தில் கஃபாவின் உள்ளே நுழைவதற்காக வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 1.90 மீட்டர். நீளம் 3.10 மீட்டர். இதன் கதவு முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

13,420,000 சவூதி ரியால் செலவில் 280 கிலோ தங்கத்தால் இக்கதவு தயாரிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு மூன்று முறை இக்கதவு திறக்கப்பட்டு உள்பகுதி ஜம்ஜம் நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும். ஹஜருல் அஸ்வதுக்கும் வாயிலுக்கும் இடையிலுள்ள 4 அடி அகலமுள்ள சுவற்றிற்கு முல்தஜம் என்று பெயர்.

ருக்னே இராக்கி மற்றும் ருக்னே ஷாமி ஆகிய கஃபாவின் இரு மூலைகளுக்கும் எதிரில் அரை வட்ட வடிவில் 1.32 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு ஹதீம் என்று பெயர். இதற்கு ஹிஜ்ரே இஸ்மாயீல் என்றும் ஒரு பெயருண்டு. இச்சுவரின் சுற்றளவு 21.57 மீட்டர் நீளமாகும்.

ஆரம்பத்தில் இதுவும் கஃபாவின் உட்பகுதியாகத்தான் இருந்தது. குரைஷிகள் இதனைக்கட்டிய போது போதிய பணவசதி இல்லாத்தால் முன்பு இருந்த அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தை குறைத்து விட்டனர். குறைக்கப்பட்ட அப்பகுதியும் கஃபாவில் சேர்ந்ததே என்பதை தெரிவிப்பதற்காக அரை வட்ட வடிவில் சிறிய மதில் சுவரை எழுப்பிவிட்டனர்.

இந்த ஹதீமுக்கு நேர் மேலே கஃபாவின் மீது விழும் மழை நீர் வடிவதற்காக ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டுள்ளது. முன்பு வெள்ளியால் செய்யப்பட்டிருந்த இக்குழாய் இப்போது தங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீஜாபுர் ரஹ்மத் என்று பெயர்.

கஃபாவைச் சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு ஹரம் ஷரீஃப் என்று பெயர். தற்போது இதன் உட்புற, வெளிப்புற தொழுகை இடங்களை உள்ளடக்கி இதன் பரப்பளவு 88.2 ஏக்கராகும்.

இப்பள்ளியில் தலா 89 மீட்டர் உயரம் கொண்ட ஒன்பது மினராக்களும் வெளியிலிருந்து உள்ளே வருவதற்காக 95 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தரை தளத்தில் வழவழப்பான சலவைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. கஃபாவைச் சுற்றியுள்ள தவாஃப் செய்யும் இடத்திற்கு மதாஃப் என்று பெயர். இதில் ஒரு மணிநேரத்திற்கு 1,30,000 பேர் வரை தவாஃ.ப் செய்ய முடியும். ஒரே சமயத்தில் 8,20,000 பேர் தொழும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது, 60,000 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட கேமராக்களும் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டுள்ளன.

இறைவன் நாடினால் 2018 ஹஜ் செய்ய நிய்யத் வைத்தவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.
14/03/2018

இறைவன் நாடினால் 2018 ஹஜ் செய்ய நிய்யத் வைத்தவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.

27/02/2018

இன்ஸா அல்லாஹ் 2018 ம் ஆண்டு ஹஜ் செய்ய விரும்பும் ஹாஜிகள் சிறப்பான முறையில் ஹஜ்ஜை நிறைவேற்ற எங்கள் நிறுவத்தை தொடர்பு கொள்ளவும்.

Address

1/122 Vivekanantha Nagar
Kumbakonam
612001

Telephone

+918883338080

Website

Alerts

Be the first to know and let us send you an email when A V M tours & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category