Rahuman Carriers

Rahuman Carriers ASHOKE LEYLAND DOST ____FOR___RENTS__RS11\KM____ DAYRENTAL__RS-1799/DAY. CONTACT___S.AASAK CELL:9585800163

ரஹ்மான் கோியா்ஸ்   தோஸ்த் வண்டி  வாடகைக்கு  போன் : 9585800163,9626930819
05/08/2018

ரஹ்மான் கோியா்ஸ்
தோஸ்த் வண்டி வாடகைக்கு
போன் : 9585800163,9626930819

 #பட்டுக்கோட்டை_தமுமுக_அவசர_ஊர்தி  #ஓட்டுனர்_மீதான_தாக்குதல்  #வன்மையாக_கண்டிக்கதக்கது!!!பட்டுக்கோட்டை தமுமுக நகர துனை த...
03/05/2018

#பட்டுக்கோட்டை_தமுமுக_அவசர_ஊர்தி #ஓட்டுனர்_மீதான_தாக்குதல் #வன்மையாக_கண்டிக்கதக்கது!!!

பட்டுக்கோட்டை தமுமுக நகர துனை தலைவர் ராஜா வயது 30 (ஆம்புலன்ஸ் டிரைவர்)மீது கொலை தாக்குதல் மஞ்சவயல் கிராமத்தில் நடந்த இரு சமூகத்தினர் மோதலில் இருவர் கொலை செய்யபட்டனர் பிரேத பரிசோதனை செய்த பிறகு இன்று அதிராம் பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை காவல் துறையின் அழைப்பின்பேரில் காவல் துறை வாகனத்தை துரிதமாக செலுத்த சொல்ல பிரேதத்தை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் சோ காவல் துறை சொல்வது போல் நடந்தும் துவரங்குறிச்சி சேர்ந்த இறந்தவரின் உறவினர் 5 க்கும் மேற்பட்டவர் பட்டுக்கோட்டை டிஸ்பி முன்னிலையிலே கொலை வெறி தாக்குதல்கள் நடத்தி உள்ளனர் இது எந்த விதத்தில் நியாயம்?? உதவிக்காக பட்டுக்கோட்டை காவல் துறை தமுமுக அழைக்க அவர்கள் முன்னிலையிலே கொலைவெறி தாக்குதல் நடந்து இருக்கே!!!? காவல் துறை துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தவரும் பட்சத்தில் பட்டுக்கோட்டை தினரும் அளவிற்கு மாபெரும் காவல் துறை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கின்றேன்!!!!

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!மனிதநேய மக்கள் கட்சித் தலை...
03/05/2018

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் உணர்வுகளுக்கும், தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்காத மத்திய பாஜக அரசு மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி தொடர்பான வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்குறைஞர் “காவிரி நிதிநீர் தொடர்பான வரைவுத் திட்டம் தயாராக உள்ளதாகவும் ஆனால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெற முடியவில்லை” என ஒரு வெற்றுக் காரணத்தைக் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கிடைக்காமல் செய்துவருகிறது.

ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட வேண்டுமெனில் கர்நாடகம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய மத்திய அரசோ தனது அரசியல் லாபத்திற்காக தமிழகத்தையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வருகிறது.

தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுவதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. காவிரிக்காக தமிழகத்தில் வரலாறு காணாத எழுச்சிப் போராட்டங்களை நடத்திவரும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசைப் பணிய வைக்க மேலும் வீரியமான போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Address

VILLAPURAM
Madurai
625012

Telephone

+919585800163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahuman Carriers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category