Madurai Sri Sai Avathar Travels

Madurai Sri Sai Avathar Travels Madurai familier travel company with tour packages,24×7 service, with reasonable. Rate,quality servic

இரண்டாம் நாள்இன்று19/4/2018மாசி வீதிகளை அழகாக்கிய வண்ணமிகு ஊர்வலம்......
19/04/2018

இரண்டாம் நாள்

இன்று19/4/2018

மாசி வீதிகளை அழகாக்கிய வண்ணமிகு ஊர்வலம்......

மதுரையில் சித்திரை திருவிழாநேற்று 18/4/2018முதல் நாள் !மாசி வீதி உலா ...
19/04/2018

மதுரையில் சித்திரை திருவிழா
நேற்று 18/4/2018

முதல் நாள் !

மாசி வீதி உலா ...

நம் அன்னையின் ஆபரணங்கள்..நம் அன்னை மீனாட்சிக்கு பல்வேறு காலகட்டங்களில், மதுரையை அரசாண்ட, மன்னர் பெருமக்களாலும், அருட் கொ...
17/04/2018

நம் அன்னையின் ஆபரணங்கள்..
நம் அன்னை மீனாட்சிக்கு பல்வேறு
காலகட்டங்களில், மதுரையை அரசாண்ட,
மன்னர் பெருமக்களாலும், அருட்
கொடையாளர்களாலும் சூட்டப்பட்ட,
மணி மகுடங்கள்.. நவரத்தின மாலைகள்..
முத்துப் பட்டாடை, முத்துக்கிரீடம்,
திலகக்கிரீடம் (இரு வகை),
திருமுடிச் சாந்து கிரீடம், ராயர் கிரீடம்,
சும்மாடு கிரீடம் (இரு வகை), கல்யாண கிரீடம்,
மாம்பழக்கொண்டை கிரீடம்
ஆகியவற்றின் தரிசனம்..

நம் அன்னையை அணி செய்யும்
ஆபரணங்களுக்கு நம் வந்தனங்கள்..

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)      பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு  வ...
29/01/2018

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)
பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வருடம் ஒரு முறையாவது பயணம் சென்று வருவது வாழ்க்கையை புதியதாய் உணர வைக்கும் ...அதிக தூரம் உள்ள நாடுகளுக்கு தான் போக வேண்டும் என்பதில்லை..நமக்கு மிக அருகிலேயே நாம் பார்காமல் தவற விட்ட பல அருமையான இடங்கள் உள்ளது...அப்படி நாங்கள் வெகுநாளாய் தவற விட்டிருந்த கொல்லிமலை பார்க்க கிளம்பினோம் ...மலை மேல் ஏறும் வழி சற்று குறுகலாகவே இருக்கிறது எதிரில் வாகனம் வரும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்...70கொண்டைஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை ...ஏறும் போதினில பச்சை மூலிகையின் வாடையும் குளிரும் வரவேற்க்கும்...ஏறியவுடன் சோளக்காடு என்ற ஊர் வருகிறது..அங்கு தான் கடைகள் இருக்கும்...அங்கிருந்து 3 கிலோமீட்டர் போனதும் ரிசார்ட்ஸ் இருக்கிறது....மிளகு கொடியும் பட்டை மரங்கள்,தைல மரங்கள் சூழ்ந்து அழகாய் காட்சியளிக்கும் அதில் .மிக குளிராக இருக்கும் என்பதால் அதற்கேற்ற உடைகலை எடுத்து செல்வது நல்லது ....அரசு மூலிகை பண்ணை ,தற்கொலை முனை,அய்யாறு அருவி,கொல்லிப்பாவை கோவில்,சீக்குப்பாறை,அறப்பாலீஸ்வரர் ஆலயம் ஆகாய கங்கை இங்கே படிகட்டுகள் 1000 இருகிறது அதில் இறங்கினால் அழகான அறுவி
இதில் இறங்கமுடியாதவர்கள் எதிரில் 100 படிகட்டுடன் கூடிய சிரிய அறுவி இருகிறது
படகு சவாரி ,வீயு பாயிண்ட் என பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது...ஓவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் பயணம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது...மேகங்களின் அடர்த்தியுள் நாம் பயணிப்பது அருமையாக இருக்கும்...வரும் வழியில் வீட்டிற்கு வேண்டிய தானியங்கள் அனைத்தையும் வாங்கி வரலாம்...மலை தேன் கிடைக்கும் ..பச்சை மிளகு பறித்து வரலாம்,பிள்ளைகளும் இந்த பயணத்தை மிகவும் ரசிப்பார்கள்...மொத்தத்தில் கொல்லிமலை பயணம் நமக்குள் ஏகாந்தமான மன அமைதியை தரும் இடமாகும்......
அமைதியை விரும்புவர்களுக்கு அழகான இடம்!
எந்த ஒரு பரபரப்பும் இல்லாத ஊர்!

21/01/2018

7D & 6N Kerala Tour Package- A COMPLETE PACKAGE FOR ALL

Day 01:

Arrival & Munnar Hill Station

Arrival at Cochin International Airport in the morning. Upon breakfast at 08:00 am, proceed to 'Munnar' hill stations. Enroute visit 2 waterfalls. Upon arrival check in to hotel. Afternoon continue sightseeing covering Mattupetty dam, Kundala Lake, Blossom Park, Echo Point, View Point, Boating & Tea Plantations. Overnight stay at hotel in Munnar.


Day 02:

Thekkady Hill Station

Upon breakfast at 08:00 am, check out and transfer to Thekkady hill station (Approx 100 kms & 4 hrs drive). Upon arrival check in to hotel. Evening proceed to sightseeing covering boating at 'Periyar Tiger Reserve' lake, Kalaripayattu-Kerala martial arts form and Kathakali-the traditional mythology based dance-art form of Kerala. Overnight stay at hotel in Thekkady.

Day 03:

Thekkady

Early morning at 05:00 am, proceed to jungle jeep safari and stand a chance to spot real wild life animals. Return to hotel at 09:00 am. Upon breakfast visit spice plantation for purchase of authentic Indian spices as well as home made Indian chocolates. Overnight stay at hotel in Thekkady.

Day 4:

Alleppey Houseboat Cruise & Overnight Stay

Upon early breakfast at 07:00 am, checkout at 08:00 am and transfer to Alleppey for a Houseboat Cruise (Approx 140 Kms & Approx 4 hours drive). Check in at 12:00 am and cruise 'Vembanad Lake' along the day. Towards evening anchor at lakeside. Overnight stay in houseboat in Alleppey.

Day 05:

Cochin Sightseeing & Stay

Upon breakfast at 08:00 am, checkout at 09:00 am, proceed to Cochin (Approx 140 Kms & Approx 4 Hrs). Enroute visit Spices Plantation in Munnar. Upon arrival check in to hotel. Afternoon continue sightseeing covering Fort Cochin, Chinese Fishing Nets, Mattanchery Ducth Palace, Jewish Synogogue, Jew Town, St.Francis Basilica and Marine Drive Kochi. Overnight stay at hotel in Kochi.

Day 06:

Cochin Shopping & Athirappilly

Upon breakfast at 09:00 am, proceed to shopping at MG Road in Cochin. Towards afternoon free at leisure. Check out in between and proceed to 'Bahubali' fame 'Athirappilly' waterfalls region. Upon arrival check in to Ayursoukhyam Ayurvedic Resort Athirappilly. Overnight stay at resort in Athirappilly.

Day 07:

Ayurveda Resort & Departure

Upon breakfast at 09:00 am, proceed to sightseeing at Athirappilly & Vazhachal waterfalls, Thumboormuzhi-Ezhattumugham hanging bridge. Interested guests can take ayurveda treatments in between. Later in the evening check out and drop off at Cochin international airport for departure to Malaysia. Bon Voyage and Please Come Back Again!!!!

Package Price - In Deluxe 3 star hotel accommodation for Per Adult: RM.1499/- only

INCLUSIONS:

- Meet & Greet Assistance on arrival
- Airport Hotel round trip transfers in Cochin
- 5 Nights stay in 3 star rated/facility hotels
- 1 Night stay in Deluxe houseboat
-All transfers & sightseeing tours by AC Tempo Traveler
-All Toll and parking
-All Applicable taxes


EXCLUSIONS

- No other meals other than breakfast
- Expenses of personal nature, such as laundry, telephone calls, room service, alcoholic beverages, mini bar charges, tips, portage, camera fees etc
- All/ Any other entry passes of places of interests in the due course that are optional in the tour and of interest of the guests
- Travel insurance while in India


HOTEL DETAILS

Munnar: The Great Escapes Resort
Thekkady: Treetop
Alleppey Houseboat: Wondercruises Deluxe AC Boat
Cochin: Travancore Court
Athirappilly: Ayursoukhyam Ayurvedic Resort


NOTES

- No booking has been made yet and the price mentioned is B2B whereas the mentioned prices is valid for a period of maximum 30 days within which booking has to be made with minimum 50% advance payment (If the traveling date is within less than 30 days from the date of booking, 100% payment has to be made upfront).
- Indian domestic air ticket prices fluctuates and hence we appreciate to confirm the booking ASAP
- Balance 50% payment has to be transferred minimum 30 days prior to the dates

07/12/2017

DAY 1 : COCHIN – GURUVAYUR
Arrive at Cochin airport, and transfer to Guruvayur. Check-In at your hotel and free for lesiure. Overnight stay at hotel.

DAY 2 : GURUVAYUR – MUNNAR
After breakfast, visit Guruvayur Temple & Elephant Camp. Later drive towards Munnar Hill Station. On the way, explore Valara, Cheeyappara Waterfalls, Karadippara view point and Blossoms Hydel Park. Then Check-in to your hotel. Munnar is the most beautiful and popular Hill Station of South India. Evening you can enjoy boating at your own.

DAY 3 : MUNNAR – THEKKADY
After breakfast, move towards Thekkady. On your way, explore Spice Plantations, View Points, Periyar wild sanctuary boating. Arrive Thekkady and Check in to your hotel. Later visit Spice market, and enjoy evening cultural activities like Kathakali & Kalarippyttu at your own cost. Also explore optional activities like Trekking, Night Jungle safari, Bamboo rafting, etc. by your own.

DAY 4 : THEKKADY – ALLEPPEY
After breakfast, continue your journey towards Alleppey. Check in to your House boat. Houseboat is Ac Premium One bedroom with all meals (Breakfast, Lunch, and Evening Snacks & Dinner).

Enjoy the Kerala backwater cruise through Vembanad Lake, Paddy Fields, Kuttanadan Backwater life, Fishing, Toddy Shops and Backwater Islands. This is the only region, which cultivate rice below sea level.

DAY 5 : ALLEPPEY – COCHIN DROP
Morning after breakfast, Drive to Cochin. Visit Fort Cochin,
Mattancherry, St Francis xaviers church, Chinese fishing net, Jewish Synagogue, Dutch palace, Museum, Marine Drive and enjoy Boating. Later transfer to Cochin airport/railway station to board your flight/train to onward destination. Tour ends.

✔️ COST INCLUDES :
* Accommodation at mentioned the above hotels or similar
* Accommodation on Dbl sharing basis
* DAILY BREAKFAST
* ALL MEALS DURING HOUSE BOAT STAY
* 01 SIM CARD ON ARRIVAL
* Daily 01 mineral bottle water per person basis
* Driver allowance, toll, parking, fuel charge and interstate
taxes.etc .
* Applicable taxes for Room Rent, Breakfast and transport

COST DOES NOT INCLUDES:
* Expenses of personal nature viz., telephone bills, Laundry,
Tips and use of mini bar in the room
* ANY POOJA, DHARSHAN ENTERTAINMENTS, ETC.
* Guide Charges & All Entrance Fee
* Any meals & services other than those as mentioned in cost
includes
* Alcoholic & non-alcoholic beverages during meals or
otherwise
* Tips at restaurants, concierge and driver.

Contact us

+91 9626035188
+91 9344132322

07/12/2017

👉South India Tour👈
🔮11Nights / 12Days🔮
🧐 ITINERARY :
Day01 : Cochin
Day02 : Cochin - Guruvayur - Cochin
Day03 : Cochin - Munnar
Day04 : Munnar - Thekkady
Day05 : Thekkady – Alleppey Houseboat
Day06 : Alleppey Houseboat - Trivandrum
Day07 : Trivandrum - Kanyakumari
Day08 : Kanyakumari - Madurai
Day09 : Madurai - Kodaikanal
Day10 : Kodaikanal - Palani
Day11 : Palani - Trichy
Day12 : Trichy: Drop

📞 Contact us
+91 9626035188
+91 9344132322

திருமலை - திருப்பதியில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி?திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்பவர்களில் ...
26/03/2017

திருமலை - திருப்பதியில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி?
திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்பவர்களில் இரண்டு விதமானவர்கள் உண்டு. காலையில் கிளம்பி, திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவே வீடு திரும்புபவர்கள் ஒருவகை. திருப்பதிப் பயணமா? கீழ்த்திருப்பதியில் ஒரு நாள்... மேல் திருப்பதியில் இரன்டு நாள் என மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தால்தான் மனதுக்கு நிறைவாக இருக்கும் என்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருபவர்கள் இன்னொரு ரகம்.
'மலையிலேயே இரண்டு நாள் அறை எடுத்துத் தங்குனீங்களா? நாங்களும் அப்படி இருந்துட்டு வரணும்னு நினைப்போம் ஆனா, முடியறதில்ல. ரெண்டாவது நாங்க ரூம் புக் பண்ண போறப்ப எல்லாம் ரூம் இல்லேனு சொல்லிடுவாங்க''னு பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
திருமலையில் தேவஸ்தான அறையில் தங்கி, புஷ்கரணியில் குளித்து,வராகசாமி தரிசனம் செய்து, பின்னர் சுவாமிதரிசனம் செய்யவேண்டும். ஒரு நாளாவது இரவில் திருமலையில் தங்கி எம்பெருமானின் அருளைப் பெறவேண்டும் என எண்ணும் பக்தர்கள் ஏராளம்.
திருமலையில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி?
திருப்பதிக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டால், சிலநாட்களுக்கு முன்பாகவே முடிவெடுத்துவிடுங்கள். கீழ்திருப்பதி மேல் திருப்பதி (திருமலை) இரண்டு இடங்களிலுமே திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஏராளமான அறைகள், முறையான பராமரிப்புடன் பக்தர்களின் தேவைக்காக கட்டப்பட்டுள்ளன. கீழ்த்திருப்பதியில் பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்புறம் 'சீனிவாசம் காம்ப்ளக்ஸ்' மாதவம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இரண்டு தேவஸ்தான விடுதிகள் உள்ளன.
திருப்பதி சென்ட்ரல் பஸ்-ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள 'சீனிவாசம் காம்ப்ளக்ஸில் ரூ. 200, ரூ.400, ரூ.600 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. மாதவம் கெஸ்ட் ஹவுஸில் ரூ.800, ரூ.1000 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. இவை பாதுகாப்புடன் முறையாகப் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனின் எதிர்புறம் உள்ளது, விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ். இங்கே, ரூ.300, ரூ.500, ரூ.800, ரூ.1300 ரூபாயில் அறைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. கீழ்த்திருப்பதியில் ஏராளமான தனியார் விடுதிகளும் உள்ளன.
திருமலையில் அதாவது மேல் திருப்பதியில், கோவர்த்தன், சப்தகிரி, கருடாத்ரி, வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், ராம் பகிஜா, பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் என ஏராளமான தேவஸ்தான விடுதிகள் உள்ளன.
இவற்றில் மட்டும் மொத்தம் ஆறு ஆயிரம் அறைகள் உள்ளன. மேல் திருப்பதியில் தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. இங்கே, ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.500, ரூ.600, ரூ.750, ரூ.1000, ரூ.1500, ரூ.2000 கட்டணத்தில் அவரவர் வசதிக்கேற்ப அறைகளைத் தேர்வு செய்து தங்கலாம். நாம் செலுத்தும் கட்டணத்துக்கேற்ப அறைகளில் வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டிருக்கும்.
இவற்றில் தங்க வேண்டுமென்றால், ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மாவட்டத்தில் இருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தம்பதியாகச் சென்று முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒருவர் மட்டும் தனிநபராகச் சென்று கேட்டால் , அறைகள் தரமாட்டார்கள்.
கோடைகால விடுமுறை என்பதால், பலரும் முன்பதிவு செய்வார்கள்.120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு தொடங்கிவிடும். உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை இல்லாத நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும். குறிப்பாக செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டால் உங்கள் பயணம் இனிமையாகும் திடுதிப்புனு திருப்பதி கிளம்புறீங்களா? இதைப் படிங்க முதல்ல...!
திருவேங்கடமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பயணத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:
· திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.

· சுவாமியை தரிசனம் செய்வதற்கு, 'சர்வதரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம் என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.

· சர்வ தரிசனத்தில், தரிசனம் செய்வதற்கு சாதாரண நாட்களில் 4 மணி முதல் 8 மணிநேரம் ஆகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். திவ்ய தரிசனத்தில் சர்வ தரிசனத்தை விட 2 மணி நேரம் குறைவான நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

· 'சிறப்பு தரிசனம்' என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், ஆன்லைன் மூலமாக புக் செய்துவிட்டு 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்யும் முறையாகும். ஒரு நபருக்கு மட்டும் அனுமதி. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முந்தைய தினமே முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவது நல்லது. வார நாட்கள் என்றால் மலைக்குச்சென்று அங்குள்ள விற்பனைப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

· உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடர்வது நல்லது. திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

· தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.

தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.

· திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் , மலைப்பாதையில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

· திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
· நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

· திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.

· திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
· தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.

· திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும், நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.

· கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
· கோயிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்.கோயில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யவோ கூடாது.
· கோயிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. கோயில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோயில் வளாகங்களில் காலணிகளை அணியக்கூடாது.

· தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்கால்களுடன்தான் பிரகாரங்களை வலம் வர வேண்டும். மறந்து அணிந்து வந்து விட்டால், அருகாமையிலிருக்கும் காலணிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம்.

· சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை சைலண்ட் மோடில் போட்டு அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு, லட்டு கௌண்டருக்குச் சென்று லட்டு வாங்கி முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் நிறையவே அலைய வேண்டியிருக்கும்.

· திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.

· கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்

Address

21, West Ponnagaram 7th Street, Karimadu
Madurai
625016

Telephone

9626035188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Sri Sai Avathar Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category