
26/08/2025
எல்லா நாளுமே டூர் பண்றோம் எப்பவாவது தான் எனக்கு ஆத்ம திருப்த்தி கிடைக்கும் தொழில் பணம. அப்படிங்பிறத தாண்டி அந்த மாதிரி ஒரு நிகழ்வு தான் இது .
திருச்சில இருந்து கொளசி ப்ரண்ட் ஜெனிட்டா பேசுறேன் பாஸ்கர் ஒரு டூர் ப்ளான் பண்றோம் ஆனா இது எல்லாரும் வரும் ஒரு நார்மலான டூர் இல்ல பட்ஜெட் ரெம்பவே முக்கியம் இல்லனா வேணாம்னு சொன்னாங்க
எனக்கு புரியல கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கனு சொன்னேன் நாங்க திருச்சில சமயபுரம் ரோட்ல சிறுகனூர் ஒரு ஹோம் வச்சிருக்கோம் அது அப்பா அம்மா இல்லத பசங்கள படிக்க வச்சி அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்வாரத்த கொடுக்கும் வரை நாங்களே பாத்துப்போம் கிட்ட தட்ட நாப்பத்தி ஒரு வருஷமா அப்பா முதல் நான் வரை பாத்துட்டு இருக்கோம்
கொஞ்ச பேர் செய்யும் உதவியால தான் இப்ப இருக்கும் பசங்கள படிக்க வைக்க முடியுது அதில் படிச்சி வெளிய போன பசங்களும் ஹோமுக்கு கொஞ்சம் உதவி பண்றாங்க அதனால கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் ஹோம் அப்படிங்கிறதால எப்போதும் எதாவது உதவி தேவைபட்டுட்டு தான் இருக்கும்னு சொன்னாங்க
ஹோம்ல வளர்ந்த பசங்க எல்லாம் சேர்ந்து ஒரு டூர் ப்ளான் பண்றாங்க அதான் ரெம்ப பட்ஜட்ல பண்ண முடியுமானு கேட்டேன்னு சொன்னாங்க நிச்சயமா பண்ணலாம் டேட் சொல்லுங்கனு சொன்னேன் டேட் சொன்னாங்க அந்த டேட்டல அண்ணனோட ஹோம் ஸ்டே காலியா இருந்துச்சு அவர் கிட்ட விபரத்த சொன்னேன் அவங்க கொடுக்குறத கொடுக்கட்டும்பானு அண்ணா சொன்னாரு
ஜீப்பு நம்மளோடது அப்படிங்கிறதால அதுலயும் எவ்ளோ கம்மி பண்ண முடியுமோ அவ்ளோ கம்மி பண்ணி கொடுத்தோம் .
வந்த எல்லாருமே அவ்ளோ சந்தோஷமா இருந்தாங்க பா ரெம்ப நன்றினு சொன்னாங்க இதுல என்ன இருக்கு எவ்ளோவோ நல்ல விஷம் பண்றீங்க அப்பா அம்மா இல்லாத குழந்தைகளை வளர்த்து ஆளக்கி சமூகத்தில் அவங்களுக்குனு ஒரு நன்மதிப்ப ஏற்படுத்தி விடுறீங்க அதுக்கு முன்னாடி இது எல்லாம் பெரிய விஷமே இல்ல எதோ என்னால முடிஞ்சதுனு சொன்னேன் .
உங்களுக்கு எதாவது இந்த ஹோம்முக்கு உதவி பண்ணனும்னு விருப்பம் இருந்தா அவங்க ஹோம் நம்மபர் கொடுத்து இருக்கேன் உங்களால முடிஞ்ச உதவிய நிச்சயமா செய்யுங்க முடியாதவங்க இது ஷேர் பண்ணி உதவுங்க …🙏🙏
ஜெனிட்டா மேடம் : 9443143380
இடம் : திருச்சி