Neyveli Guru Cabs

Neyveli Guru Cabs Name change Neyveli Guru cabs to Neyveli Guru Travels

25/03/2021

உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா ...?
*
இந்த விளம்பரம் ந்ம்மிடையே மிக பிரபலம் ஆகியுள்ளது.
*
ஆனால் ... நம்ம வாகனத்தில் ரியர் வியூ மிரர் இருக்கா ...?
என்று நாம் என்றைக்காவது யோசித்துள்ளோமா ?
*
ரோட்டில் ஒடும் வாகனத்தில் சுமார் 20 % ரியர் வியூ மிரர் சுத்தமாக கிடையாது....
*
சுமார் 40 % ரியர் வியூ மிரர் சரியான படி இருக்காது ...வேறு ஒரு திசை நோக்கி இருக்கும்....
*
வாகனத்தில் ரியர் வியூ மிரர் எதற்க்கு மாட்டுகிறோம் என்று மேலே சொல்லப்பட்ட 60 % நபர்கள் ஜஸ்ட் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் நல்லது...
*
வாகனத்தில் செல்லும் போது , வலது அல்லது இடது புறம் திரும்பும் முன்னதாக நமக்கு பின் பக்கம் யார் வருகிறர்கள் என்று பார்த்து விட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சரியான படி இன்டிகேட்டர் போட்டு அதன் பின் நாம் ஓட்டி செல்லலாம்.... இது தான் எல்லோரும் பாதுகாப்பான முறை...
*
மாறாக ... பின் பக்கம் யார் வருகிறர்கள் என்று பார்காமல் திரும்பினால் , நம்மை விட பெரிய வாகனம் என்றால் , நமது கதி அதோகதிதான் ......
*
நம்மை விட சிறிய வாகனம் என்றால் , அவர்கள் கதி அதோகதிதான் .....
*
முதியோர்கள் , கர்ப்பிணிகள், குழந்தைகள் , பெண்கள் என்று யார் நம்மால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியாது ...
*
தயவு செய்து சிந்தித்து செயல்படவும் ....

15/12/2020

வாடிக்கையாளர்கள் சிலர் தங்களின் பயணத்தின் நேரங்களை முடிவு செய்வதில் கவனமாக இருப்பது அவசியம். அதிகாலை 3மணி,4மணி என தங்களின் பயணத்தை துவக்குவது பயணிகளாகிய அவர்களுக்கும் அவர்கள் பயணிக்கும் அந்த வாகன ஓட்டுநருக்கும் அசௌகரியமான பயணமாகவே அமையும். இதைப் பற்றி இன்னும் விரிவாக கூறவேண்டும் அதாவது ஒரு வாடிக்கையாளர் தனக்கு காலை 6மணிக்கு வண்டி வேண்டும் என்றால் அந்த வாடிக்கையாளர் டிராவல்ஸில் அரை மணி நேரம் முன்பாக அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டும் என சொல்லி புக் செய்வார். டிராவல்ஸில் இருந்து வண்டி ஓனரிடம் காலை 5.00 மணி என சொல்வார். வண்டி ஓனர் அந்த வாகன ஓட்டுநரிடம் அதிகாலை 4.30 மணிக்கு என சொல்வார். அதிகாலை 4.30 மணிக்கு அந்த வாடிக்கையாளர் வீட்டில் வாகனம் நிற்க வேண்டும் என்றால். அந்த வாகன ஓட்டுநர் அதிகாலை 3.00 மணிக்கு எழுந்திரிச்சி கிளம்பி வண்டிய எடுத்தால் தான் முடியும். அதனால் எல்லா சிரமங்களும் ஓட்டுநரையே வந்தடைகிறது. சரியான நேரத்தை ஓட்டுநரிடம் சொன்னால் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க முடியும். வாகன ஓட்டுநர்கள் நல்ல ஓய்வெடுத்து வரும்போது விபத்துக்கள் தவிர்க்கப்படும் அந்த பயணத்திலும் எந்த அசௌகரியங்களும் வர வாய்ப்பிருக்காது. அதனால் வாடிக்கையாளர்களே உங்களின் பயணங்கள் சிறக்க ஓட்டுநர் மொபைல் எண்ணை கேட்டு வாங்கி அவரிடம் நேரடியாகவே உங்கள் பயண நேரத்தை சொல்லுங்கள். உங்கள் பயண நேரத்தை அதிகாலை 5,6 மணிக்கு முடிவு செய்யுங்கள். அத்தியாவசமாக செல்ல வேண்டிய சூழலுக்கு ஏற்ப பயண நேரத்தை முடிவு செய்வது உங்களுக்கு மட்டுமில்லாது அந்த வாகன ஓட்டுநர் மட்டுமில்லாது அவருடைய குடும்பம் எதிரே வரும் வாகனத்தின் ஓட்டுநர் அவரின் குடும்பம் அந்த வாகனத்தில் பயணம் செய்யும் அத்தனை பேர்களின் வாழ்க்கையையும் சேர்த்து நன்மையை அளிக்கும்.
நன்றி
உங்களில் ஒருவன்

10/12/2020
18/11/2020

சபரிமலைக்கு வாடகைவாகனங்களில் செல்வோருக்கானபதிவு.....!!!

◆ சபரிமலை பயணத்தை தொடரும் வாடகை வாகன ஓட்டுநர்கள், & உரிமையாளர்கள் கவனத்திற்கு.....

◆ செங்கோட்டை அருகே இருக்கும் அச்சன்கோவில் செல்லும் வாடகை வாகனங்கள் கேரளா பெர்மிட் இல்லாமல் செல்லவேண்டாம்.

◆ கேரளா RTO அதிகாரிகள் எல்லையில் (அச்சன்கோவில் செல்லும் வழி) அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்கிறார்கள்.
கடந்த காலங்களில் சென்றதுபோல் தற்போது செல்ல வேண்டாம்.

◆ ஆன்மீக தளங்களில் உள்ள வாகன பார்க்கிங்கில் கட்டணம் கொடுக்கும் போது தாங்கள் இயக்கி வந்த வாகனத்திற்கு உண்டான ரசீது தானா என்று சரிபாத்துகொள்ளுங்கள்.

◆ வாகனங்களுக்கு டீசல் போடும் போது முடிந்தவரை நகர எல்லைகுள் இருக்கும் பங்க்குகளில் டீசல் நிரப்புங்கள்.குறிப்பாக இரவு நேரத்தில் டீசல் போடும் போது மீட்டரை நன்கு கவனிப்பது நல்லது.

◆ தொடர் வாகன இயக்கம் வேண்டாம். இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது தங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

◆ வாகனங்களை மலப்பகுதிகளில் 40,கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம்.

◆ தங்களின் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து விடுங்கள்.

◆ கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட (சிகரெட், பீடி, புகையிலை, பான்பராக் ,) பொருட்களை பயணிகள் வாகனங்களில் எடுத்த செல்ல அனுமதிக்க வேண்டாம், ஓட்டுநர்களும் யாரும் பயன்படுத்த வேண்டாம்.

◆ வாகனங்களை சோதனை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிப்பார்கள். வாகனத்தையும் பறிமுதல் செய்வார்கள்.

◆ ஓட்டுநர்கள் தங்களின் வாகனத்திற்கு தேவையான சிறு, சிறு, உதிரிபாகங்களை வாகனத்தில் இருப்பு வைத்து க்கொள்ளுங்கள் அது அவசர நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

◆ ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த வாகனத்தையும் இயக்க வேண்டாம்
ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

◆ ஓட்டுநர்கள் யூனிபார்ம் (வெள்ளை சட்டை பேன்ட்)அனிந்து வாகனத்தை இயக்குங்கள். எல் ஈ
டி லைட்டுகள்,ஏர்ஹாரன்,பயன்படுத்த வேண்டாம்.(அபராதம் விதிக்கிறார்கள்.)

◆ ஆடியோ, வீடியோ, சத்தத்தை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்,

◆ தயவு செய்து அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை இரண்டுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் (எதிர் திசையில் வருவது நம் சகோதரர்கள் என்ற எண்ணம் வேண்டும்)

◆ நிலக்கல் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தும் போது டயர் அருகே முன்,பின், அடைக்கல் வைத்து க்கொள்ளுங்கள்.
பாதுகாப்பாக இருக்கும்.

◆ சபரிமலைக்கு சமையல் டிரிப் செல்லும் போது வாகனத்தின் டிக்கியில் சிலிண்டர்களை வைக்க வேண்டாம், அது பாதுகாப்பு இல்லை
யாரோ ஒருவர் பதிவிட்டது நல்ல பதிவு பார்த்துவிட்டு பகிர்ந்தேன்...

27/10/2020

Neyveli Guru Travels
நெய்வேலி மற்றும் வடலூர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வணக்கம் எங்களிடம் கிலோமீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் உங்களுடைய தேவைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் கீழே உள்ள நண்பருக்கு கால் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வந்து நிற்கும் எங்கள் வாகனம் கார் மற்றும் வேன் அழைக்க.9965190200,9042561700

03/09/2020

Neyveli Guru cab booking Just started booking bookings in our company. Taxi and that hotel, we are working in the state.of TamilNadu If any wants to make a booking, we can tell us. We have just started taking bookings. Whatever vehicle we are sending right now, we are sending sanitation and driver in full security. In which the gust full security

Phone :9965190200,9042561700
Call and Watsaap

28/08/2020

சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு வணக்கம் 🙏.

நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு நீங்கள் வாகனம் ஓட்ட ஆரம்பித்து உள்ளீர்கள்,உங்களுடைய வாகனத்தை நன்கு பரிசோதித்த பிறகு சவாரி எடுக்கவும், ஏனெனில் ஒயர்களை எலி கடித்து இருக்கலாம், பேட்டரி,ப்ரேக் அனைத்தையும் சரி செய்த பின்பு வாகனத்தை எடுக்கவும்,நாம் சுமார் ஆறு மாதங்களாக இரவு சவாரி செல்லவில்லை,நீண்ட ஓய்வின் காரணமாக இரவில் கண் விழித்து ஓட்டுவதில் சிரமம் இருக்கும், அந்த மாதிரி நேரங்களில் வாடிக்கையாளர்களிடம் நமது நிலமையை சொல்லி பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி தூங்கி விட்டு செல்லுங்கள், அதுதான் நமக்கும்,நமது குடும்பத்திற்கும், நம்மை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு,
விபத்தில்லா பயணமே நமக்கு பாதுகாப்பு,
நன்றி.

Address

Indira Nagar
Neyveli
607801

Telephone

9042561700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neyveli Guru Cabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neyveli Guru Cabs:

Share

Category