
10/07/2025
உலகப் புகழ் பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது ரயில் காதலர்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது 😔 அந்தக் கனவை நினைவாக்கும் பதிவாக இது இருக்குமென நினைக்கிறேன் 😍
2 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்தால் கூட டிக்கெட் கிடைப்பது சற்று கடினமாகதான் இருக்கும்…
மேட்டுப்பாளையம் டூ ஊட்டி செல்லும் மலை ரயிலில் ஒரு பெட்டி மட்டும் general sitting இருக்கிறது…அதில் 40 க்கும் மேல் இருக்கைகள் இருக்கும்…
ஆனால் அதில் இடம் பிடிப்பதற்கும் பெரிய போராட்டமாக இருக்கும்…நாளை காலை பயணம் செய்வதாக இருந்தால் இன்று இரவு முதலே 2 வது நடை மேடையில் இரவு 4 மணியில் இருந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும் …மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் 🥹
அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு டோக்கன் தருவார்கள், அதைக் கொண்டு போய் டிக்கெட் counter இல் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து ரயிலில் அமர வேண்டும் 😇 கட்டணம் 175 ரூபாய்
சரியாக காலை 7.10 க்கு உலகப் புகழ் பெற்ற நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் மலை ரயில் ஊட்டியை நோக்கி புறப்படும் ❤️
போகும் வழி எல்லாம் ஆறுகள், பாலங்கள்,சுரங்கங்கள்,பசுமையான காடுகள் வழியாக இந்த ரயில் நம்மை அழைத்துச் செல்லும் 👍
போகும் வழியில் நிறைய இடத்தில் ரயிலை நிறுத்தி தண்ணீர் நிரப்பிக்கொண்டு செல்வார்கள்…கழிப்பறை வசதி,குடிநீர் வசதி, உணவு வசதி எல்லாம் ரயில் நிறுத்தும் இடத்தில் இருக்கிறது ✅
உங்கள் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால் இந்த ரயிலில் ஒருமுறை பயணம் செய்து பாருங்கள்…உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் 🥰
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நீங்கள் waiting hall இல் தூங்கி கொள்ளலாம்…கழிப்பறை வசதி இருக்கிறது. நல்ல தூய்மையாகவும் இருக்கிறது 👍🏾
இதையும் மீறி பயணம் செய்வதில் ஏதாவது சிக்கல் , சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கேளுங்கள் நான் உடனே பதில் அளிக்கிறேன் ✅