Kodai Information Centre - Palani

Kodai Information Centre - Palani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kodai Information Centre - Palani, Tourist Information Center, Thirumalai Plaza complex, Palani.

ஒரு பாலம் கட்ட 50 வருடங்கள் எடுத்தார் என்றால் நம்புவீர்களா..?அந்த பாலம் கட்டிய மனிதருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழ...
29/05/2026

ஒரு பாலம் கட்ட 50 வருடங்கள் எடுத்தார் என்றால் நம்புவீர்களா..?

அந்த பாலம் கட்டிய மனிதருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது என்றால்..? 😳

ஆம்… 2026ஆம் ஆண்டு இந்திய அரசு, மேகாலயாவை சேர்ந்த ஹாலி வார் என்ற சாதனையாளருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆனால் அவர் கட்டியது சாதாரண பாலம் அல்ல… உயிருடன் வளரும் ஒரு “Living Root Bridge”

சிமெண்டு… இரும்பு… கான்கிரீட் எதுவும் இல்லாமல், மரங்களின் வேர்களை ஒன்றோடொன்று பின்னி பல ஆண்டுகள் வளர்த்து உருவாக்கப்படும் அதிசய பாலம் இது. வருடங்கள் செல்ல செல்ல இந்த பாலத்தின் வலிமை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும் என்பது இதன் ஆச்சர்யம்.

மேகாலயாவின் சோஹ்ரா (செராப்புஞ்சி) பகுதியில் வாழும் Khasi பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவான “Jingkieng Jri” என்ற இயற்கை பொறியியல் முறையிலேயே இந்த பாலம் உருவாக்கப்பட்டது.
ஹாலி வார் வெறும் 10 வயதிலேயே இந்த முயற்சியை தொடங்கியுள்ளார்.

நாம் அந்த வயதில் டயர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் அவர் தனது கிராம மக்களுக்கு மழைக்காலத்தில் நதியை கடக்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு தேடிக் கொண்டிருந்தார்!

தன் முன்னோர்களிடமிருந்து கற்ற அறிவை பயன்படுத்தி, Rubber Fig Tree மரத்தின் வேர்களை பல தசாப்தங்கள் பின்னி வளர்த்து இன்று உலகமே வியக்கும் “Umkar Living Root Bridge” உருவாக்கியுள்ளார்.

இதில் இன்னும் பெரிய விஷயம் என்ன தெரியுமா..?
அவர் பாலம் கட்டியதோடு நின்றுவிடவில்லை…
இயற்கையை பாதுகாக்க வேண்டும், பாரம்பரிய அறிவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இளம் தலைமுறைக்கும் இந்த இயற்கை பொறியியல் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்

இப்படிப்பட்ட உண்மையான சாதனையாளர்களை தேடி தேடி கண்டுபிடித்து கௌரவிப்பதில்தான் இன்று பிரதமர் தலைமையிலான அரசின் சிறப்பு இருக்கிறது.

திரை உலக பிரபலங்கள் மட்டுமல்ல…
கிராமங்களில் அமைதியாக மனிதகுலத்திற்காக உழைக்கும் மக்களையும் நாடு இன்று மதிக்கத் தொடங்கியுள்ளது 🇮🇳

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதரை, இந்தியா இன்று தனது உயரிய மரியாதையால் கௌரவித்துள்ளது”

07/05/2026
கொடைக்கானல் பி எல் செட் அருகில், அடர்ந்த வனப் பகுதிக்குள் பறவைகளின் அழகிய ஓசைகளுக்கிடையில் தியானத்திற்கு உகந்த இடம் மொத்...
07/05/2026

கொடைக்கானல் பி எல் செட் அருகில், அடர்ந்த வனப் பகுதிக்குள் பறவைகளின் அழகிய ஓசைகளுக்கிடையில் தியானத்திற்கு உகந்த இடம் மொத்தம் நான்கு அறைகள், (@4000/)

@ Palani,
17/11/2025

@ Palani,

28/07/2025

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

"உயிர் காக்கும் வனங்கள் " 👍             "வனம் காக்கும் உயிர்கள்....
19/07/2025

"உயிர் காக்கும் வனங்கள் " 👍
"வனம் காக்கும் உயிர்கள்....

Address

Thirumalai Plaza Complex
Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kodai Information Centre - Palani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share