
18/08/2025
கோவா அதிர்வலைகள்.
"ஆயிரம் கண் போதாது வண்ணகிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணகிளியே என்றொரு பாடல் சிவாஜி அவர்கள் நடித்த பாவை விளக்கு திரை படத்தில் உண்டு. நாதஸ்வர கலைஞர்கள் எப்போதும் விரும்பி வாசிக்கும் பாடல். இந்த வரிகள் குற்றாலத்திற்கு மட்டுமல்ல, கோவா விற்கும்தான்.
நம் அனைவருக்கும் நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு பயணப்படுதல் என்பது சாத்தியமே இல்லை. ஆனாலும் கோவா சென்று பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எழுவதுண்டு. கோவா பயணம் குடும்பங்களுக்கானது அல்ல என்கிற கூற்று ஒரு புறம், பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு புறம். ஆண்களுக்கான கோவா பயணத்திட்டமிடல் தான் இணையத்தில் அதிகம் கேலி செய்யப்படும் ஒன்றாகும். ஆண்களுக்கே அவ்வாறெனில் பெண்களுக்கு?
நாம் சாத்தியப்படுத்துவோம். 20 பெண்கள் கொண்ட குழுவோடு கோவா புறப்பட்டு நான்கு நாட்கள் புது நண்பர்களோடு கோவாவை சுற்றுவது என்பது கனவு நனாவான தருணமே. ஒவ்வொரு பயணத்திலும் உறவுகளின் எண்ணிக்கையை கூட்டிகொண்டே போகிற பெரும்பேறு கிட்டுகிறது. நான்கு நாட்களும் மகிழ்ச்சி ஒன்றே இலக்காய் அமைத்து புத்துணர்வோடு ஊர் திரும்பினோம். உடன் பயணித்த பாங்கிகளுக்கு இக்கிகை பெண்கள் பயணகுழுவின் பேரன்புகள். பருவமழைக்கால கோவா வேறு பரிணாமத்தில்
மிளிர்கிறாள். அவளைக்காண ஆயிரம் கண் போதாது வண்ணகிளியே...❤️