
26/02/2024
உலா
உலாவின் அடிப்படை நோக்கமே, சிறப்பு குழந்தைகளுக்கான பயணம் என்பது தான். 2024ஆம் ஆண்டின் முதல் பயணம் செவி மற்றும் மொழி திறன் மாற்றமுள்ள சிறப்பு குழந்தைகளை குடுமியான்மலை அழைத்து செல்வதன் மூலம் ஆரம்பிச்சிருக்கு . பிப்ரவரி 23ஆம் தேதி காலையில 9 மணிக்கு, 40 குழந்தைகளையும், அவர்களின் ஆசிரியர் 10 பேர் என 55 பேர் கூட திருச்சி, பொன்மலையில தொடங்குன பயணம் சாயந்திரம் 6 மணி போல முடிஞ்சிது. கிட்டத்தட்ட 9 மணி நேரம் பஸ்ஸில் போடப்பட்ட பாடல்களின் தாளங்களுக்கு ஏற்ப குழந்தைகள் நிக்காம டான்ஸ் ஆடிகிட்டே இருந்ததும், குழந்தைகள் குடுமியான்மலையில் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்துக்கும் விளக்கம் கேட்டு தெரிந்துகொள்வதும் என சந்தோஷமும், வியப்பும், ஆச்சரியமாய் இருந்தவர்களை பார்த்ததும் நம்மளுக்கும் உற்சாகம் தொற்றி கொண்டது. முன்னதாக வரலாறு சார்ந்த இடத்துக்கு நாம போக போறோம்னு பயணத்துக்கு முன்னாடி நாள் நாம குழந்தைகள் கிட்ட பேசுனபோது ஒட்டகம் பாக்க கூட்டிட்டு போறீங்களா அப்படினு நம்ம கிட்ட அவங்க கேட்டுருந்தாங்க, குழந்தைகள் ஆசை தானே நமக்கு முக்கியம், அதுனால கண்டிப்பா பாக்கலாம்னு சொல்லிட்டு, நார்த்தாமலை பக்கத்துல இருக்க இப்ராஹிம் பார்ம் கூட்டிட்டு போலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஒட்டகத்தோட, குதிரை, வெளிநாட்டு பறவைகள், இக்வானா, பாம்பு ன்னு குழந்தைகள் பார்த்து பார்த்து சந்தோசப்பட, இதை விட நமக்கு என்ன சந்தோசம்ன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. ரொம்ப மகிழ்வா இருந்ததுன்னு எல்லாருமே தங்கள் மொழியில நிறைய நன்றிகளை சொல்லிகிட்டே இருக்க, மன திருப்தியோட இந்த பயணத்தை முடிக்க மனமில்லாமல், குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லாமல் பள்ளியில் அவர்களை விட்டுவிட்டு பிரிந்தோம்.
@பின்தொடர்பவர்கள்