தென் பொதிகை

தென் பொதிகை புகழ் வாய்ந்த தென் பொதிகை மலை சிறப்ப?

தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை க...
28/02/2020

தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்
பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
திரளானபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 #திருச்செந்துர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது...
28/02/2020

#திருச்செந்துர்
அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது 🙏🙏🙏🙏

 #திருச்செந்தூர் #மாசி_பெருந்திருவிழா
24/02/2020

#திருச்செந்தூர்
#மாசி_பெருந்திருவிழா

இன்றைய நிலவரம்குற்றால மெயின் அருவி
20/02/2020

இன்றைய நிலவரம்
குற்றால மெயின் அருவி

மகா சிவராத்திரி (விரத நோக்கம், வழிபாட்டு முறைகள், பலன்கள்) - பிப்ரவரி 21 2020:*மாசி மாதத்தில், தேய் பிறையான கிருஷ்ண பஷத்...
20/02/2020

மகா சிவராத்திரி (விரத நோக்கம், வழிபாட்டு முறைகள், பலன்கள்) - பிப்ரவரி 21 2020:
*
மாசி மாதத்தில், தேய் பிறையான கிருஷ்ண பஷத்தில் வரும் சதுர்த்தசி திதியின் இரவுப் பொழுதே 'மகா சிவராத்திரி' என்று போற்றப் பெறுகின்றது. தனிப்பெரும் தெய்வமான சிவபெருமானின் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்த இத்திருநாளன்று நிகழ்த்தப்படும் வழிபாடுகள் கற்ப கோடி பிறவிகளின் வினைகளை வேரறுக்க வல்லது என்று புராணங்கள் அறுதியிடுகின்றன.
*
விரத நாளன்று மாலை 6 மணி துவங்கி மறு நாள் காலை 6 மணி வரையிலான நான்கு (மூன்று மணி நேர) யாமங்களே வழிபாட்டுக்குரிய காலங்கள். பகல் பொழுதில் பழங்களை உட்கொள்ளுதல் தவறாகாது எனினும் ஏனைய உணவு வகைகளை முழுவதுமாய்த் தவிர்த்தல் வேண்டும், மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை வரையில் பழ வகைகளையும் அறவே தவிர்த்து விரதமிருத்தல் வேண்டும்.
*
நான்கு யாமங்களிலும் கண் விழித்தலோடு இறைச் சிந்தையோடு இருத்தலும் மிக அவசியம். இப்புண்ணியக் காலத்தில் ஸ்ரீபஞ்சாட்சர மந்திர ஜபம், திருமுறைப் பாராயணம், சிவாலய தரிசனம்; சிவ புராணங்களை படித்தல் மற்றும் சிவகதைகளை பேசியிருத்தல் முதலியவை சிறப்பான பலன்களைப் பெற்றுத்தர வல்லவை.
*
இல்லங்களில் சிவலிங்க வழிபாடு புரியும் வழக்கமுள்ளோர் நான்கு யாமங்களிலும் சிவலிங்க அபிஷேகமும், சிவ பூஜையும் புரிதல் வேண்டும். நான்கு யாமங்களில் முறையே பால்; தயிர்; நெய்; தேன் மற்றும் சர்க்கரை முதலியவைகளால் அபிஷேகித்தல் மரபு, ஒவ்வொரு ஜாம பூஜையின் முடிவிலும் (அவரவர் சக்திக்குட்பட்ட வகையில்) அன்ன வகைகள்; சமைத்த காய்கறி வகைகள், பழங்கள்; இனிப்பு வகைகள் முதலியவைகளை நிவேதனம் புரியலாம்.
*
பரம புண்ணியமான இச்சிவராத்திரி காலங்களில் சிவமூர்த்தியை வில்வ இலைகளால் அர்ச்சிப்பதும், திருக்கோயிலில் உறையும் சிவலிங்க மூர்த்திக்கு வில்வ மாலை சமர்ப்பிப்பதும் கணக்கிலடங்கா நற்பலன்களைப் பெற்றுத்தர வல்லது.
*
இயல்பாக நம் மனம் செலுத்தும் வழியிலேயே சென்று கொண்டிருக்காமல் அதனை நன்முறையில் மடைமாற்றுதலே 'மகா சிவராத்திரி' நுட்பம், இரவுப் பொழுதில் தமோ குணம் மிகுந்திருக்கும். தமோ குணத்தை வென்று ஆன்மாக்கள் சிவமுக்தி பெற்றுய்யும் உன்னத வழிபாட்டு முறையைக் குறிப்பதே 'மகா சிவராத்திரி' வழிபாடு.
*
'மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்' என்பாள் அவ்வை. புண்ணியங்களின் உறைவிடமான மகா சிவராத்திரி தினத்தன்று நல்விரதமிருந்து ஆலமுண்டருளும் பரம்பொருளைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம் (சிவாய நம)!!!

அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயிலின் தெப்ப உற்சவம் இனிதே நடைபெறுகிறது10.02.20. திங்கள் மாலை 07 மணிஎல்லாரும் ...
10/02/2020

அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி திருக்கோயிலின் தெப்ப உற்சவம் இனிதே நடைபெறுகிறது
10.02.20. திங்கள் மாலை 07 மணி
எல்லாரும் சேவிச்சிக்கோங்கோ
சித்தமெல்லாம் சிவமயம்
❤❤❤❤❤❤

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி  எனும் ஊர்ரில் அமைந்துள்ளது.  சிவகாமசுந்தரி சமேத வன்னியப்பர், இந்த திருக்கோயில் கோயில்...
10/02/2020

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி எனும் ஊர்ரில் அமைந்துள்ளது. சிவகாமசுந்தரி சமேத வன்னியப்பர், இந்த திருக்கோயில் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.;

#ஆழ்வார்குறிச்சி, #திருநெல்வேலி, #ஶ்ரீவில்லிபுத்தூதூர், #கன்னியாகுமரி,
மக்களே உங்கள் முன்னோர்கள் இத்திருக்கோயில்
திருப்பணி செய்துயுள்ளனர்

#பாரந்தகச் #சோழன்(908−985)
#சடையவர்மன் #குலசேகரன்(1190−1217)
#சக்கரபாணி #நல்லுர் #அரையன்− #ஶ்ரீவில்லிபுத்தூர்

#மும்முடிசோழநல்லூர் #அரையன்− #கன்னியாகுமரி
#வீரப்ப #நாயக்கர்

பெரும் தொழில் அதிபர்கள் முன்வந்தால்
இத்திருக்கோயில் வரலாற்றை திரும்பபெறலாம்

அனைவரும் முயற்சி செய்தால் தொண்டு செய்ய நாங்கள் தயார்

பைம்பொழில்: #தென்காசிமாவட்டம்,  #செங்கோட்டைவட்டம்.பைம்பொழில் கிராமத்தில் அமைந்துள்ள   #திருமலைக்குமாரசாமி  திருக்கோவில் ...
09/02/2020

பைம்பொழில்:

#தென்காசிமாவட்டம்,
#செங்கோட்டைவட்டம்.
பைம்பொழில் கிராமத்தில் அமைந்துள்ள
#திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூச திருநாள் விழா ஏதோ நேற்றுதான் தொடங்கியது போல் இருந்தது ஆனால் அனைத்து சமூக மக்களின் ஒத்துழைப்புடன் அதிகாரிகளின் சிறப்பான பாதுகாப்பு பணிகளுடன் சிறப்பாக அமைதியான முறையில். பிரியாவிடையுடன் இன்றுடன் முடிவுற்றது.
#தைப்பூசம்2020
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு*🙏🔱🌙🛕🚩🙏🔱🌙🛕🚩🙏தைப்பூசம்-ன்னா என்ன? பழனிப் பாதயாத்திரை, மலை முழுதும் பாய்ந்தோடும் கா...
08/02/2020

*தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு*
🙏🔱🌙🛕🚩🙏🔱🌙🛕🚩🙏
தைப்பூசம்-ன்னா என்ன?
பழனிப் பாதயாத்திரை, மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!! ...இப்படி பல விழாக்கள்!

என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, "வேல்" என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!
வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!

வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!
பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!
இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
ஈழத்தில் செல்வர் சந்நிதி,
மலேசியாவில் பத்துமலை,
பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!
3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!
ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
- "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!

4. வேலின் தோற்றம்!

* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ, பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்! ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும், ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே! சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா??

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

கான முயல் எய்த அம்பினில் - யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:

கூர் வேல், நெடு வேல், சுடர் வேல், வீர வேல், வெற்றி வேல்...ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

ஓம் சரவணபவ

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா
05/02/2020

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா

 #தஞ்சை_பெரிய_கோவில்
04/02/2020

#தஞ்சை_பெரிய_கோவில்

இன்றைய நிலவரம்மெயின் அருவி
04/02/2020

இன்றைய நிலவரம்
மெயின் அருவி

Address

Kuttralam
Tenkasi
627807

Alerts

Be the first to know and let us send you an email when தென் பொதிகை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category