30/04/2021
தேனி வாடகை வாகன சேவை,
9942213601, 9095518860.
இன்று 30/04/2021 தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் தலைமையிலும் பெரியகுளம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உயர்திரு முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர்கள்கலந்து கொண்டனர் இதில் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன் அவர்கள் செயலாளர் ராஜவேல் அவர்கள் மற்றும் மஸ்தான் எஸ்விஎஸ் வெங்கடேசன் அவர்கள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டனர் இதில் எஸ்பி அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பற்றி விபரமாக எடுத்துரைத்தனர் டிஎஸ்பி அவர்களும் பல கருத்துகளை கொரோனா விழிப்புணர்வு பற்றிசிறப்புரையாற்றினார் மற்றும் பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மற்றும் செயலாளர் கொரோனா வராமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நிகழ்ச்சிகளையும் எடுத்து உரைத்தனர் விழா முடிவில் தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் சுகுமாரன் அவர்கள் வருகை புரிந்த அனைவருக்கும்நன்றி தெரிவித்து கூட்டம் இனிதே நிறைவு பெற்றது🙏🙏