சங்கராபுரம் கருப்பசாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Thevaram
  • சங்கராபுரம் கருப்பசாமி திருக்கோவில்

சங்கராபுரம் கருப்பசாமி திருக்கோவில் very powerful god in TAMILNADU

04/11/2022
04/11/2022
04/11/2022
27/10/2022

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையை ஏற்கப்படும். புகழ் கவுரவம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

17/08/2022

தமிழ்நாட்டுல செயல்படாத பஞ்சாயத்தாக ஊர்பொதுமக்களால் தூற்றபடுகின்ற தேனி மாவட்ட சங்கராபுரம்,_____________________________________
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் ,சங்கராபுரம் பஞ்சாயத்து வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் இர‌ண்டு வருடமாக உறுப்பினர்களின் தீர்மானங்கள்,பொதுமக்களின் கோரிக்கைகள் எதுவுமே
நிறைவேற்ற படாமல் உள்ளதால், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மிகு‌ந்த மனவேதனையுடன் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள்...BDO இதனை விசாரித்து தீர்மானங்களின் மீதும், இரண்டு ஆண்டுகளாக தீர்மானத்தை நிறைவேற்றாதவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்...
குறிப்பு: இந்நிகழ்வை ஊடகங்கள் தொலைக்காட்சியில் செய்திகளாக ஒளிபரப்பு செய்துள்ளது...

28/05/2022
சங்கராபுரம் அருள்மிகு கருப்பசாமி திருகோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் சங்கராபுரத்தின் சார்பில் வருக! வருக.! என வரவே...
16/04/2021

சங்கராபுரம் அருள்மிகு கருப்பசாமி திருகோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் சங்கராபுரத்தின் சார்பில் வருக! வருக.! என வரவேற்கிறோம்....

சங்கராபுரம் நமது ஊர் கருப்பசாமி திருகோயில் இப்பொழுது சீரமைப்பு பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது
20/03/2020

சங்கராபுரம் நமது ஊர் கருப்பசாமி திருகோயில் இப்பொழுது சீரமைப்பு பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது

Address

ONE WAYS TRAVELS SANGARAPURAM
Thevaram
625530

Website

Alerts

Be the first to know and let us send you an email when சங்கராபுரம் கருப்பசாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category