Ar Rilwan Hajj & Umrah Services

Ar Rilwan Hajj & Umrah Services Hajj - Umrah - Ziarat Organizer

﷽ நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லா...
27/09/2024

﷽ நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.

-அல்குர்ஆன் : 2:148

﷽ உள்ளம்💎“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி)...
25/09/2024

﷽ உள்ளம்💎

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530

இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.

“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் : 5012

▪️மக்களைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவர்கள் உயிரற்றுப்போன உடலுக்காக அழுகின்றார்கள்.
ஆனால்,உயிரற்றுப் போன உள்ளத்துக்காக அழுவதே இல்லை.

- இமாம் ஷாபிஈ (ரஹ்)

“மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார்.

அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான்.

பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் : 3865

மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

🔷எவன் ஆத்மாவைப் (உள்ளத்தை) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.

(அல்குர்ஆன் : 91:9)

🔷 உள்ளம் தூய்மை ஆகி விட்டால் அனைத்து நிலைகளும் சீராகிவிடும்.

- ஷெய்ஹ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (رَضِيَ أللَّٰهُ عَنْهُ‎‎)

𝗪𝗵𝗲𝗻 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗶𝘀 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗲𝗱, 𝗮𝗹𝗹 𝘁𝗵𝗲 𝗰𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 𝗯𝗲𝗰𝗼𝗺𝗲 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁.✨

- 𝗦𝗵𝗲𝗶𝗸𝗵 𝗠𝘂𝗵𝘆𝗶𝗱𝗱𝗶𝗻 𝗔𝗯𝗱𝘂𝗹 𝗤𝗮𝗱𝗶𝗿 𝗝𝗶𝗹𝗮𝗻𝗶 (رَضِيَ أللَّٰهُ عَنْهُ‎‎)💐

﷽ The Most Merciful - கருணையாளன் 💜(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க...
23/09/2024

﷽ The Most Merciful - கருணையாளன் 💜

(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”

▪️“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்”

- அல்குர்ஆன் : 15:49-50

வக்ஃப் Amendment ❌
12/09/2024

வக்ஃப் Amendment ❌

04/09/2024

August BATCH

04/09/2024
உம்ரா: அக்டோபர் - டிசம்பர் 2024🕋 9 நாட்கள் மக்கா🕌 4 நாட்கள் மதீனா🌍 30+ வரலாற்று இடங்கள்🚌 ஜியாரதிற்கு AC BUS🏬 தமிழக உணவு ...
04/09/2024

உம்ரா: அக்டோபர் - டிசம்பர் 2024

🕋 9 நாட்கள் மக்கா
🕌 4 நாட்கள் மதீனா
🌍 30+ வரலாற்று இடங்கள்
🚌 ஜியாரதிற்கு AC BUS
🏬 தமிழக உணவு
🕋 நிர்வாகத்தின் சார்பில் 3 உம்ரா
🧳 டிராவல் பேக்
💫 5 லிட். ஜம் ஜம் மற்றும் 3 கிலோ அஜ்வா பேரீச்சபழம்
🎤 அனுபவமிக்க வழிகாட்டிகள்

மேலும் ஆலிம்கள், குடும்பத்தோடு வருபவர்களுக்கு சலுகை உண்டு...
wa.me/916369617860

CONTACT,

63696 17860, 84892 85163

✉️[email protected]

📌 அர் ரிழ்வான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
56, காஜா முஹ்யித்தீன் தெரு, பாலக்கரை, திருச்சி-620008.

┈┉┅━✿• ✮ •✿━┅┉┈

﷽ தொழுகையை விட நமது காரணம்?ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை. -அல்குர்ஆன்...
31/08/2024

﷽ தொழுகையை விட நமது காரணம்?

ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை.

-அல்குர்ஆன் 51:56

▪️சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம்.

எனக்கு மூல நோய் இருந்தது. ‘எவ்வாறு தொழுவது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு‘ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 1117

﷽ அவனிடமே பொறுப்பை விடுங்கள்/ Trust in Allah💫 நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக ந...
27/08/2024

﷽ அவனிடமே பொறுப்பை விடுங்கள்/ Trust in Allah💫

நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்களின் குற்றங்களை நீங்கள் மன்னித்து இறைவனும் அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, யுத்தம், சமாதானம் ஆகிய மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! யாதொரு விஷயத்தை செய்ய நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

-அல்குர்ஆன் : 3:159

﷽ அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை ...
20/08/2024

﷽ அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

-அல் குர்ஆன் 2:216

﷽ அருளாக வந்த அண்ணல் நபி(ஸல்)💚(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்...
09/08/2024

﷽ அருளாக வந்த அண்ணல் நபி(ஸல்)💚

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, *உங்கள் நன்மைகளையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.*

-அல்குர்ஆன் : 9:128

﷽ நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி  அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங...
07/08/2024

﷽ நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:153)

✔️ Follow for Islamic posts

For English










Address

56, Kaja Mohideen Street, Palakarai
Tiruchirappalli
620008

Telephone

+916369617860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Rilwan Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar Rilwan Hajj & Umrah Services:

Share

Category