Standard Cabs - Tirunelveli

Standard Cabs - Tirunelveli Standard Cabs & Tours, Established in 1992 by the Chairman & Managing Director- Mr.K.ZAHIR HUSSAIN. Tours and all India trip packages.

We have been successfully providing all types of Luxury Cars, Vans and Buses. We have been successful in this field and have been satisfying our customers for a very long time. We offer the best deals on Rent a cars (self Drive), hotels, resorts, leisure holidays, business travel, customized itineraries, weekends etc,.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!திரிசூர் பூரம்: கேரளாவின் வருடந்...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

திரிசூர் பூரம்: கேரளாவின் வருடந்தோரும் கொண்டாடும் திருவிழாவான திரிசூரின் வடக்குநாதன் ஆலயம், பூர நட்சத்திரத்தின்போது நிலா தோன்றும்போது கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா, கேரளாவின் கலாச்சாரத்தை அழகுப்படுத்தப்படும் யானைகள், பட்டாசுகள், மதிமயக்கும் சிறுகுடைகள், தட்டல் இசை என காணப்படுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதங்களில், ராஜ ராம வர்மனால் ஆரம்பிக்கப்படும் திருச்சூர் பூரம், 1700ஆம் ஆண்டு கொச்சி அரசனால் தொடங்கப்பட்டதாகும். 250 கலைஞர்களை கொண்டு இளஞ்சித்திர மேளமானது மதிமயக்கும் இசை நிகழ்வைக்கொண்டு மனதை இதமாக்கிட, இந்த கருவியின் பெயர் சண்டா என்றும், நட்சத்திரங்களின் பார்வையிலும் இது காணப்படுகிறது.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!பொங்கல்: தமிழ்நாட்டின் அறுவடை தி...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

பொங்கல்: தமிழ்நாட்டின் அறுவடை திருவிழாவான பொங்கல், ஜனவரி பதினான்கு அல்லது பதினைந்தில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் மஹரா சங்கராந்தி எனவும், தமிழ்நாட்டில் பொங்கல் என்னும் பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த முக்கியமான இந்து திருவிழா, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செயல்களுடன் காணப்படுகிறது. பயிர்களான கரும்பு, மஞ்சள், மற்றும் தானியங்கள் அறுவடையானது இந்த பருவத்தில் நடைபெற, இந்த தானியங்களை தமக்களித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் இந்த பொங்கல் திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!நாட்டியாஞ்சலி நடன திருவிழா: கலைய...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

நாட்டியாஞ்சலி நடன திருவிழா: கலையும், நடனமும் ஒருங்கிணைந்ததாக ஆன்மீகம் கொண்டு காணப்பட, நடராஜ பெருமானுக்காக நாட்டியாஞ்சலி நடன திருவிழாவானது நடத்தப்பட, இது சிவபெருமானின் சித்தரிப்பாகவும் காணப்படுகிறது. இது ஐந்து நாட்கள் திருவிழாவாக அமைய, மஹா சிவராத்திரியின் போது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள பல கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக்கொள்வதோடு பெரும் தொடர்புடன் காணப்பட, ஒவ்வொரு வருடமும் சிறந்த நடனங்களும் அரங்கேறிடக்கூடும்.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!ஓணம்: கேரளாவில் தொடங்கிய ஓனம் ஒர...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

ஓணம்: கேரளாவில் தொடங்கிய ஓனம் ஒரு இந்து பண்டிகை ஆகும். நெல் அறுவடை திருவிழாவாக இதனை கொண்டாடப்பட, வாமண அவதாரமான விஷ்ணு பெருமான் மற்றும் மகாபலி பேரரசருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மலையாள இந்துக்களுக்கு மாபெரும் விழாவாக இது அமைய, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் இது கொண்டாடப்படுகிறது. இந்த ஓன திருவிழாவின் அங்கமாக பல நிகழ்வுகளும் காணப்பட, அவற்றுள் புலிக்காளி (புலி ஆட்டம்), ஓனத்தள்ளு (தற்காப்பு கலை), ஓனவில்லு (இசை), அல்லது அழகிய மலர் அணிவகுப்பு ஆன பூக்கல்லம் எனவும் காணப்படுகிறது. படகு போட்டி அல்லது வல்லம் காளி இந்த நேரத்தில் நடைபெறுகிறது.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!ஹம்பி உட்சவம்: இந்த ஹம்பி திருவி...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

ஹம்பி உட்சவம்: இந்த ஹம்பி திருவிழாவை ஹம்பி உட்சவம் அல்லது விஜய உட்சவம் என அழைக்க, மூன்று நாட்கள் நீண்டு மூர்க்கத்தனமான திருவிழாவாகவும் ஒவ்வொரு வருடமும் அமைந்திட, விஜய நகர பேரரசின் ஆளுமையும் காணப்படுகிறது. இந்த கண்கொள்ளா காட்சியான கலாச்சார நிகழ்வுகளானது இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களின் திறமையை உணர்த்துகிறது. கலாச்சார இசை, கலை மற்றும் நடனம் ஆகியவை ஆடம்பரமாக அமைகிறது. அவற்றுள் சிறந்த ஒரு நிகழ்வாக ஒளி மற்றும் ஒலி நிகழ்வானது அமைய, ஹம்பி இடிபாடுகள் சிறப்பான ஒளியில் தென்படுவதோடு, பதினைந்து கிலோமீட்டர் பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!மைசூரு தசரா: அழகிய அரண்மனையை தவி...
03/10/2017

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

மைசூரு தசரா: அழகிய அரண்மனையை தவிர்த்து மைசூரில் என்ன நாம் பார்ப்பது? என யோசித்தால், மாபெரும் மைசூரு தசரா திருவிழா நான் இருக்கிறேன் என நம்மை வரவேற்பதோடு, வருடந்தோரும் செப்டம்பர் அல்லது அக்டோபரிலும் நிகழ்கிறது. இந்த ஒன்பது நாட்கள் நீண்ட திருவிழாவானது நூற்றாண்டுகளை கடந்து தொடர, வழக்கமாக இருபது நிகழ்வுகளையும் இது கொண்டிருக்கிறது. சாமுண்டீஸ்வரி தேவி சிலையின் ஊர்வலம் வர அதனை யானை சவாரி என நாம் அழைப்பதோடு, மைசூரு அரண்மனையில் 100,000 விளக்குகளுக்கு மேலே காணப்படுவதோடு, இந்த அரண்மனைக்கு எதிரில் மிகவும் முக்கிய ஈர்ப்பாக இந்த பெரும் திருவிழாவும் அமைகிறது.

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!வெங்கடப்பா கலை காட்சியகம், கஸ்தூரிபா சாலை: கர்நாட...
02/10/2017

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

வெங்கடப்பா கலை காட்சியகம், கஸ்தூரிபா சாலை: கர்நாடகா அரசு அருங்காட்சியகத்தின் வளாகத்தில் இந்த வெங்கடப்பா கலை காட்சியகம் காணப்பட, 600 ஓவியங்களுக்கு இது வீடாக அமைந்து மூன்று மாடிகளையும் கொண்டு அதீத கலை மற்றும் நகரத்தின் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. இந்த கலை காட்சியகத்தின் பெயராக நீர் நிற ஓவியங்களுக்கு பெயர் பெற்ற கே. வெங்கடப்பா பெயரை வைத்திட, விவேகமான யதார்த்தத்தை அது காண்பிக்கிறது. இந்த காட்சியகமானது வெங்கடப்பாவின் புகழை மட்டும் பேசாமல் மற்ற கலைஞர்களின் திறமையையும் காட்டிட, கல் சிற்பங்கள், மர சிற்பங்கள், என பலவும் அவற்றுள் அடங்க, நாள் முழுவதும் நாம் கலை நயத்தின் அழகில் மூழ்கியும் போகிறோம்.

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!க்ரிம்சன் கலை காட்சியகம், கன்னிங்கம் சாலை: பரந்து...
02/10/2017

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

க்ரிம்சன் கலை காட்சியகம், கன்னிங்கம் சாலை: பரந்து விரிந்து காணப்படும், விரிவான சேகரிப்பாக நவீன மற்றும் சமகால கலைகள் இங்கே காணப்படுகிறது. ஷபினா ப்ளாஷாவில் 1989ஆம் ஆண்டு இந்த முதல் காட்சியகமானது நிறுவமுடிவுசெய்ய, இந்த காட்சியகமானது பெங்களூருவின் சமகால கலை, காட்சி வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தது. இதன் இரண்டாவது காட்சியகம் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட, வீட்டு ஓவியங்கள், கலவையான ஊடக பணிகள், புகைப்படங்கள், சிற்பங்கள், என நாட்டின் புகழ்பெற்ற பல கலைஞர்களின் திறமையையும் நம்மால் பார்க்க முடிகிறது.

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!கேலரி ஜீ, லாவெல்லே சாலை: கீதாஞ்சலி மாலினியால் 200...
02/10/2017

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

கேலரி ஜீ, லாவெல்லே சாலை: கீதாஞ்சலி மாலினியால் 2003ஆம் ஆண்டு இது நிறுவப்பட, இங்கே காணப்படும் கலை யோசனைகள் யாவும், ஆன்மீக காட்சியக சிந்தனையுடன் காணப்பட, தீவிரமான கலை சேகரிப்பாளர்கள் வாங்கியும் செல்கின்றனர். மற்ற பிற சேவைகளாக, திருத்துதல், சீர்ப்படுத்துதல், கலைஞர்களின் தொடக்க வேலைகள் என காணப்பட, கேலரி ஜீயானது தீவிர கலை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது.

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!சாந்தி சாலை, சாந்தி நகர்: 2003ஆம் ஆண்டு சுரேஷ் ஜெ...
02/10/2017

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

சாந்தி சாலை, சாந்தி நகர்: 2003ஆம் ஆண்டு சுரேஷ் ஜெயராம் என்பவரால் இந்த காட்சியகமானது இலாபமில்லா கலை வெளியில் நிறுவப்பட, இதன் கதவுகள் வருங்காலத்து கலைஞர்களுக்காக எந்நேரமும் திறந்தே காணப்பட, இந்த தொழில்வெளியை சார்ந்த வேலைகளானது காணப்படுவதுமில்லை. இதனை கடந்து, இந்த காட்சியகத்தில் எண்ணற்ற திரையிடல், உரையாடல், வேலைப்பணிகள் என காணப்பட உள்ளூர் கலைஞர்களின் ஆக்கப்பூர்வமான செயல்களும் தெள்ளத்தெளிவாய் தெரிகிறது.

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!கிங்கினி கலை, இன்பேன்ட்ரி சாலை: சமகால கலை காட்சிய...
02/10/2017

பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!

கிங்கினி கலை, இன்பேன்ட்ரி சாலை: சமகால கலை காட்சியகமான தோட்டத்து நகரத்தின் கிங்கினி கலை காட்சியகம், 2004ஆம் ஆண்டு ஒரு கணவன் மற்றும் மனைவியால் நிறுவப்பட்டது. இந்த காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக கலை விரும்பிகளுக்கான சக(கா) இடைவெளியும், சேகரிப்பவர்களின் விருப்பமாகவும், முதல் முறை வாங்குபவர்களாகவும் என இந்திய கைவினைஞர்களின் எழுச்சியானது காணப்பட, தேவையான தகவலையும், வழிக்காட்டுதலையும் இந்த மாயாஜால உலகத்தின் கலைகள் உணர்த்துகிறது. இந்த காட்சியகத்தின் 300 இந்திய கைவினைஞர்களின் திறனும் பார்வைக்கு வைக்கப்பட, இந்தியா மற்றும் அயல் நாடுகளின் பல்வேறு கண்காட்சிகளுக்கும் பரிந்துரை செய்யவும்படுகிறது.

Address

SN High Road
Tirunelveli
627001

Alerts

Be the first to know and let us send you an email when Standard Cabs - Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Standard Cabs - Tirunelveli:

Share

Category