28/11/2017
நீங்கள் அறிந்திராத ஐயப்பன் பற்றிய தகவல்கள் !
ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள் உங்களுக்காக !!

🌷 சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🌷 ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
🌷 சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
🌷 சபரிமலையில் ஜனவரி மாதம் மண்டல பு+ஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பு+ஜை செய்வார்கள். இதற்கு குருதி பு+ஜை என்று பெயர்.
தமிழகத்தின் பாரம்பரிய சுவை உங்கள் இல்லம் தேடி.... நம்ம ஊரு வெப்சைட் யேவiஎந ளுpநஉயைட (நேட்டிவ் ஸ்பெஷல்)-ல்.
இங்கே க்ளிக் செய்து உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செய்யுங்கள்!

🌷 சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
🌷 சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.
🌷 பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.
🌷 திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என்பதைப் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.