17/05/2020
சுற்றுலா வாகன தொழிலை முடக்கப் பார்க்கிறதா?
மத்திய,மாநில அரசுகள்,
இந்த ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு அறிவித்த மூன்று மாத தவணை தள்ளி வைப்பு ஒரு நாடகம்,
மே 31 வரை ஊரடங்கு நீடிப்பு,வாகனங்களை ஓட்ட முடியாது,ஜூன் மாதம் முதல் வாரத்தில் எப்படி தவணை செலுத்துவது???
ஓடாத வாகனத்திற்க்கு எதற்காக இன்சூரன்ஸ்???
வாகனம் ஓடாத காலத்திற்கான இன்சூரன்ஸ் தேதியை நீட்டித்து கொடுங்கள்,
ஓடாத காலத்திற்க்கு எதற்க்கு சாலை வரி???
சாலை வரியை ரத்து செய்யுங்கள்,
வெளி மாநிலத்திற்கு செல்லும் வாடகை வாகனங்களுக்கு epass கொடுக்கப்படுவதில்லை, கொடுத்தாலும் ஒரு சில வாகனங்களாவது ஓடும்,
இப்போது அதற்க்கும் வழி இல்லை,
அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் அளித்த மத்திய அரசு எங்களை கண்டு கொள்ள வில்லை,
சுற்றுலா வாகன தொழிலை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஓப்படைப்பதாக இருந்தால் எங்களுடைய வாகனங்களை நீங்களே நல்ல விலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்கிறோம்,
இதற்க்கு மேலும் சுற்றுலா வேன் உரிமையாளர்கள் ஒன்று படாவிட்டால் நம்முடைய தொழில் அதள பாதாளத்திற்க்கு சென்று விடும்,
நம்முடைய நெடு நாளைய கோரிக்கை 12+1 பர்மிட் 19+1 ஆக மாற்றிக் கொடுக்க எந்த அரசும் முன் வரவில்லை? எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையோடு சரி,வெற்றி பெற்ற பின்பு யாரும் நம்மை கண்டு கொள்வதில்லை,
ஆனால் நம்முடைய வருமானம் மட்டும் அரசுக்கு தேவை,
மே31 தேதிக்குள் நம்முடைய சுற்றுலா வாகனத்திற்க்கு ஏதும் நிவாரணம் அளிக்க விட்டால் ஜூன் மாதத்தில் நம்முடைய வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை.
இப்படிக்கு
தமிழ்நாடு ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்......