11/02/2025
*தைப் பூச தினமான,* செழிப்பான செவ்வாய்க்கிழமை தினமான இன்று உங்களுக்கு என் இனிய காலை வணக்கம் 🙏🙏💐🙏
நம் இறைவன் ஒருவனே அவர் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*
அளவிலாக் கருணை இணையில்லா பேராற்றல் கொண்டுள்ளார் அவர் அருளை பெற நாம் அனைத்து *உயிர்களிடத்தில் தயவு கருணை* கொண்டு வாழ்வோம்
காற்றையும், மழையையும்,பூகம்பத்தையும் எதிர்த்து அஸ்திவாரம் வீட்டைக் காப்பது போல் *இறைவா அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளே* நீ எங்கள் மனத்துக்குள் இருந்து எங்களை காப்பாற்றுவாயாக.
*ஔவையாரின் கொன்றை வேந்தன்*
*மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.*
( ஆன்றோர், கற்றறிந்தோர் சொல்லும் நீதி மொழிகள் அமிர்தம் போன்று மேலானவை.)
*இன்றைய திருக்குறள்.*
பொருட்பால் - அமைச்சியல்
அதிகாரம் 71
திருக்குறள் 706
*அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்*
*கடுத்தது காட்டும் முகம்.*
பொருள்.
தன்னை அடுத்திருக்கும் ஒரு பொருளின் உருவத்தை தன்னிடம் காட்டும் பளிங்குபோல் ஒருவர் நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவருடைய முகம் தெளிவாகக் காட்டி விடும்.
நாள்தோறும் சொல்வோம் நலம் தரும் மந்திரம் நமக்கு நன்மை பயக்கும் மந்திரம் இல்லற வாழ்வில் இன்பம் தரும் மந்திரம் *திருவருட் பிரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்து அருளிய மகா மந்திரம்.*
*அருட்பெருஞ்ஜோதி 🔥🔥அருட்பெருஞ்ஜோதி🔥🔥 தனிப்பெருங்கருணை❤️❤️ அருட்பெருஞ்ஜோதி
🔥🔥
நமக்கு
*இந்த நாள் இனிய நாள்.*
( குரோதி வருடம் *வள்ளலார் வருவிக்கவுற்ற ஆண்டு 202* *தை மாதம்* 29ம் நாள் 11/02/2025 செவ்வாய்க்கிழமை *தைப் பூசம்* )
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க*
*வாழ்க இவ் வையகம் வாழ்க வளமுடன்.*
எங்கள் இறைவா எந்த பிரச்சனையும் எமை அணுகாமலும் கவலைகளால் கலங்காமலும் துன்பங்களை கண்டு துவளாமலும் நின் பேராற்றலால் வெற்றி பெற வேண்டும் *அருட்பெருஞ்ஜோதி 🔥ஆண்டவரே நின் தாள் சரணம் சரணம்*🙏🙏🙏🙏
நாம் என்றென்றும்
*கடவுளிடம் பக்தி செலுத்துவோம் 🙏🙏🌻🌹மற்றவர்களிடம் அன்பு❤️❤️ செலுத்துவோம்.*
*வாழ்க🙌 இவ்வையகம் வளமுடன்.*❤️🙌♥️🌹🌻🙌❤️