01/11/2017
ஒரு புதிய முயற்சி! எம்மவகளின் பொருளாதாரத்தை நாங்களே உயர்த்திடுவோம் எனும் தொனிப்பொருளில் எனது #சிறிய பங்களிப்பு.
மட்டக்களப்பு வியாபார நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வியாபாரங்களை வெளி உலகிற்கு எடுத்துச்சொல்ல ஒரு டயரி! (அதாங்க டயரக்றி)
BATTICALOA INFORMATION DIRECTORY
#உங்கள் வியாபார நிறுவனங்கள் அது சிறிதோ பெரிதோ இந்த இணையத்தளத்தில் #இலவசமாக நீங்களே இணைத்துக்கொள்ளலாம்.
#தனி நபர் சேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம். (சமையல்/மேசன்/தச்சு/.. மற்றும் சட்டத்தரணி/வைத்தியர்/கணக்காளர்... இன்னும் பல)
சுற்றுலா நகரமான #மட்டக்களப்பிற்கு
ஒருநாளைக்கு குறைந்த பட்சமாக 4500 பேர் உள்வருவதாக தரவுகள் சொல்கின்றன.
இவர்களின் வியாபார தேவைக்கு உங்களை நாடி வர செய்திடுங்கள்.
இங்கே கூகிள் வரைபட உதவியும் வழங்கப்படுகிறது. உங்கள் வியாபாரத்தினை அடுத்த டிஜிட்டல் உலகத்திற்கு நகர்த்திடுங்கள்.
எங்கள் முதல் முயற்சி வெற்றியளிக்க உங்கள் பங்களிப்பும் அவசியமாகிறது.
எப்படி என்றால் சாதாரணமாக ஒரு கிராமத்தில் ஒரு மூலையில் ஒரு கணவனை இழந்து தன் குடும்பத்தை தனது ஒற்றை வருமானம் மூலம் #தையல் தொழில் நடத்தி கொண்டிருப்பவர் மிக அழகாக #தையல் வேலைப்பாடுகள் செய்வார்.
ஆனால் அவரை மற்றய தெருவுக்கு தெரியாது. அவருக்கு சிமாட் போனும் கிடையாது.
நீங்கள் உதவலாம்.
அவரின் தொழில், வேலைப்பாடுகள் சம்பந்தமான விபரத்தையும் இடம், மற்றும் தொடர்புகளையும் இணைத்துவிட்டீர்களானால் அவரின் மேலதிக வருமானத்திற்கு நீங்கள் செய்யும் மறைமுக உதவியாகும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் தேவையாக உள்ளது.
இந்த இணையத்தளத்தின் அடிப்படை #சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டதுடன் எமது சிறிய வர்த்தகங்களையும் இதனுடன் இணைத்திருக்கிறேன்.
ஏனெனில் ஒருவர் வேறு ஒரு தேவைக்காக வர்த்தகங்களை தேடும் போது அதனுடன் இணைந்த பிற வர்த்தகங்களையும் அவருக்கு காண்பிக்கும்.
இயன்ற வரை பகிருங்கள். ஒரு மாற்றம் ஏற்படுத்திவிடுங்கள்.
www.ebatticaloa.com
தொழிநுட்ப உதவிகளுக்கு 0776528070
Explore places to visit in Batticaloa Sri Lanka. Have a quick overview about the places destinations before you visit. Check the map, photos and reviews.