20/08/2026
@ Vidiyal
@ vidiyal
அல்ஹம்துலில்லாஹ்...! ‘மன்னர் அப்துல்
அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப்
போட்டியில்’ இலங்கை மாணவன் வெற்றி
---------------------------------------
புனித மக்கா நகரில் இடம்பெற்ற 46ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் - குர்ஆன் மனனப் போட்டியில்’ இலங்கை மாணவன் அல் - ஹாபிழ் எம்.ஐ. முஹம்மத் இம்தாத் வெற்றியீட்டி 55,000 சவூதி ரியல்களை (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக பெற்றுக்கொண்டார்.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் தஃவா அமைச்சினால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் 5ஆம் பிரிவில் 3ஆம் இடத்தினை இவர் பெற்றுக்கொண்டார்.
கண்டி கல்கின்னையைச் சேர்ந்த இம்தாத், ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவராவார்
இந்த வெற்றி, இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் கிடைத்த ஒரு கெளரவமுமாகும்.
இலங்கையில் புனித அல் குர்ஆன் மனனத்திற்கான எழுச்சியினை இந்த வெற்றி காட்டி நிற்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய இணைந்து 3ஆவது தடவையாக கடந்த ஜனவரியில் நடாத்திய தேசிய அல் - குர்ஆன் மனனப் போட்டியில் இந்த மாணவன் இரண்டாம் பிரிவில் முதலிடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-கலாநிதி அம்ஜத் ராசிக் மதனி-