05/07/2025
paste # for awareness
வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்தினூடாக வரும் நபர்கள் சிகரட், பணம், மதுபானம் கொண்டுவர முடியுமா?
❌ Ci******es at Arrival
வெளிநாட்டில் duty-free shop களில் சிகரட்கள் விற்கப்படுவதால் நம்மவர்கள் அதை வாங்கிக்கொண்டு இங்கு வருகிறார்கள். அவர்களது ஆதங்கம், வெளிநாட்டு duty-free shop களிலும் விற்கலாம் என்றால், உள்நாட்டிலும் சிகரட் தடை இல்லை என்றால் ஏன் கொண்டுவர முடியாது என்பது.
National authority on To***co and Alcohol Act, மற்றும் சுங்க கட்டளைச்சட்டத்தின்படி (பிரிவு 12,43,107A(1)) வெளிநாட்டிலிருந்து சிகரட் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு, அவை பறிமுதல் செய்யப்படுவதோடு சிலவேளை தண்டப்பணமும் விதிக்கப்படலாம்.
இவற்றை தெரியாமல் கொண்டுவந்தாலும், அவை பறிமுதல் செய்யப்படும். இவை அறியாத சிலர் விமான நிலையத்தில் முரண்டு பிடிப்பதையும், வீண் விதண்டாவாதம் புரிவதையும் சில நேரம் காணலாம். அண்மையில் ஒருவர் கொண்டுவந்த சிகரட்டை சுங்க அதிகாரிகளின் முன்னிலையில் காலின் கீழ் போட்டு மிதித்தமையால், அவர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார் என்பது மேலதிக தகவல்.
❌ Ci******es at Departure
ஆனால் வெளிநாட்டுக்கு செல்லும்போது எமது விமான நிலையத்திலுள்ள duty-free shop களில் (departure area duty-free shops) வேண்டிய அளவு சிகரட்களை வாங்கிக்கொண்டு செல்லலாம்.
❌ Foreign Liquors at Arrival
2.5 லீட்டர் மதுபானங்கள், 2 லீட்டர் வைன் களை வெளிநாட்டிலிருந்து / duty-free shop களிலிருந்து கொண்டுவர/ வாங்கி வர முடியும் (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு).
❌ Foreign Liquors at Departure
விமான விதிமுறைகளின்படி 5லீட்டர் மதுபானங்களை கொண்டு செல்லலாம்
❌ Foreign & Local Currencies at Arrival
USD 15,000/- பெறுமதிக்கு மேலான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கைக்கு கொண்டுவரும்போது, அவற்றை கட்டாயம் சுங்கத்தில் பிரகடனப்படுத்த (declare) வேண்டும். நாணயத்தாள்களை மீள வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லும் நோக்கமிருந்தால் USD 10,000/- பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களையும் declare பண்ண வேண்டும்.
❌ Foreign & local Currencies at Departure
வெளிநாடொன்றுக்கு செல்லும்போது, USD 10,000/- பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும். இலங்கை தாணயத்தாள்களாயின் Rs. 20,000/- மட்டுமே கொண்டு செல்ல முடியும். இதற்குமேல் கொண்டு சென்றால், அவை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படும்.
எனவே வெளிநாட்டிருந்து வருபவர்கள், வெளிநாடு செல்பவர்கள் இவற்றை கவனமாக பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
DISCLAIMER: இப்பதிவு சுங்கத்தின் உத்தியோகபூர்வ பதிவாக கொள்ளப்படலாகாது
ஆதம்பாவா ஜலீல்
05-07-2025