08/06/2026
https://www.facebook.com/share/p/1CtcC5A6yj/
2026.05.28 වන දින කළුතර දකුණ පොලිස් වසමේ වෙට්ටුවකඩේ කලිල් ප්රදේශයේදී කාර් රථයකින් පැමිණි පිරිසක් විසින් යතුරුපැදියකින් ගමන් කරමින් සිටි පුද්ගලයෙකුට වෙඩිතබා ඝාතනය කිරීමේ අපරාධය සම්බන්ධයෙන් කළුතර දිසා අපරාධ කොට්ඨාසයෙ මගින් විමර්ශනයක් ආරම්භ කර තිබිණි.
ඒ අනුව එම කොට්ඨාසයේ නිලධාරීන් කණ්ඩායමක් විසින් 2026 ජූනි 07 වන අද දින උදෑසන වැලිපැන්න පොලිස් වසමේ වලගෙදර ප්රදේශයේදී අපරාධයට ආධාර අනුබල දුන් සැකකරුවෙකු අත්අඩංගුවට ගෙන කළුතර දකුණ පොලිස් ස්ථානයට ඉදිරිපත් කර ඇත.
සැකකරු වයස අවුරුදු 36 ක් වූ හම්බන්තොට ප්රදේශයේ පදිංචිකරුවෙකි.
සැකකරු සම්බන්ධයෙන් සිදු කරන ලද වැඩිදුර විමර්ශනයේදී මතුගම, කළුතර තිස්සමහාරාම, වලස්මුල්ල හා මොරවක ගරු මහේස්ත්රාත් අධිකරණ මගින් වරෙන්තු නිකුත් කර සිටින අයෙකු බවට අනාවරණය වී ඇත.
මෙම ඝාතනයට ආධාර අනුබල දීම සම්බන්ධයෙන් කාන්තාවක් ඇතුළු සැකකරුවන් තිදෙනෙකු සහ වෙඩි තැබීම සඳහා පැමිණි මෝටර් රථයේ රියදුරු මීට පෙර අත්අඩංගුවට ගැනිණි. ඔවුන් කළුතර ගරු මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් පසු ලබන 2026 ජූනි 15 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාර ගත කර ඇත.
සිද්ධියේ වෙඩික්කරු ලෙස ක්රියාකළ සැකකරු පසුගිය 2026 ජූනි 03 වනදා අත්අඩංගුවට ගෙන ගරු අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් පසු, දින 7ක රැඳවුම් නියෝග මත තබාගෙන ප්රශ්න කරමින් තිබිණි.
රැඳවුම් භාරයේ සිටි වෙඩික්කරු සහ අද දින අත්අඩංගුවට ගත් 36 හැවිරිදි සැකකරු යන දෙදෙනාම 2026 ජූනි 08 දින කළුතර ගරු මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතව ඇත.
කළුතර දකුණ පොලිස් ස්ථානය මඟින් වැඩිදුර විමර්ශන සිදු කරනු ලබයි.
------------------------------
2026.05.28 அன்று, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுவகடே கலில் பகுதியில், காரில் வந்த குழுவினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக களுத்துறை பிராந்திய குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்திருந்தது.
அதனடிப்படையில், அந்தப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் 2026 ஜூன் 07 அன்று காலை, வெலிப்பென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகெதர பகுதியில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய, ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலதிக விசாரணைகளில், இவர் மத்துகமை, களுத்துறை, திஸ்ஸமஹாராம, வலஸ்முல்ல மற்றும் மொரவக நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் எனவும் தெரியவந்துள்ளது.
இக் கொலைச் சம்பவத்திற்கு உதவி செய்ததற்காக ஒரு பெண் உட்பட மூன்று சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த காரின் சாரதி முன்னதாகவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 2026 ஜூன் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் 2026 ஜூன் 03 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்துள்ளார்.
தடுப்புக்காவலில் இருந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் இன்று கைது செய்யப்பட்ட 36 வயது சந்தேகநபர் இருவரும் 2026 ஜூன் 08 அன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
---------------------------
The Kalutara District Crime Division has launched an investigation into the fatal shooting of a motorcyclist by a group of individuals who arrived in a car in the Kalil area of Wettuwakade, within the Kalutara South Police Division, on 28.05.2026.
As part of the ongoing investigation, a team of officers from the division arrested a suspect believed to have aided and abetted the crime in the Walagedara area of the Welipenna Police Division on the morning of 07.06.2026. The suspect was subsequently handed over to the Kalutara South Police.
The arrested individual is a 36-year-old resident of the Hambantota area.
Further inquiries revealed that warrants had been issued against the suspect by the Magistrate’s Courts of Mathugama, Kalutara, Tissamaharama, Walasmulla, and Morawaka.
Earlier, three suspects, including a woman, as well as the driver of the vehicle allegedly used in the commission of the shooting, were arrested for assisting and facilitating the murder. After being produced before the Kalutara Magistrate’s Court, they were remanded until 15.06.2026.
The alleged gunman involved in the shooting was arrested on 03.06.2026 and produced before court. He is currently being interrogated under a seven-day detention order.
Both the suspected shooter, who remains in custody, and the 36-year-old suspect arrested on 07.06.2026 are scheduled to be produced before the Kalutara Magistrate’s Court on 08.06.2026.
Further investigations are being carried out by the Kalutara South Police.